Advertisements

பார்வைக்கோளாறுகள் போக்கும் முருங்கைப்பூ

முருங்கை நிறைய மருத்துவக் குணங்களைக்  கொண்டது.  குறிப்பாக, முருங்கைப் பூ மகத்துவமானது.
* முருங்கைப் பூ , பித்தத்தைக்  குறைத்து, உடல் அசதியைப் போக்கிப் புத்துணர்ச்சி தரக்கூடியது. அதில், கால்சியம், பொட்டாசியம், அமினோ அமிலங்கள், ஆல்கலாய்டு மற்றும்  ஃபிளேவனாய்டுகள் (Flavanoids) உள்ளன

* முருங்கைப்பூவை பால், ஏலக்காய் சேர்த்துக் கொதிக்கவைத்து  நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இல்லறம் சிறக்கும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* முருங்கைப்பூவை பாலில் வேகவைத்துச் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்; நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்; ஆண்மை சக்தி அதிகரிக்கும்; வெள்ளைப்படுதல் குணமாகும். கருப்பை வலுப்படும்.

* முருங்கைப்பூவை துவையல் செய்து சாப்பிடலாம். முருங்கைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

* முருங்கைப்பூவை நிழலில் உலர்த்திப் பொடித்துத் தேன் கலந்து சாப்பிட்டால் பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறிப் பார்வைக் கோளாறுகள் சரியாகும்.
* முருங்கைப்பூவைப் பசையாக அரைத்து  கைகால் வீக்கங்களுக்குப் பற்றுப் போட்டால் வீக்கம் குறையும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
* முருங்கைப்பூ ரசம் உடல் பருமனைக் குறைக்கும். சிறுநீரைப் பெருக்கி நீர்க்கட்டை அகற்றும். வயிறு உப்புசத்தைக் குறைக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: