Daily Archives: ஜூலை 3rd, 2018

போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?!

ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்… ‘Alcohol may increase your desire, but it takes away the performance’. இதில் பாதிதான் உண்மை. மது செயல்திறனை மட்டுமல்ல; செக்ஸின் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்.

Continue reading →

இன்னும் 30 நாள்கள்தான்… டாக்ஸ் ஃபைலிங் செய்யத் தயாராகுங்கள்!

தோ இந்த ஜூலை மாத முடிவில் நாமெல்லோருமே வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்தாக வேண்டும். கடந்த மார்ச் மாத முடிவிலேயே நம்மில் பலரும் வருமான வரியைக் கட்டியிருப்போம். அதற்கான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்ய கடைசித் தேதி வரும் 31.07.2018.

இழப்புகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்

Continue reading →

நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!

நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், ‘டி’ குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.
வைட்டமின், ‘டி’ என்பது என்ன?
சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், ‘டி’ அவசியம்.
பொதுவான குறைபாடாக வைட்டமின், ‘டி’ மாற என்ன காரணம்?

Continue reading →

உங்கள் குழந்தை `சூப்பர் கிட்’ ஆக வேண்டுமா?

உங்க புள்ளைய அருமையா வளர்த்திருக்கீங்க’ என்ற பாராட்டைவிட, பெற்றவர்களுக்கான கிரீடம் என்னவாக இருக்க முடியும்? குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளைப் பகிர்கிறார்  உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.
* குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.

Continue reading →

நாம் கேன்களில் வாங்கும் மினரல் வாட்டரில் மினரலே இல்லையென்பது தெரியுமா?

மிழகத்தில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட கேன் வாட்டர் குடிக்கும் குழந்தைகள் அதிகமாக இருக்கக்கூடும். சென்ற இருபது ஆண்டுகளில் நாம் கண்ட மிகப்பெரிய சாதனை தண்ணீரைப் பாக்கெட்டிலும் கேனிலும் அடைத்ததுதான். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமானோர் நம்புவது பபுள்டாப் வாட்டர் கேன்களைத்தான். இந்த ஆண்டு தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையின் முக்கியப் பகுதிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இந்த வறட்சியைத் தனியார் நிறுவன குடிநீர் வழங்கும் நிறுவனங்களும், தனியார் தண்ணீர் லாரிகளும் ‘சரியாக’ உபயோகப்படுத்திக்கொண்டன. கேட்டவுடன் கிடைக்கும் தண்ணீர், கேட்டால் இரண்டு நாள்கள் கழித்து கிடைக்கும் அளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. இதனால் மிதமான வருமானங்களை அள்ளிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்ட ஆரம்பித்தன. இன்றைய நிலையில் பபுள் டாப் வாட்டர் கேன் இல்லாமல் வாழ முடியாது என்ற கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறோம். பபுள் டாப் வாட்டர் கேன் மற்றும் லாரி தண்ணீர்தான் குடிநீர் ஆதாரத்துக்கு ஒரே தீர்வா… அதற்கு மாற்று இருக்கிறதா என்றால் அதற்கு ‘இருக்கிறது’ என்பதுதான் பதில்.

Continue reading →