Daily Archives: ஜூன் 28th, 2018

சிம் கார்டுகளே இல்லா மொபைல்…. சீக்கிரமே வரும்!

முதலாவது Full size (1FF) சிம் கார்டுகள். 1991-ம் ஆண்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏடிஎம் கார்டின் அளவு இருந்த அதை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் அதன் அளவு பெருமளவு குறைக்கப்பட்டு 1996- ம் ஆண்டில் Mini-SIM (2FF)என்ற வடிவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தக் கால நோக்கியாவோ, மோட்டோரோலோவோ இந்தக் கால ஐபோனோ, ஆண்ட்ராய்டோ எந்த மொபைலாக இருந்தாலும் அதில் மாறாத விஷயம் சிம்கார்டுதான். காலத்துக்குத் தகுந்தவாறு மொபைலின் தொழில்நுட்பங்களும் அதன் வடிவமும் மாறினாலும் கூட சிம் கார்டுகள் காலம் காலமாக அப்படியேதானிருக்கின்றன.

சிம் கார்டுகளின் பயன்பாடு

Continue reading →

சங்கடங்களைத் தவிர்க்க சமாதானங்கள் உதவாது

சரியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது எப்போதுமே எளிதானதல்ல. ஆனால், அதை நாம் பின்பற்றித்தான் ஆக வேண்டும். பிஸியான வேலை, வீட்டுச்சூழல் காரணமாக நம்முடைய முக்கியமான நோக்கங்கள்கூட சில நேரங்களில் நிறைவேறாமல் போகலாம். ஆனால், உடல்நலம் அப்படிப்பட்டதல்ல. நம் ஆரோக்கியத்தையும் உடல் உறுதியையும் பராமரிக்க முடியாமல் போவதற்கு நமக்கு நாமே ஏதாவது சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். இது தவறு. அந்தச் சமாதானங்களைத் தவிர்க்கவும் ஆரோக்கியப் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும் சில ஆலோசனைகள் இங்கே…

சமாதானம்: `வேலை, வீட்டைப் பார்த்துக்கொள்வது என நான் ரொம்ப பிஸி. உடற்பயிற்சி செய்வதற்கு நேரமே இல்லை.

Continue reading →

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

 

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

ழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்’ என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்’ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.    

Continue reading →

தமிழக அரசு அறிவித்துள்ள 264 புதிய படிப்புகள்… எந்தெந்த கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம்?

ரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று தனியார் கல்லூரியை நோக்கி நடையாய் நடந்துவரும் பெற்றோர்களுக்கு நற்செய்தியாக, புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக உயர்கல்வித் துறை. இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260-க்கும் மேற்பட்ட பல்வேறு புதிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளன. இந்தப் புதிய பாடப்பிரிவுகளில் சேர, மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 9-ம் தேதி.

Continue reading →

என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!

எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம்.  இதுதான் மிக முக்கிய  தவறாகும்.  ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே சருமப் பாதுகாப்பில்  கவனம் செலுத்துவதன் மூலம் முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர் டாக்டர் சித்ரா.  சருமப் பாதுகாப்பில் நம்மில் பெரும்பாலானோர் அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதில்லை.

கல்லூரி நாள் தொடங்கி அதே ஃபேஸ் வாஷ் மற்றும் மாயிஸ்சரைப் பயன்படுத்தி வருகிறோம்.  வயது அதிகரிக்கும் போது நமது சருமமும்  மாறுதலுக்கு உள்ளாகும் என்பது முக்கியம்.  20களில் சரியாக இருந்தது 30 அல்லது 40களில் இருக்காது.  சருமத்தைப் பளபளப்பாகவும்,  ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது நமது இலக்கு எனில் உங்கள் சருமப் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் கணிசமான மாற்றங்களை  ஏற்படுத்த இதுவே சரியான தருணம். 

நீங்கள் 20களில் இருந்தால்… Continue reading →