Daily Archives: ஜூன் 22nd, 2018

ட்ரெட்மில் பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்ய வேண்டியவை, கூடாதவை!

* இதயச் செயல்பாடுகள் சீராகும். ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்களுக்கு, அந்தப் பிரச்னை தீரும்.

* ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும்.

* ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது.

* ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல… உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

கவனம்!

Continue reading →

ரத்தச்சோகை ஏற்படுவது ஏன்? அறிகுறிகள், தீர்வுகள்!

இந்தியாவில் கருவுற்றிருக்கும் பெண்களில் 34.6 சதவிகிதம் பேருக்கு ரத்தச்சோகை இருக்கிறது; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 48.5 சதவிகிதம் குழந்தைகளுக்கு ரத்தச்சோகை; பொதுவாகவே 32.7 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது’ என்கிறது டி.எல்.ஹெச்.எஸ்-4 ஆய்வு (DLHS-4 SURVEY). ஆனாலும் இது குறித்த விழிப்பு உணர்வு பரவலாக இல்லை. குழந்தை பிறக்கும்போது, இதன் காரணமாக இறக்கும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகம். ரத்தச்சோகை, அதை தவிர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் மருத்துவர் புவனேஸ்வரி.

ஹீமோகுளோபின் (Hemoglobin)

Continue reading →

வாட்ஸ்அப்பில் வந்துவிட்டது க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதி!

இனி, வாட்ஸ்அப்பில் செய்யலாம் குரூப் வாய்ஸ் கால். அது மட்டுமல்ல, வீடியோ காலும்தான். மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அப்டேட், இப்போது வெளியாகியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் தளத்தில் மட்டுமே இது இயங்குகிறது. இந்த அப்டேட்டை நீங்கள் பெறவேண்டும் என்றால், உங்கள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளலாம்.

Continue reading →

தி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வை கழற்றிவிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சகித் தலைவர் திருமாவளவனை டெல்லி வரவழைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இப்போது நடிகர் கமல் ஹாசனை வரவழைத்துப் பேசியிருப்பது இதனை உறுதி படுத்தியுள்ளது. 
Continue reading →

Mind…Body…Soul…நல்லன எல்லாம் தரும்!–யோகா

யோகாவின் அருமை, பெருமைகளைப் பற்றி இப்போதுதான் பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். விஞ்ஞானப்பூர்வமான அஷ்டாங்க யோகா என்பது நமது இந்தியா உலகுக்கு அளித்த சாகாவரம்! யோகா என்பது உடலை, மனதை, உள்ளத்தை ஒருங்கிணைத்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து, அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்கிறது. அத்துடன் சமுதாயத்தோடு ஒற்றுமையாக, அமைதியாக வாழச் செய்து, உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தை அன்பளிக்கிறது. Continue reading →

பலன் தரும் ஸ்லோகம் : (சகல நன்மைகளும் கிட்ட…)

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரம்மனாட
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட
குண்டலமிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை
முருகேசனாட ஞான சம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனியட்ட
பாலகருமாட நரை தும்பையறுகாட நந்திவாகனமாட நாட்டியப்
பெண்களாட வினையோட உனைப்பாட யெனைநாடி இது வேளை
விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே.
நடராஜப் பத்து.
பொதுப் பொருள்:
மான், மழு, நிலவு, கங்கை, சிவகாமியம்மை, திருமால், நான்மறைகள், நான்முகன், தேவர்கள், விநாயகப் பெருமான், இரு செவி குண்டலங்கள், தண்டை, புலித்தோல் ஆடை, குமரன், ஞானசம்பந்தர், இந்திராதி அஷ்டதிக்பாலகர்கள், நந்தியம் பெருமான், நாட்டிய மகளிரோடு எம் வினையோடி உனைப்பாட எம்மை நாடி இதுவே வேளை என்று ஆடி வருவாய் சிவபெருமானே! சிவகாமி நேசனே! எம்மைப் பெற்ற தில்லைவாழ் நடராஜனே!