Monthly Archives: ஜூலை, 2018

விதைகள் என்பவை வேண்டாதவை அல்ல!

பொதுவாக விதைகளை அகற்றிவிட்டே பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். சுவை என்ற கோணத்தில் விதைகள் என்பவை வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. புற்றுநோய் போன்ற பல கொடிய நோய்களைத் தீர்க்கும் வல்லமையும் விதைகளுக்கு உண்டு’’ என்கிற சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம், இன்றியமையாததாக இருக்கிற விதைகள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் விளக்குகிறார். Continue reading →

ஜன்னி, ஜூரம், வலிப்பு நோயை போக்கும் திணை

தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, வரகு, கம்பு, சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்புச்சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது. கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு, திணை, பனிவரகு போன்றவை சிறுதானியங்கள் ஆகும். கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு

Continue reading →

கெஸ்ட் ரூம்… பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி?

விருந்தினர் வருகை என்பது உவகைக்குரிய விஷயம். விருந்தோம்பல் என்பது பேருவுவகை தரும் விஷயம். ஆனாலும், அப்பார்ட்மென்ட்டுகளில் வசிப்போருக்கு விருந்தினர் வருகை மனதளவில் மகிழ்ச்சியைத் தந்தாலும் தீப்பெட்டிகளை அடுக்கினாற்போன்ற இருப்பிடத்தில் அவர்களுக்கும் இடம் ஒதுக்குவதென்பது தர்மசங்கடமானது. எனினும், கொஞ்சம் திட்டமிடல் இருந்தால் இதைச் சமாளிக்கலாம். நகர்ப் புறங்களில் வசிப்பவர்களுக்கு, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கென ஓர் அறையை ஒதுக்குவது என்பது ஆடம்பரமானதாகத் தோன்றலாம். ஆனால், அடிக்கடி விருந்தினர் வருகை தரும் வீடுகளில் அவர்களுக்கென ஓரிடத்தை ஒதுக்குவதைப் பற்றி நிச்சயம் யோசிக்க வேண்டும்.

Continue reading →

ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள 8 யோசனைகள்!

மீப காலமாகவே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதற்கேற்ப, அது தொடர்பான மோசடி களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  ஆன்லைன் பரிவர்த்தனையின்போது, விஷயம் தெரியாதவர்கள் மட்டுமல்ல, நன்கு விஷயம் தெரிந்தவர்கள்கூட மோசடியில் சிக்கிக்கொள்ளும் நிலைமையே தற்போது உருவாகியிக்கிறது. ஆன்லைன் மோசடிகளிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான எட்டு யோசனைகள் இங்கே…

பாதுகாப்பினை அதிகப்படுத்துங்கள்

Continue reading →

லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!

நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது… ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத் தள்ளிப் போடுகிறார்கள்.
திருமணத்துக்காக எடுக்கும் விடுப்பு, திருமணத்துக்கு முன்னரே காலியாகிவிடும். திருமணத்தை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என்ற டென்ஷன் இருவருக்கும் அந்த நேரத்தில் அலைக்கழிக்கும். திருமணம் முடிந்தபிறகு முதலிரவு அன்று ‘அப்பாடா’ என்று தளர்வான மனநிலை ஏற்பட்டு நிம்மதியான தூக்கத்தை உடல் விரும்பும்.

Continue reading →

பெருங்குடல் நீர் சிகிச்சை

உடலில் தங்கியிருக்கும் கழிவுகள்தான் பல நோய்களுக்குக் காரணம். அந்தக் கழிவுகளை அகற்றப் பயன்படும் சிகிச்சையே பெருங்குடல் நீர் சிகிச்சை. ஒரு கருவியுடன் இணைக்கப்பட்ட டியூப், ஆசனவாய் வழியாகப் பெருங்குடல்வரை உள்ளே  விடப்பட்டு, லேசான அழுத்தத்துடன்  தண்ணீர் செலுத்தப்படும். அந்தத் தண்ணீர் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும்.  நம் உடலானது, உணவில் உள்ள சத்துகளை கிரகிப்பதுடன், பல்வேறு வழிகளில் கழிவுகளை வெளியேற்றும் பணியையும் செய்கிறது. காற்று, வியர்வை, மலம்  என பல்வேறு வகைகளில் கழிவுகள் வெளியேறுகின்றன. இயற்கையான முறையில் நமது உடலே கழிவுகளை வெளியேற்றிவிடும் என்றாலும், அவ்வப்போது அதில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

Continue reading →

பிரிந்தவர் சேர… மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம்!

மணவாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்
ஈகோ, சொந்தங்களின் தலையீட்டால் விஸ்வரூபமாக்கப்பட்ட குடும்பப் பிரச்னை, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் பிரிந்து வாழும் தம்பதிகள் பலர். ஒருகட்டத்தில் பிரிவு வாழ்வின் கசப்பு தாங்காமல், ‘நாம் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்று மனைவி கணவருடனோ, கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விரும்பினால், அவருக்குப் பக்கபலமாக நிற்கிறது மண வாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்.

Continue reading →

பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும்?

கல்வி கற்பது இன்றைய அவசியமான தேவையாக உள்ளது. லட்சக்கணக்கான பள்ளிகள் உருவாகியுள்ளன. கல்வியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்  குழந்தைகள் உறவுக்கான விழுமியங்கள் குறித்து நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. மதிப்பெண் பெறவைப்பது, படிப்புக்கான சான்றிதழ் பெற வைப்பது, பிழைப்புக்கான வழி தேட வைப்பது இத்தோடு ஓர் ஆசிரியரின் கடமை முடிந்து போவதில்லை.

Continue reading →

காவிரி கடலில் கலந்தால் தவறா? தமிழகத்தில் ஏன் அணைகள் கட்டப்படவில்லை?

காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா?’ எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்க மாட்டார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது.

Continue reading →

குரலுக்கு ஓய்வு கொடுங்கள்

உணவு, நீர், காற்று என அனைத்தையும் உடலுக்குள் அனுப்புவது தொண்டை.  தொண்டையில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்குகிறார்  காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்  வெங்கட கார்த்திகேயன்.

* ஒவ்வாமை, வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, சைனஸ், அசிடிட்டி காரணமாக அடிக்கடி தொண்டை வலி ஏற்படும். சிலர் அதற்காக  ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்வார்கள். உண்மையில் எல்லாவிதமான தொண்டை வலிகளுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தீர்வல்ல. முறையான காரணமறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுக்காவிட்டால், பிரச்னை தீவிரமாக வாய்ப்புண்டு.

Continue reading →