கண்ணிமை சீழ்க்கட்டி: கண்ணிமையில் கொப்புளம் அல்லது வீக்கம் 

கண்ணிமை சீழ்க்கட்டி என்பது என்ன? (What is a stye?)

கண்ணிமையின் ஓரத்தில் தோன்றும் கொப்புளம் அல்லது பரு போன்ற வலி மிகுந்த கட்டியே கண்ணிமை சீழ்க்கட்டியாகும். இந்தக் கட்டிகள் கண்ணிமையின் வெளிப்பரப்பிலும் தோன்றலாம், ஆனால்

கண்ணிமையின் உட்பரப்பிலும் வரக்கூடும். இதனை ஹோர்டியோலம் என்றும் குறிப்பிடுகின்றன. வழக்கமாக இவை ஒரு கண்ணில் மட்டும் உருவாகும், சில சமயம் இரண்டு கண்களிலும் உருவாகலாம், ஆனால் இவை பார்வையை பாதிப்பதில்லை.

கண்ணிமை சீழ்க்கட்டிகள் பொதுவான பிரச்சனையாகும். வாழ்நாளில் எல்லோருக்கும் ஓரிருமுறை இது வரலாம். பெரும்பாலும் இந்த கண்ணிமை சீழ்க்கட்டிகள் சில நாட்களில் தானாகவே சரியாக மறைந்துவிடும்.

காரணங்கள் மற்றும் ஆபத்துக் காரணிகள் (Causes and risk factors)

இவை உண்டாவதற்கான காரணங்கள்:

எண்ணெய் சுரப்பிகளில் ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியாவின் நோய்த்தொற்று

கண்ணிமைகளில் அழற்சி (ப்ளெஃபாரைட்டஸ்)

அறிகுறிகளும் அடையாளங்களும் (Signs and symptoms)

கண்ணிமைகளின் விளிம்பில் சிவப்பான, வலி மிகுந்த வீக்கம் காணப்படுவது கண்ணிமை சீழ்க்கட்டிகளின் முக்கிய அறிகுறியாகும்.

இவை இருக்கும்போது பின்வரும் அறிகுறிகளும் இருக்கலாம்:

திரவங்கள் வெளியேறுதல்

கண்ணீர் ஓட்டம் அதிகரித்தல்

கண்ணிமையில் வலி

கண்ணிமை மீது பக்கு உண்டாதல்

அரிப்பு

நோய் கண்டறிதல் (Diagnosis)

கண்களை ஆய்வு செய்வதன் மூலம் உங்கள் மருத்துவர் இந்தக் கட்டிகளை உறுதிப்படுத்த முடியும். இவற்றை உறுதிப்படுத்த குறிப்பிட்ட பரிசோதனைகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

சிகிச்சை மற்றும் தடுத்தல் (Treatment and prevention)

சிகிச்சை (Treatment)

இந்த கண்ணிமை சீழ்க்கட்டிகள் பெரும்பாலும் சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தானாகவே போய்விடும். சிகிச்சை எதுவும் தேவைப்படாது. கட்டிகளில் இருந்து சீழ் வெளியேற உதவுவதற்காக, வெளிப்புறம் இருக்கும் கட்டிகளின் மீது வெதுவெதுப்பான ஒற்றடம் கொடுக்கலாம். கட்டிகளால் மிகுந்த வலி இருந்தால் அல்லது நீண்ட நாட்கள் கட்டிகள் மறையாமல் இருந்தால் மட்டுமே சிகிச்சை தேவைப்படும்.

இவற்றுக்கு சிகிச்சையளிக்க உங்கள் மருத்துவர் ஆன்டிபயாட்டிக் சொட்டு மருந்து அல்லது ஆயின்ட்மெண்டுகளைப் பரிந்துரைப்பார். கண்ணிமையையும் தாண்டி பிற பகுதிகளுக்கு இவை பரவியிருந்தால், வாய்வழி எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.

கட்டிகள் மறையாவிட்டால், சிறு துளையிட்டு சீழை மருத்துவர் வெளியேற்றலாம். நீங்களே வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டாம்.

தடுத்தல் (Prevention)

கண்களில் நோய்த்தொற்றுகள் உருவாவதைத் தவிர்க்க:

சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதன் மூலமும் தேவைப்படும்போது ஹேன்ட் சேனிட்டைசர் (ஆல்கஹால் கொண்டவை) பயன்படுத்துவதன் மூலமும் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

பழைய அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றை பிறருடன் பகிர்ந்து பயன்படுத்த வேண்டாம்.

இரவு முழுதும் கண்களில் மேக்கப்போடு இருப்பதைத் தவிர்க்கவும்.

கான்டாக்ட் லென்ஸ்களை தோற்றுநீக்கம் (டிஸ்இன்ஃபெக்ட்) செய்த பிறகு பயன்படுத்தவும், அவற்றை அணியும்போது சுத்தமான கைகளால் கையாளவும்.

வெதுவெதுப்பான ஒற்றடம் கொடுத்தல் உதவியாக இருக்கலாம்

சிக்கல்கள் (Complications)

வழக்கமாக இவை தானாகவே மறைந்துவிடும். மிக அரிதாக அவற்றால் பின்வரும் சிக்கல்கள் ஏற்படலாம்:

கண்ணிமை வீக்கம் – கண்ணிமையில் அடைப்பு ஏற்படுவதால் கண்ணில் உண்டாகும் கட்டிகளாகும்.

பெரியார்பிட்டல் செல்லுலைட்டஸ் – இது கண்ணைச் சுற்றிலும் உள்ள திசுவில் ஏற்படும் அழற்சியாகும். நோய்த்தொற்று பரவுவதால் இப்படி ஆகலாம்.

அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)

இந்தக் கட்டிகள் 2 வாரங்களுக்குப் பிறகும் தானாகவே போகவில்லையெனில், மருத்துவரிடம் சென்று உங்களுக்குள்ள பிரச்சனைகள் குறித்துப் பேசவும்.

எச்சரிக்கை (Red Flags)

பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்:

வீக்கத்தால் கண்ணிமை மூடிக்கொள்வது

வீக்கத்திலிருந்து இரத்தம் கலந்த சீழ் வெளிவருவது

கண்ணிமை மீது கொப்புளங்கள்

இந்தக் கட்டிகள் மீண்டும் மீண்டும் உருவாதல்

மற்ற பகுதிகளுக்கும் வீக்கம் பரவுதல்

%d bloggers like this: