Advertisements

தி.மு.க வை கழற்றிவிட திட்டம் : ராகுல் – கமல் சந்திப்பின் அதிர்ச்சி பின்னணி..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க வை கழற்றிவிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சகித் தலைவர் திருமாவளவனை டெல்லி வரவழைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இப்போது நடிகர் கமல் ஹாசனை வரவழைத்துப் பேசியிருப்பது இதனை உறுதி படுத்தியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகும், கருணாநிதியின் ஓய்வுக்கு பிறகும் தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை, வெற்றி இடமாக மாற்றிக்கொள்ள முடியுமா? என்ற எதிர்பார்ப்புடன் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக குதித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சியின் பெயரை அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கான வேலையில் துரிதமாக ஈடுபட்டுள்ளார். ஆனால், நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ந்தேதியே மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கிவிட்டார். தற்போது, கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே, கட்சியின் பெயரை இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்வதற்காக கமல்ஹாசன் விண்ணப்பித்து இருந்தார். இந்த புதிய கட்சி தொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருந்தால், எங்களிடம் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

ஆனால், ஆட்சேபனை எதுவும் வராத நிலையில், தேர்தல் ஆணைய அழைப்பின் பேரில் கமல்ஹாசன் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்றார். தேர்தல் ஆணைய பணிகளை முடித்துக்கொண்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை கடந்த 2 நாட்களாக கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ராகுல்காந்தி, “இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தோம்” என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கமல்ஹாசனின் இந்த டெல்லி விஜயம் தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்நோக்கப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெறவில்லை. இதனால், தேர்தலை தனித்தே சந்திக்க வேண்டிய சூழ்நிலை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இணைந்துகொண்டது. அந்த கூட்டணியே தற்போது வரை நீடித்துக்கொண்டிருக்கிறது.

ஆனால், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இருந்து குறைந்த அளவு தொகுதிகளையே காங்கிரசுக்கு ஒதுக்க தி.மு.க. திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள காங்கிரஸ் தரப்பு, இந்த முறை தமிழகத்தில் தனித்து தேர்தலை சந்திக்க விரும்பாமல், புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

அதற்கு அச்சாரமாகத்தான் ராகுல்காந்தி – கமல்ஹாசன் இடையே சந்திப்பு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை கையில் எடுத்திருப்பதால், அவர் பா.ஜ.க. பக்கமே சாய்வார் என்று இப்போதே ஆரூடம் கூறப்படுகிறது. 

அதனால், கமல்ஹாசன் காங்கிரசுடன் கைகோர்ப்பார் என்றும் தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட வேறு  சில கட்சிகளையும் இணைக்க பேச்சு வார்த்தை தொடங்க இருப்பதாக தெரிகிறது.

Advertisements
%d bloggers like this: