Advertisements

கண் பார்வையை பறிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோயினால் கண் பார்வையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயாளிகளுக்குக் கண்களில் உள்ள ரத்த நாளங்கள், நரம்புகள், விழித்திரை, லென்ஸ், பாப்பா, ஒரு வகை நீர் இவையாவும் பாதிக்கப்படுகின்றன. ரத்த நாளங்கள் அடைப்பட்டுப் போவதாலும் ரத்தம் கசிவதாலும் விழித்திரை பாதிக்கப்பட்டு பார்வை குறைகிறது. இது ஒரு சிலர்க்கு சிறிது சிறிதாக ஏற்படுகிறது. சிலர்க்கு பார்வை  போய்விடுகிறது. ரத்த நாளங்கள் மெலிந்தும், வீங்கியும் காணப்பட்டால்

உடனடியாக இதற்கு மருத்துவம் செய்ய வேண்டும். சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது லென்சுதான். ஒளிஊடுருவும் தன்மையை இழந்து வெண்மையாக  மாறிவிடுகிறது. வெண்மையாக மாற மாற.. பார்வை குறைபாடும் அதிகரிக்கும்.
இந்தப்புரை  வருமுன் தடுக்காவிட்டால் பின்னர் அறுவைச்சிகிச்சையைத் தவிர வேறுவழி இல்லை.
இந்த அறுவைச்சிகிச்சையையும் சர்க்கரையை இன்சுலின் போட்டு நன்றாகக்  கட்டுப்படுத்திக் கொண்ட பிறகுதான் மேற்கொள்ள வேண்டும். கண்களை அதே வடிவத்தில் வைத்துக் கொள்ள உள்ளே இருக்கும் நீர் பயன்படுகிறது. இது சாதாரணமாக ஒரே அழுத்தத்தில் இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த நீர்க்கசிவு அதிகரித்து அழுத்தம் மிகுந்து கிளாகோமோ என்ற நோயாகிறது. இந்நோயினால் கண்களில் வலியும், பார்வைக்குறைவும், வண்ண வட்டங்களும் ஏற்படத் தொடங்கும். உரிய மருத்துவம் பார்க்காமல் காலம் கடத்தினால் பார்வை பறிபோகும் அபாயம் உண்டு.

Advertisements
%d bloggers like this: