Daily Archives: ஜூலை 10th, 2018

ஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?-விகடன்

முதல்வர் எடப்பாடிக்கு கல்தா… தமிழக அரசு சஸ்பெண்டு… ஊழல் அமைச்சர்கள் ஆறு பேருக்குச் சிக்கல்… ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர்… இதெல்லாம் அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியலில் நடக்கப்போகிறது.

… இந்தப் பாயின்டுகளைப் படித்துவிட்டு, ஜூலை 9-ம் தேதியன்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை ஈஞ்சம்பாக்கம் மேடையில் பேசிய சில பாயின்டுகளுடன் ஒப்பீட்டுப் பாருங்கள்! `யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே’ என்பதுபோல, அமித் ஷா விசிட் வருவதற்கு முன்பே, வருமானவரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்த ஆரம்பித்தார்கள். நாமக்கல் தொழில் அதிபர் குமாரசாமி தொடர்புடைய நிறுவனங்களில்

Continue reading →

டாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

ருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பலரும் 12 விதமான தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. அந்தத் தவறு கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. தவறான ஐ.டி.ஆர் படிவம்

உங்கள் வருமானம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து, முதலில் சரியான ஐ.டி.ஆர் (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, ஏழு ஐ.டி.ஆர் படிவங்கள் உள்ளன. உதாரணமாக, ஐ.டி.ஆர்-1 சம்பள வருமானம் மற்றும் வட்டி பெறும் எந்தவொரு நபருக்கும் பொருந்தும். ஒருவர் சம்பளத்துடன் சேர்ந்து மூலதன ஆதாயத்தைப் பெற்றிருந்தால், அவர்  ஐ.டி.ஆர்- 2-யைத் தேர்வுசெய்ய வேண்டும். சரியான வருமான வரிப் படிவத்தைத் தேர்ந்தெடுத்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.

2. அனைத்து வருவாய் விவரங்களையும்  குறிப்பிடாமல் இருப்பது

Continue reading →

உங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு

னிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்…

கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையில், யாரால் கோபம் ஏற்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அந்த நபர்களையும்   சூழலையும் தவிர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அட்டவணை போடுங்கள்!

ஓர் அட்டவணையைத் தயார் செய்யுங்கள். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல், எரிச்சலடையச் செய்யும் சூழ்நிலை, எரிச்சலைக் கோபமாக்கும் சிந்தனைகள், நிகழ்வுகள், கோபத்தில் நீங்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை எழுதுங்கள். இவை, உங்களுக்குக் கோபம் வருவதற்கான காரணங்களை அறிந்துகொள்ள உதவும்.

அமைதியைக் கற்றுக்கொள்ளுங்கள்!

பதற்றத்தைக் குறைத்துவிட்டாலே, கோபத்தைப் பாதி வென்றது மாதிரிதான். தசைகளைத் தளர்வாக்கும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்; சிரிப்பு யோகா செய்யலாம்; எதையும் நேர்மறையாக அணுகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளலாம். மனதை அமைதிப்படுத்தும் இயற்கையான சூழல்களைக் கற்பனை செய்தாலேகூடப் போதும்.

உங்கள் உணர்வுகளுக்கு நீங்களே பொறுப்பு!

வேறொருவர் வந்து உங்கள் கோபத்தைக் குறைப்பது சாத்தியமில்லாதது. நீங்களே அதற்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கோபத்தைக் குறைக்கப் பார்ப்பதுதான் சிறந்த வழி.

சுவாசத்தைக் கவனியுங்கள்!

கோபமாக இருக்கும்போது உங்கள் சுவாசம் படபடப்புடன் வேகமாக வெளிப்படும். அந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி மேற்கொண்டால் கோபம் படிப்படியாகக் குறையும். இந்த வழிமுறைகளை இன்றே தொடங்கிவிடுவது சிறந்தது.

இனி ஆண்களுக்கும் பிரசவ வலி! – மாற்றங்களுக்குத் தயாராவோம்

வாழ்த்துகள், நீங்க அம்மாவாகப் போறீங்க…” என்று உறுதிப்படுத்தும் தருணம் உண்மையிலேயே உன்னதமானது. பெண் கருவுற்றதை உறுதி செய்ததும் ஏராளமான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்வார்கள் மருத்துவர்கள். ஆனால் எல்லா ஆலோசனைகளும் பெண்ணுக்கானதாகவே இருக்கும். அப்படியானாால், பெண் கருவுற்ற காலத்தில் ஆண்களுக்குப் பொறுப்புகளோ, கடமைகளோ இல்லையா?

Continue reading →