Daily Archives: ஜூலை 4th, 2018

ஆறு அமைச்சர்களுக்கு கல்தா? – அமாவாசையில் அதிரடி!

ழுகார் உள்ளே வரும்போதே, ‘‘தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளின் உள்கட்சி விவகாரங்கள்தான் இந்த வார ஹாட் டாபிக்’’ என்றார். முரசொலி அலுவலகத்தில் மு.க.ஸ்டாலின் நடத்திய தி.மு.க தென்மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பற்றிய கட்டுரையைப் படித்தவர், ‘‘உமது நிருபர் லேட். இந்தக் கட்டுரை பிரசுரமாகி வெளியில் வருவதற்குள் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன’’ என்றார்.
‘‘ஆமாம்’’ என்றோம் சமாளிப்பாக.

Continue reading →

வலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்!

பாதங்கள்தான் ஒட்டுமொத்த உடலையும் தாங்கும் அஸ்திவாரம்.  பாதங்களில் பிரச்னை வந்தால் உடல் ஆட்டம் கண்டுவிடும். நிற்கவோ, நடக்கவோ முடியாமல் ஒரே இடத்தில் முடங்கி விடுவோம்.  பாதங்களில் பாதிப்பு ஏற்பட நாம் அணியும் காலணிகளும்கூடக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘பொருத்தமற்ற காலணிகளை அணிவதால், கால்கள் மட்டுமல்லாமல் பாதங்களில் உள்ள நரம்புகளும் பாதிக்கப்படும். முக்கியமாக முதுகுவலிப் பிரச்னைக்கும் வழிவகுக்கும்’’ என்கிறார் நியூரோ பிசியோதெரபிஸ்ட் ஃபமிதா.  விரிவாகப் பார்ப்போம்.

சியாட்டிகா (Sciatica)

Continue reading →

இருசக்கர வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?

பொதுவாக இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண், பெண் இருவருக்கும் முதுகுத்தண்டில் வலி ஏற்படுவது இயல்பு. ஆனால்  நீண்ட நேரம் இருசக்கர வாகனத்தை பயன் படுத்துவதால் பெண்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்,  அதற்கான எளிய தீர்வுகள் குறித்து பேசுகிறார் உடற்பயிற்சி நிபுணர் தேவி மீனாசுந்தரம்.“பெண்களுக்கு இயற்கையாகவே  கர்ப்ப காலம் மற்றும்  மாதவிடாய் பிரச்சனையினால் முதுகு வலி ஏற்படும். தொடர்ந்து அவர்கள் வாகனம் ஓட்டும்  போது அதன் வீரியம் அதிகமாகும். ஏனென்றால் நாம் இருசக்கர வாகனம் ஓட்டும்போது நேராக அமர்ந்து ஓட்டுவது  கிடையாது. வளைந்தபடியே வண்டி ஓட்டுவதால் இடுப்பு எலும்பு பாதிக்கப்படுகிறது. முடிந்தவரை நிமர்ந்தபடி வாகனம்  ஓட்ட வேண்டும். Continue reading →

என்றென்றும் இளமை… இதுதான் ரகசியம்!

எந்தப் பிரச்னையையும் வரும் வரை அதற்கான தீர்வுகள் தேவையில்லை என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம்.  இதுதான் மிக முக்கிய  தவறாகும்.  ‘உங்கள் சருமத்தை இப்போது கூட பராமரிக்கத் தொடங்க எந்தத் தடையுமில்லை. சிறு வயது முதற்கொண்டே சருமப் பாதுகாப்பில்  கவனம் செலுத்துவதன் மூலம் முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர் டாக்டர் சித்ரா.  சருமப் பாதுகாப்பில் நம்மில் பெரும்பாலானோர் அன்றாடப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதில்லை.

கல்லூரி நாள் தொடங்கி அதே ஃபேஸ் வாஷ் மற்றும் மாயிஸ்சரைப் பயன்படுத்தி வருகிறோம்.  வயது அதிகரிக்கும் போது நமது சருமமும்  மாறுதலுக்கு உள்ளாகும் என்பது முக்கியம்.  20களில் சரியாக இருந்தது 30 அல்லது 40களில் இருக்காது.  சருமத்தைப் பளபளப்பாகவும்,  ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பது நமது இலக்கு எனில் உங்கள் சருமப் பாதுகாப்பிலும், பராமரிப்பிலும் கணிசமான மாற்றங்களை  ஏற்படுத்த இதுவே சரியான தருணம். 

நீங்கள் 20களில் இருந்தால்… Continue reading →

சிகரெட்டை நிறுத்த உதவும் சிகிச்சைகள்!

புற்றுநோயில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை வருகிறது என சிகரெட் அட்டையிலேயே எச்சரிக்கை வாசகங்களை  அச்சடித்தும் புகைப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. சிகரெட்டை நிறுத்துவதற்கு எலெக்ட்ரானிக் சிகரெட், நிகோடின் சூயிங்கம், கையில் ஒட்டிக்கொள்ளும் பேட்ச் என எத்தனையோ வழிகள் இருந்தும், அதை ஏன் நிறுத்த முடிவதில்லை?

Continue reading →