Daily Archives: ஜூன் 20th, 2018

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு மதுரையில் எய்ம்ஸ்… தென்தமிழக மக்களுக்கு எந்த வகையில் உதவும்?

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தகவல் நேற்று இரவு வந்ததைத் தொடர்ந்து, தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை மக்களின் நீண்ட போராட்டத்துக்குப்பிறகு இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Continue reading →

தினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

Continue reading →

தையல் மிஷின்- பராமரிக்க உங்களுக்கு தெரியுமா?

*தையல் மிஷினை மாதமொருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன்  இயந்திரத்தில் உள்ள நூல், அழுக்கு,  தூசிகளை பிரஷ் கொண்டு எடுத்து விட வேண்டும்.
*தையல் மிஷின் டிராயரில் ஒரு பின்குஷனில் சில குண்டூசிகள், ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் போது  எடுத்துக் கொள்ளலாம்.

Continue reading →

நர்சரி ஆரம்பிப்பது எப்படி?

பொழுதுபோக்குத் தோட்டத்தையே வர்த்தக ரீதியான தோட்டமாக மாற்றுவதைப் பற்றியும் அதன் மூலம் ஓரளவு பணம் சம்பாதிப்பது பற்றியும் பார்த்தோம். இன்னொரு பக்கம் மொட்டை மாடியில் உள்ள இடத்தில் தோட்டம் அமைத்து, நாற்றங்கால்கள் வைத்து, நர்சரியாக நடத்தவும் முடியும். நாம் ஏற்கனவே தோட்டங்கள் அமைப்பதற்கான வங்கிக் கடன்கள் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். அதே வங்கிக் கடன்களை நர்சரி திட்டத்துக்கும் பெற முடியும்.
நர்சரி ஆரம்பிக்க அடிப்படையான விஷயங்கள் என்னென்ன? எத்தனை வேலையாட்கள் வேண்டும்? என்ன மாதிரியான பொருட்கள் கையில் இருக்க வேண்டும்? நர்சரி நிர்வாகம் தொடர்பான அறிவு… நர்சரி ஆரம்பிக்க விரும்புவோர் இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

Continue reading →

தூக்கம் ஏன் அவசியம்?

நாம் தூங்குகிறபோதும் நம் உடலின் உள்ளுறுப்புகள் தூங்குவதில்லை. நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்மைப் புதுப்பிக்கவும் தேவையான பல ஆச்சரியகரமான நடவடிக்கைகள் தூக்கத்தின்போதுதான் நடைபெறுகின்றன’’ என்கிறார் தூக்கத்திற்கான சிறப்பு மருத்துவர் ராமகிருஷ்ணன். அப்படி என்னதான் நடக்கிறது தூக்கத்தில்?

Continue reading →

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? – கண்டுபிடிப்பது எப்படி?

நெஞ்செரிச்சல், மாரடைப்பு… இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே… அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்கிறார்கள். நெஞ்செரிச்சல்

Continue reading →

மூலநோய்க்கு மருந்தாகும் முருங்கைக்காய்!

முருங்கை மரம், ‘கற்பகத்தரு’ என்று அழைக்கப்படுகிறது. அதன் எல்லாப் பாகங்களும் மனிதர்களுக்கு மருந்தாக, உணவாகப் பயன்படக்கூடியவை. குறிப்பாக முருங்கைக்காய்.

* முருங்கைக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, பி, சி மற்றும் நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை உள்ளன.

Continue reading →