நான் காரணமில்லை!

கொழுக் மொழுக்’கென இருக்கும் குழந்தைகளைப் பார்த்தால், ‘பால், சீஸ், வெண்ணெய், பனீர் எல்லாம் குழந்தைக்கு கொடுக்காதீங்க; உடம்பு, ‘வெயிட்’ போடும். அப்புறம், 15 வயதிற்கு மேல், வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பர். வெயிட்டை குறைக்கவே முடியாது’ என்று சொல்வதைக் கேட்டிருப்போம். பால், பால் பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற அபிப்ராயம் இருக்கிறது.

கடந்த, 27 ஆண்டுகளாக, ஐரோப்பாவில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியில், குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதில், பாலுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 200 மி.லி., பாலில், வளரும் குழந்தைகளின் எலும்பு வலிமைக்கு தேவையான கால்ஷியம், தசைகளின் உருவாக்கம் மற்றும் சீரமைப்பிற்கு அவசியமான புரதம், ரத்த அழுத்தத்தை சீராக வைக்க பொட்டாஷியம் மற்றும் அயோடின், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ, பி, பி2, பி12, ரிபோபுளோவின் உள்ளது. எனவே, குண்டு குழந்தைகளுக்கும் தேவையான அளவு பால் மற்றும் பால் பொருட்களை தினமும் கொடுக்கவும்.

%d bloggers like this: