Daily Archives: ஜூலை 2nd, 2018

அழுத்த சிகிச்சை

ள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதியில் அழுத்தம் கொடுத்துக் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் ஒருவித சிகிச்சையே `ரெஃப்ளெக்ஸாலஜி’ (Reflexology). நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கையாளப்படும் இந்தச் சிகிச்சை, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும். உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வது, குறைந்த வலியில் சுகப்பிரசவம் காண உதவுவது என இதன் பலன்கள் ஏராளம்.

Continue reading →

உங்கள் மகிழ்ச்சிக்கு எத்தனை மதிப்பெண்கள்?

யிறு குலுங்குகிறது. மிகவும் சிரமப்பட்டுக் கைகளை வாயின் மேல் வைத்து அடக்கப் பார்க்கிறீர்கள்.  வெடித்துச் சிரிக்கிறீர்கள். எதிரில் இருப்பவரும் அடக்க முடியாமல் சிரித்து அதிரச் செய்கிறார். கண்களில் நீர் நிற்கிறது. ஆனால், அந்தச் சிரிப்பு நிற்கவில்லை. ஒருவழியாக சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறீர்கள். இப்படி நீங்கள் கடைசியாகச் சிரித்தது எப்போது?

Continue reading →

ஓராண்டில் ஜி.எஸ்.டி சாதகங்கள்… பாதகங்கள்!

சூரத் நகரம், இந்தியாவிலேயே ஜவுளி உற்பத்திக்குப் புகழ்பெற்றது. இங்கு தயாராகும் ஜவுளிகளை மொத்தமாக வாங்கி, நாடு முழுக்க வியாபாரம் செய்பவர்கள் பல லட்சம் பேர். ஆனால், 2016, ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரியானது நடைமுறைக்கு வந்த இந்த ஓராண்டில் சூரத்தின் ஜவுளி விற்பனை பெருமளவில் சரிந்திருக்கிறது. பல விசைத்தறித் தொழிற்கூடங்கள் நசிவடைத்து மூடப்பட்டுள்ளன. ஜவுளி மொத்த வியாபாரம் நடைபெறும் கடைத்தெருக்கள் இப்போது மக்கள் நெருக்கடியில்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இங்குள்ள சிந்தெடிக் டெக்ஸ்டைல் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

ஆன்லைனில் சரியான ஆடைகளைத் தேர்வுசெய்வது எப்படி?!

வெயில், மழை பாராமல் கூட்டநெரிசலில் கடைக்கடையாய் ஏறி, 100 வகையான பொருள்களை நோட்டமிட்டு, கடைசியில் சிறிய கைக்குட்டையை வாங்கிவரும் காலமெல்லாம் மாறிவிட்டது. உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை அனைத்தும் வீட்டுவாசலிலே வாங்கிக்கொள்ளும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை `ஆன்லைன் ஷாப்பிங்’ மீது அதிக ஈர்ப்புள்ளது. மக்களுக்காகவே ஏகப்பட்ட வெப்சைட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. இதில் உடைகளுக்கான தளங்களில்தான் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. பிடித்த நிறம், பிடித்த பேட்டர்ன், ஸ்டைல் என நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்திசெய்திருக்கும் ஆடையை வாங்கலாம் என நினைத்து பணம் செலுத்தும்போது ஏற்படும் சிறு பயம், `எனக்கு இந்த டிரெஸ் சரியா இருக்குமா?’ என்பதுதான். உங்கள் உடலமைப்புக்கு ஏற்ற சரியான அளவுடைய ஆடைகளை ஆன்லைனில் எப்படி வாங்குவது என்பதைப் பார்ப்போம்.

Continue reading →

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

டப்பது நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே.

ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் என்கிறீர்களா?

உங்களுக்காகவே இந்தத் தகவல்கள்…

நடைப்பயிற்சியில் ஈடுபாடு ஏற்பட

Continue reading →