வீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்!

ரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ என்கிற நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் இலக்கை நிறைவேற்ற மத்திய வீட்டு வசதி அமைச்சகம் மற்றும் ஆர்.பி.ஐ இணைந்து செயல்பட்டு வருகிறது. அண்மையில், ஆர்.பி.ஐ, அதன் நிதி மற்றும் கடன் கொள்கை தொடர்பாக நடத்திய கூட்டத்தில், மெட்ரோ நகரங்கள் தவிர்த்த இதர நகரங்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன் தொகையை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் (PMAY) வட்டி மானியம் பெறும் வீடுகளுக்கான அளவை, நடுத்தர வருமானப் பிரி வினருக்கு (MIG) மத்திய அரசு 33% அதிகரித்துள்ளது. பி.எம்.ஏ.ஒய் திட்டத்தின்கீழ் பெறப்படும் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே சொந்த வீடு இல்லாத நிலையில், முதன்முதலாக வீடு வாங்க முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் மூலம் மானியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின்கீழ் ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய்ப் பிரிவினர்-I (MIG-I) என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய்ப் பிரிவினர்- II (MIG-II) என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரூ.9 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கும் பிரிவினர் – I, அதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு நான்கு சதவிகிதம் வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கும் பிரிவினர்-II மூன்று சதவிகித வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்த வர்கள் ஆவார். அதாவது, இவர்களுக் கான வட்டியில் இந்தச் சதவிகிதத்துக்கு வட்டித் தள்ளுபடி செய்யப்படும். 

இந்த வட்டி மானியம் பெறத் தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிவினர்-I வாங்கும் வீட்டின் கார்ப்பெட் ஏரியா (சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புறப் பரப்பளவு) 120 சதுர மீட்ட ராகவும் (1,292 ச.அடி), பிரிவினர்-II வாங்கும் வீட்டின் கார்ப்பெட் ஏரியா 150 சதுர மீட்டராகவும் (1,615 ச.அடி) இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப் பட்டு இருந்தது.
தற்போது, இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இதன் படி, பிரிவினர்-I வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர் வரையும் (1,722 ச.அடி), பிரிவினர்-II வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர் வரையும் (2,153 ச.அடி) இருக்கலாம். கார்ப்பெட் ஏரியா அதிகரிக்கப்பட்டதை அடுத்து 3, 4 படுக்கையறை கொண்ட வீடுகளைக்கூட இந்தத் திட்டத்தின்கீழ் கட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இன்னும் அதிகமானவர்கள் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியத்துக்கான சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னையில் வசிப்பவர்களுக்குக் கிடைக்குமா?
பி
ரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் தரப்படும் வட்டி மானியம், முதலில் கிராமப்புறங்களில் வீட்டுக் கடன் மூலம் வீடு கட்டுபவர்கள் அல்லது வீடு வாங்குபவர்களுக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, நகர்ப்புறங்களில் வசிப்பவர் களுக்கும் இந்த வட்டி மானியத் திட்டம் விரிவாக்கப்பட்டது. எனவே, சென்னையில் வீடு வாங்குபவர்களுக்கும் அவர்களின் வருமானத்துக்கேற்ப இந்தத் திட்டத்தின் மூலம் வீட்டுக் கடன் மானியம் வழங்கப்படும்!

%d bloggers like this: