Daily Archives: ஜூன் 21st, 2018

உக்காந்து வேலை பார்த்தது போதும்… இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க!" – ஆப்பிள் ஐடியா என்ன?

ஆப்பிள் நிறுவனம் புதுமை என்ற பெயரில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பது வழக்கம்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த வரைக்கும் அது உண்மையாகவே அப்படித்தான் இருந்தது. அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பையும் உலகம் உற்றுப் பார்க்கும். ஆனால், அவருக்குப் பின்னால் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளில் அப்படி ஒன்றையுமே எதிர்பார்க்க முடியவில்லை. சரி இருக்கும் இடத்திலாவது புதுமையைக் காட்டுவோம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு தகவல் சற்று வித்தியாசமானது. தனது பணியாளர்கள் அமரும் இடத்தில் கூட புதுமை செய்து பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ஆப்பிள்.

இருக்கையில் இருக்கும் சிக்கல்

Continue reading →

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு மனிதனின் உயரத்துக்கு ஏற்றவாறு, உடல் எடை இருக்க வேண்டும்’ என்பது மருத்துவ விதி. அதற்குமாறாக எடை கூடவோ, குறையவோ செய்தால் நோய்கள் தாக்கும் அபாயம் அதிகம். உடல் பருமன் அதிகரித்தவர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது முதல்  இயல்பான வேலைகளைச் செய்வது வரை எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம்.
`உடல் எடை எதனால் கூடுகிறது, எடை குறைக்க என்ன செய்ய வேண்டும், உடல் பருமனைப் பராமரிப்பது எப்படி…’ என்பதுபோன்ற கேள்விகளை உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணர்  அனிருத் ராஜ்குமாரின் முன் வைத்தோம்.

Continue reading →

வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு பிரச்னையை தீர்க்கும் மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். கொய்யா இலை, நாவல் இலை, வெண்டைக்காய், அத்திக்காய் ஆகியவை வயிற்றுப்போக்குக்கு மருந்தாகிறது. தொற்று கிருமிகள், அஜீரணம் போன்றவை வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு காரணமாகிறது. மேலும், முறையற்ற உணவு முறைகளாலும் வயிற்றுபோக்கு உண்டாகிறது. அதிமாக வயிற்றுபோக்கு ஏற்படும்போது நீர்ச்சத்து குறைந்து மயக்கம், வாந்தி, காய்ச்சல், குமட்டல் போன்றவை ஏற்படும்.

Continue reading →

கப்போ தெரபி

கலர் தெரபி, கப் தெரபி, களிமண் தெரபி இப்படி விதவிதமான தெரபிகள் வரிசையில் புதிதாய்ச் சேர்ந்திருக்கிறது கப்போ தெரபி (Kappo therapy).
ஜப்பானின் செங்கோகு நாகரீக காலத்தில் போர்களில் காயமடையும் ராணுவ வீரர்களுக்கு இந்த சிகிச்சையை அளித்து வந்துள்ளனர். ஜப்பானிய சாமுராய் ராணுவ கலைகளின் அடிப்படையில் பிறந்த கப்போ சிகிச்சையில் இரண்டு முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதில் சாப்போ எனப்படுவது எதிரிகளை தாக்குவதற்கும், அவர்களை அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு நேரெதிரான கப்போ வழிமுறையில் போரில் காயமடைந்த தன் நாட்டு வீரர்களை குணப்படுத்தி காப்பாற்றுகிறார்கள்.

Continue reading →

திருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்

3

ஆனி உத்திரம்: 20.6.18

தில்லைச் சிற்றம்பலமான சிற்சபைக்குள் இருக்கும் பிரணவ வடிவான பஞ்சாசன பீடத்தில் நடராஜப் பெருமான் முதன்மை மூர்த்தியாக விளங்குகின்றார். அவரது  இடப்பாகத்தில் அவருடைய ஆட்டத்தை வைத்த கண் வாங்காது பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பவளாகச் சிவகாமசுந்தரி எழுந்தருளியுள்ளார். நடராஜருக்கு  வலப்புறம் பின்புறச் சுவரில் சிதம்பர ரகசிய ஸ்தானம் உள்ளது. ரகசியத்திற்கு நேரே மேடையில் ஒரு முகலிங்கம் உள்ளது. நடராஜரின் பீடத்தில் இரண்டு சிறிய  பெட்டகங்கள் உள்ளன. ஒன்றில் மாணிக்கக்கூத்தரான ரத்தின சபாபதியும், மற்றதில் அபிஷேக

Continue reading →