Advertisements

கோடைக்காலக் கூந்தல் குறிப்புகள்

கோடைக்காலக் கூந்தல் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் சொல்கிறார், சென்னையில் உள்ள பேர்ள் பியூட்டி சலூனின் உரிமையாளர் முத்துலட்சுமி.

பொடுகு, அரிப்பு நீங்க…

கூந்தலில் வியர்வையினால் ஏற்படும் பிசுபிசுப்புத் தன்மை மற்றும் அதனுடன் சேரும் அழுக்குகள், அப்படியே உச்சந்தலையில் தங்கி பொடுகு, அரிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை துளசி, கறிவேப்பிலையைச் சம அளவில் எடுத்து அரைத்து ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழச் சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்துக் குளிக்கவும். 

பளபளக்க…

முடி உதிர்வு, வலுவிழந்த கூந்தல், நுனி முடிப்பிளவு,  கூந்தல் நிறமாற்றம் (செம்பட்டை) போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, தலைக்குக் குளித்த பிறகு, கடைசியாக மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கூந்தலை அலசவும்.

உறுதி பெற…

ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றைச் சம அளவில் எடுத்துக் கலந்து, லேசாகச் சூடுபடுத்தி, தலையில் தேய்த்து மசாஜ் செய்து, எட்டு மணிநேரம் கழித்துக் கூந்தலை அலசினால், கூந்தல் உறுதியாகி,  பளபளப்புடன் இருக்கும்.

வறட்சி நீங்க…

ஆலிவ் ஆயில், வைட்டமின் ஈ ஆயில், தயிர் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து ஹேர் பேக் போட்டு, அரை மணி நேரத்துக்குப் பிறகு கூந்தலை அலச, வறட்சி நீங்கும்.

உதிர்வது குறைய…

கைப்பிடி வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் அதனுடன் நுங்கின் சதைப்பகுதியைச் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதனால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது குறையும். மேலும், தினமும் இரவு கூந்தலைப் பெரிய பற்கள் கொண்ட சீப்பினால் சீவுவதன் மூலம் தலையில் சீபம் தானாகச்  சுரந்து கூந்தலை வறட்சியில் இருந்து காக்கும்.’’

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: