Daily Archives: ஜூன் 25th, 2018

இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீடு… எளிதாகப் பெற என்ன வழி?

ன்றைக்கும் நம்மில் பலருக்கும் இருக்கிற பெரிய சந்தேகம், நமக்குப்பின் நம் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான இழப்பீடு நம் குடும்பத்தினர் எளிதாகப் பெற முடியுமா என்பதுதான். இதில் சந்தேகமே வேண்டாம். ஒருவரது இறப்பு இயற்கையானதாக இருக்கும்பட்சத்தில் அவருக்கான இழப்பீட்டை அவரது குடும்பத்தினர் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்கிறார் எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டலப் பிரிவு மேலாளர் தாமோதரன். இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் இழப்பீட்டைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இனி…

`பாலிசிதாரரின் மரணத்துக்குப் பிறகு பாலிசியில் டெத் க்ளெய்ம் செய்வதற்கான நடைமுறை என்ன?

Continue reading →

கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு

சுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக் கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை மதிப்பில்லா வைரமே! Continue reading →

நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!

நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், ‘டி’ குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

வைட்டமின், ‘டி’ என்பது என்ன?

Continue reading →

குறுகிய காலக் கடன்கள்… கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

கையில் பணம் இல்லாத போது ஏற்படும் திடீர் செலவுகளைச் சமாளிக்க பலரும் வாங்குவது கடன்தான். தொகை பெரிதோ அல்லது சிறிதோ, கடன் வாங்கி அப்போதைய அவசரத்தை சமாளித்துவிடுவதுதான் பலருக்கும் இன்று வாடிக்கையான விஷயமாக ஆகிவிட்டது.

கடன் பலவகை என்றாலும், அவற்றை குறுகிய காலக் கடன், நீண்ட காலக் கடன் என்று பிரிக்க லாம். உதாரணமாக, ஒருவர் நீண்ட கால அடிப்படையில் எளிதான தவணை மூலம் வீடு வாங்க விரும்பு கிறார் எனில், அவருக்கு வீட்டுக் கடன்மூலம் கடன் பெறுவதே சிறந்ததாக இருக்கும். ஆனால், ஒருவர் தனது  பிசினஸில் ஏற்படும் திடீர் செலவுகளை சமாளிக்கக் குறுகிய காலக் கடனை வாங்குவதே சரியாக இருக்கும். 

Continue reading →

வாடகை ஒப்பந்தமும், குத்தகை ஒப்பந்தமும்..! கவனிக்க வேண்டிய வித்தியாசம்!

வாடகை மற்றும் குத்தகைக்கு விடுபவர்களும் சரி, அதை ஏற்றுக்கொண்டு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத் திடுகிறவர்களும் சரி, அது குறித்த சட்ட விழிப்பு உணர்வு பெரிய அளவில் இல்லை. இதனால்தான், இன்றைக்கு பல ஒப்பந்தங்கள் வழக்குகளாக மாறி, நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஒப்பந்தம் (Contract) போடும்போது பல பிரச்னைகள் எழுகின்றன. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, இவற்றை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொள்வது அவசியம்.

Continue reading →

வருகிறது மேலவை… நுழைகிறது பி.ஜே.பி! – டெல்லி நெக்ஸ்ட் பிளான்

ழுகார் வந்ததுமே அலுவலக நூலகத்துக்குள் போனார். பழைய ஜூ.வி ஃபைல்களுடன் வந்தவர், ‘‘தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. சட்டமன்ற அலுவலகத்தில் சீனியர் அதிகாரிகள் சிலர் இதற்காகத் தனியாக உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், அநேகமாக இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘சட்ட மேலவையை மீண்டும் அமைப்பதற்கான மசோதா’ அறிமுகம் செய்யப்படலாம்’’ என்றார்.
‘‘அவ்வளவு வேகமாகவா வேலை நடக்கிறது?’’

Continue reading →

எலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? இதை வாசிங்க தெரியும்…

* எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, C, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது
Continue reading →