Daily Archives: ஜூன் 12th, 2018

கிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா?

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரெட் கார்டு மூலம்  பொருள்கள் வாங்கி, அந்தத் தொகையைச் சுமார் 45 நாள் களுக்குள் கட்டி விட்டால், வட்டி எதுவும் கிடையாது என்பதே இந்த அதிகரிப்புக்கான முக்கியக் காரணம். அதேநேரத்தில், தவறும் பட்சத்தில் ஆண்டுக்குச் சுமார் 35-45% வட்டி கட்ட வேண்டி வரும். 

Continue reading →

லட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா!

றுபது வயதைத் தாண்டியபிறகுதான், வாழவேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது. 50 வயதைத் தாண்டியபிறகுதான் பணத்தின் அருமையே பலருக்கும் புரிய ஆரம்பிக்கிறது. ஆனால், கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்? இந்த உண்மையை இன்றைக்கு 20 வயதுள்ள இளைய சமுதாயத்தினர் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், 60 வயதைத் தாண்டியபின் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்கிற ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கு மேலும் நீளும் வாழ்வுக்குத் தேவையான காசு கையில் இருக்கவேண்டியது கட்டாயம்.

மகிழ்ச்சிக்கான ஃபார்முலா

Continue reading →

பார்வைக்கோளாறுகள் போக்கும் முருங்கைப்பூ

முருங்கை நிறைய மருத்துவக் குணங்களைக்  கொண்டது.  குறிப்பாக, முருங்கைப் பூ மகத்துவமானது.
* முருங்கைப் பூ , பித்தத்தைக்  குறைத்து, உடல் அசதியைப் போக்கிப் புத்துணர்ச்சி தரக்கூடியது. அதில், கால்சியம், பொட்டாசியம், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டு மற்றும்  ஃபிளேவனாய்டுகள் (Flavanoids) உள்ளன

Continue reading →

சந்தோஷ ஹார்மோன் 1-2-3-4-5

செரடோனின்… இதை, `மகிழ்ச்சியளிக்கும் ஹார்மோன்’ என்றும் சொல்வார்கள். பதற்றம், அமைதியின்மை, சோர்வு, மனநலக் குறைபாடு, எதிர்மறை எண்ணங்கள், கிளர்ச்சி, வெறி, தூக்கமின்மை, இனிப்புகள்மீது அடங்காத ஆசை, அலட்சியம், அதிக மனஉளைச்சல், சோகம் போன்றவை செரடோனின் ஹார்மோன் குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள். இந்தக் குறைபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் செரடோனின் அளவை அதிகரிக்கச் செய்யும் ஐந்து எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

சரியாகச் சாப்பிடுங்கள்

Continue reading →

நம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்!

ஊர் என்றால் எப்படி அமையவேண்டும் என்பதற்கும், ஓர் ஆலயத்தை மையப்படுத்தி என்னென்ன நற்காரியங்கள் நிகழ்ந்தன என்பதற் கும் இலக்கணமாகவும் சாட்சிகளாகவும்  திகழ் கின்றன, எண்ணாயிரம் எனும் ஊரும் அங்கே அமைந்துள்ள ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயிலும்!

ஊரின் மையப் பகுதியில், சுமார் நான்கு அடி உயரமுள்ள பீடத்தின் மீது கருங்கல் கட்டுமானமாக, மிகப் பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீஅழகிய நரசிம்மர் திருக்கோயில். கோயிலுக்குள் பலி பீடமும், கொடி மரத்துக்கான கருங்கல் பீடமும் காணப்படுகின்றன.

எளிமையாகக் காட்சி தரும் முன்மண்டபத்தில், நம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம், காலம் கடந்தும் சிற்பக்கலைஞர்களின் கலைத் திறனைப் பறைசாற்றியபடி காட்சி தருகின்றன பல புடைப்புச் சிற்பங்கள்.

கோயிலுக்குள் நுழைந்ததுமே, அந்தக் காலத் திலேயே நம் முன்னோர்கள் செய்துவைத்திருக்கும் மழைநீர் சேகரிப்புக்கான அமைப்புகள் நம்மை வியக்கவைக்கின்றன. மேலும், கோயிலுக்குள் மழைவெள்ளம் புகுந்துவிடாதபடி அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் மழைநீர் வடிகால் வசதிகள், நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அந்தக் கட்டமைப்புகளுக்குள்ளும் ஏராளமான கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், பல புதிய தகவல்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

எண்ணியது நிறைவேறும்!

Continue reading →