டேட்டிங் டிராவலில் இப்படியெல்லாம் நடந்துகொண்டால் பெண்களுக்கு பிடிக்குமாம்! டிப்ஸ்.

திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள டேட்டிங் செல்வது இப்போது சாதாரணமாக ஆகிவிட்டது. சில வீடுகளில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளட்டும் என விரும்புகிறார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் விவாகரத்து, சண்டை, சச்சரவு என குழப்பங்கள் வராது என நம்புகிறார்கள். அப்படி டேட்டிங்

செல்பவர்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு காஃபி ஷாப்பில் விலையுயர்ந்த கோல்ட் காஃபியோ, காப்பெசீனோவோ குடித்து வெட்டியாகவே பொழுதை கழிக்கிறார்கள். இதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிகிறதா என்றால் அதற்கான சந்தர்ப்பமே அமைவதில்லை என்பதுதான் உண்மை. சந்தர்ப்பம் எனும் சூழலில் எதிர்எதிர் தரப்பினருக்காக விட்டு கொடுப்பது என்பது ஒருபுறம் இருக்க, நடிப்பது என்பதுதான் மிகுதியாக இருக்கும். இந்த ஒரு நாள்தானே அட்ஜெஸ் செய்து கொள்வோம் என முடிவெடுத்து அவர்களுக்கு தகுந்தார் போல நடிப்பார்கள்.

பொதுவாக சமையல் செய்வது, அலுவலகம் செல்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற அன்றாட விஷயங்களில்தான் நம் வாழ்க்கை கழிய இருக்கிறது. இதைப்போன்ற செயல்களில்தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான உண்மையான அன்பும், அக்கறையும் வெளிப்படுகிறது. எனவே திருமணத்துக்கு முன்பு நமக்கு வரப்போகும் வாழ்க்கை துணை உலகத்தை எப்படி பார்க்கிறார், நம் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார், அன்பு செலுத்துகிறார் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்வது மிகவும் அத்தியாவசியமானது. இவற்றையெல்லாம் நீங்கள் ரெஸ்டாரண்ட்டிலோ, காஃபி ஷாப்பிலோ தெரிந்துகொள்வது எப்படி சாத்தியமாகும். ஆனால் ஒரு டிரெக்கிங் பயணம் இவற்றையெல்லாம் சாத்தியமாக்குவதுடன், உங்கள் காதலரை பற்றி நன்கு புரிந்துகொண்டு அற்புதமான குடும்ப வாழ்க்கைக்கு உங்களை அழைத்துச்செல்கிறது.

சுற்றுலாவின் போது ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்பது திருக்குறள். அவ்வொழுக்கம்தான் அனைத்துக்கும் மேல் என்கிறார் வள்ளுவர். இதுதான் நடைமுறை வாழ்க்கையிலும் பின்பற்றப்படுகிறது. நான் ஜோவியலானவன், கலகலப்பாக பேசுவேன் எனும் போர்வையில் அடுத்தவர்களின் மனதை குடைத்துக் கொள்ளும் வேலையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு பெண் அவரை வெறுத்துவிடுவார்.

டிரெக்கிங் பயணத்தில் ஒழுக்கம் என்பது ரொம்பவும் முக்கியமானது. அதாவது குறித்த நேரத்தில் பயணிப்பது, ஏற்பாடு செய்தது போல் நடந்துகொள்வது போன்ற ஒழுக்க நெறிகள் டிரெக்கிங் பயணத்தின்போது கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டியவை.

பெண்களிடம் வரம்பு மீறி பேசுவது, வழிந்து விழுவது ஒரு பெண்ணுக்கு பிடிக்காது. அதுவும் தன்னை கரம்பிடிப்பவன் அவ்வாறு இருந்தால் சுத்தமாக செட் ஆகாது என்று கூறிவிடுவார்கள். இந்த விசயம் பயணத்தின்போதும் நிச்சயமாக கடைபிடிக்கப்படவேண்டும்.

டிரெக்கிங் பயணம்

டிரெக்கிங் என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும் மலையேற்றம் எனும் வாக்கு பரவலாக நம்மில் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் தோழியுடன் அல்லது வருங்கால காதலி மனைவியுடன் டிரெக்கிங் செல்ல நேர்ந்தால் ஒன்றை கவனமாக வையுங்கள். அவர் உங்களை கட்டாயம் சோதிப்பார். சோதனையை சுலபமாக எண்ணி விட்டுவிடாதீர்கள். உங்களின் நேர்மையையும், துணிவையும் அவர் சோதிக்ககூடும்.

சாதாரண பிரச்னைக்குகூட சண்டை கோழியாக திமிருகிறீர்களா.. பிரச்னை என்றாலே பம்மி ஓடுகிறீரா என்றெல்லாம் சோதிக்கவாய்ப்புள்ளது. ஒருவேளை நீங்கள் துணிச்சலுடன் சண்டையிட்டால் நமக்கு எதுக்கு வம்பு, வீண் வம்புக்கு ஏன் போகுறீங்க.. இதான் உங்ககூட வெளிய வர்றது இல்லைனும் சொல்ல வாய்ப்பு இருக்கு. அது உங்க ஆளோட மென்டாலிட்டிய பொறுத்தது. நேரம் மனநிலை அறிஞ்சி தூள்கிளப்புங்க..

பழக்கவழக்கங்கள்

டிரெக்கிங் பயணத்தின்போது கூடாரம் கட்டி தங்குவது ஒரு இனிமையான அனுபவம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் மற்றவர்களுடன் சகஜமாக பழகுகிறாரா, அவர்களுடன் உரையாடி சந்தோஷமாக பொழுதை கழிக்கிறாரா என்று பார்க்க வேண்டும். அதை விடுத்து உங்களுடனே உங்கள் காதலர் ஒட்டிக்கொண்டு திரிந்தால் அதுவே பின்னாளில் ஒரு வலியாக மாறவும், காதல் குறைந்துபோகவும் காரணமாக அமையும்.

நேரமேலாண்மை

பக்ன்ச்வாலிட்டி எனப்படும் நேரத்தை சரியாக கடைபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு வேளை உங்கள் துணை நேர தாமதத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அதற்காக நீங்கள் தாமதப்படுத்த எண்ண வேண்டாம். வாழ்க்கையில் விட்டுக் குடுத்தல் சிறந்தது. பெரும்பாலான நேரங்களில் நாமேதான் விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முறை அவர் விட்டுகொடுக்கட்டும் என நீங்கள் இருந்தால் உங்க பாடு அவ்ளோதான்.

ஒத்துழைப்பு

இந்த பயணத்தின்போது எப்படி அவர் உங்களுடன் ஒத்துழைத்து செல்கிறாரோ அப்படித்தான் உங்கள் வாழ்க்கையிலும் ஒத்துழைப்பார் என உங்கள் துணையின் தோழிகள் நிச்சயம் ஏதாவது அறிவுரைக் கூறியிருப்பார்கள். அப்படி இல்லை என்றாலும் உங்கள் துணைக்கு அப்படி ஒரு எண்ணம் நிச்சயம் இருக்கும்.டிரெக்கிங் பயணம் எத்தகையதோ அதைப்போலவே வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் அவசியம். அதாவது கூடாரம் அமைக்க உதவுவது, தண்ணீர் தயாரிப்பது போன்ற காரியங்களில் உங்கள் காதலர் உங்களுக்கு துணையாக இருப்பவராக இருந்தால் வாழ்க்கையிலும் அந்த ஆதரவும், துணையும் நீடிக்கும் என்பது உறுதி.

ஆதரவு

இதுபோன்று உங்களது பணிகளை எடுத்துபோட்டு அவரே செய்தால் உங்கள் வருங்கால துணைவர் கணிவுள்ளம் கொண்ட ஆதரவு மிக்கவர் என்பதை அடையாளம் காணலாம்.

அனைவரையும் சமனோட நடத்துவது

சக பயணிகளிடம் கனிவோடு நடந்துகொள்வது, பயணத்தின் போது எதிர்படும் கீழ் நிலை ஊழியர்களை ‘நீ’ என்று ஒருமையில் அழைக்காமல்; ‘நீங்கள்’ என்று சக மனிதனுக்கு தரவேண்டிய மரியாதையோடு நடத்துவது போன்ற விஷயங்கள் உங்கள் காதலரின் சமூக அக்கறையையும், பொறுப்பையும் நன்கு உணரச்செய்ய உதவும். அதாவது சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட காதலர் உங்களையும் பொறுப்போடும், அக்கறையோடும் கட்டாயம் கவனித்துக்கொள்வார்.

நிதானம்

அதாவது கடினமான சூழலில் விரக்தியோ, வெறுப்போ அடையாமல் நிதானமாக எப்படி நிலைமையை கையாளுகிறாரோ, அதைவைத்தே வாழ்வின் கஷ்டமான தருணங்களில் எப்படி நடந்துகொள்வார் என்பதை சுலபமாக சொல்லிவிடலாம்.

புலம்பல்

அது சரி இல்ல இது சரி இல்ல.. வந்ததே லேட்டு.. உங்களுக்கு எவ்ளோ நேரம் இருக்கு.. என்கூட வரும்போதுதான் மற்ற வேலைகள்லலாம் கவனம் செலுத்துவீங்க.. கொஞ்சம் சீக்கிரமே வந்துருக்கலாம்னு சகட்டு மேனிக்கு உங்கள குடஞ்சி எடுக்குற லவ்வர் அமைதியா வந்தாலும் அப்பவும் ஆபத்துதான். இந்த புலம்பல்களை வைத்தே வாழப்போகும் வாழ்க்கையில் உங்கள் காதலர் எப்படி குற்றம் குறைகள் சொல்வார் என்று கண்டுபிடித்துவிடலாம்!

இக்கட்டான சூழ்நிலை

டிரெக்கிங் பயணத்தின்போது சில நேரங்களில் நிலைமை நம் கையை மீறி போய்விடும். அப்படிப்பட்ட சமயங்களில் உங்கள் காதலர் எப்படி நடந்துகொள்கிறார் என்பது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.

%d bloggers like this: