இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்!

இன்ஸ்டாகிராம் செயிலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்கள் வந்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இளசுகளுக்கு தகுந்தபடி புதிய அம்சத்தை சேர்த்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம். அதன்படி இன்ஸ்டாகிராம வலைதளத்தில் அதிக நேரம் ஓடும் வீடியோவை பதிவிடும் வசதி விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி.! மேலும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தற்சமயம் வரை வெறும் 60 விநாடிகளே ஓடும் வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். இது பயனர்களுக்கு எப்போதுமே மிகப் பெரிய ஏமாற்றமாகவே இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலப் பத்திரிகை:

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட அறிக்கையில் இண்ஸ்டாகிராமில் ஒரு மணி நேரம் ஓடும் வீடியோக்களை பதிவிடும் வசதியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் விரைவில் சேர்க்கும் என்று தெரிவித்துள்ளது. எனவே இந்த செய்தி இன்ஸ்டாகிராம் பயனாளர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

800 மில்லியன்:

இன்ஸ்டாகிராம் சுமார் 800 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது, குறிப்பாக அதிக நேர வீடியோக்களை பதிவு செய்தும் இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாப்பிங் ஷாப்பிங் தற்சமயம் இந்த செயலியில் ஷாப்பிங் செய்வதற்கான வசதி ஃபீட்களில் இருந்து ஸ்டோரீகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சம் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் தெரியும் சிறிய ஷாப்பிங் பேக் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட பொருளின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரென்ட் :

மேலும் உலகின் பல்வேறு பிரபல முன்னனி பிரான்டு பொருட்களை பயனர்கள் இனி இன்ஸ்டாகிராம் ஸ்டோரீக்களில் ஷாப்பிங் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஸ்டைல் மற்றும் டிரென்ட் சார்ந்த விவரங்களை எளிதாக அறிந்து கொள்வே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபீட் போஸ்ட்:

இதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் வந்த புதிய வசதி என்னவென்றால் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். குறிப்பாக ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். மேலும் அதன்படி செய்தால் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் எளிமையாக தெரியும்

%d bloggers like this: