Daily Archives: ஜூன் 15th, 2018

புரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்

நாம் சாப்பிடும் உணவு, உள்ளே இறங்கும் போது, தவறான பாதையில் நுழைந்துவிட்டால், உள்ளிழுக்க வேண்டிய மூச்சு தடைபட்டு, திணறல் ஏற்படும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால், 40 வினாடிகளில் மயக்கம் ஏற்பட்டு, நான்கு நிமிடங்களில் மரணமே ஏற்பட்டு விடும். உடனடி மருத்துவ சிகிச்சை செய்து, உயிர் காப்பாற்றப் பட்டாலும், மூளையில் நிரந்தர பாதிப்பு ஏற்படும். சாப்பிடும் போது, இதுபோன்ற மூச்சுத்திணறலை பெரும்பாலானோர் சந்திக்கின்றனர்.
கண்கள் சிவப்பாகி, காற்றை உள்ளிழுக்கும் வகையில், வேகமாக மூச்சிழுப்பர். தொடர்ந்து, பெரிய அளவில் இருமல் ஏற்படும். பேச முடியாமல்,

Continue reading →

மொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. வீடியோ அழைப்புகளில் இனி குழுவாக இணைந்து அழைக்கும் வசதி குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மொபைலில்

Continue reading →

பெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்!

இன்று ஆங்கில மருத்துவம் அதிகமாகப் புழக்கத்தில் இருந்தாலும், சளி இருமலில் தொடங்கி இதயநோய் வரையிலும், ஆயுள் வரை நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பதும், இயற்கை மூலிகை மருத்துவம் தான். அந்த வகையில் பெண்களின் பேறு காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் கொடுக்கப்படும் கஷாயங்களில் முக்கிய இடம் பெறுபவை இவை தான். வேந்தரம் கஷாயம், தசமூலாரிஷ்டம், ஜிரகரிஷ்டம் போன்ற இந்த மூலிகை தயாரிக்க முக்கியப் பங்காற்றுவது சுண்ட செடி வேர், பழம்பாசி வேர் எனும் இரண்டு வேர்கள்.

Continue reading →

தினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்!

ண்ணா திராவிடர் கழகம்’ என்று அதிரடியாக புதிய கட்சியைத் தொடங்கிய திவாகரன், அடுத்த அதிரடியாக தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை ஒட்டுமொத்தமாக வளைக்கப்போகிறார் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்.
அரசியலில் பரபரப்பான செய்தி வரும் என்று கூறிவந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி ‘அம்மா அணி’யைத் தனிக் கட்சியாக அறிவித்தார் திவாகரன். ‘நிழல் நிஜமாகிறது’, ‘வருங்காலத் தமிழகமே’ என்று திவாகரனின் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

Continue reading →

நிலப் பிரச்னைகள் நீங்கும்!

மரக்காணம் பூமீஸ்வரர் திருக்கோயில்

பூமிக்கு அடியில் பரவியிருக்கும் நீர் ஊற்றுக்கண் வழியாக வெளிப்படுவது போல், எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் திருவருள் கடாட்சம் நமக்காக வெளிப்படும் இடம் திருக்கோயில்கள். நம் மனதைச் செம்மைப்படுத்தி, செயல்களைச் சிறப்பாக்கி வாழ்வைப் புனிதமாக்கும் வல்லமைகொண்டவை ஆலயங்கள்.

எனவேதான், நம் தேசத்தை

Continue reading →