Advertisements

டாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்!

ருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது பலரும் 12 விதமான தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய ரீஃபண்ட் கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது. அந்தத் தவறு கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. தவறான ஐ.டி.ஆர் படிவம்

உங்கள் வருமானம் எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் பொறுத்து, முதலில் சரியான ஐ.டி.ஆர் (ITR) படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது, ஏழு ஐ.டி.ஆர் படிவங்கள் உள்ளன. உதாரணமாக, ஐ.டி.ஆர்-1 சம்பள வருமானம் மற்றும் வட்டி பெறும் எந்தவொரு நபருக்கும் பொருந்தும். ஒருவர் சம்பளத்துடன் சேர்ந்து மூலதன ஆதாயத்தைப் பெற்றிருந்தால், அவர்  ஐ.டி.ஆர்- 2-யைத் தேர்வுசெய்ய வேண்டும். சரியான வருமான வரிப் படிவத்தைத் தேர்ந்தெடுத்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் நிராகரிக்கப் படுவதைத் தவிர்க்கலாம்.

2. அனைத்து வருவாய் விவரங்களையும்  குறிப்பிடாமல் இருப்பது

மக்கள் அடிக்கடி மறந்துவிடுகிற ஒன்று, வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பதுதான். இருப்பினும், வரிக்கு உட்பட்ட மற்றும் வரிவிலக்கு பெற்ற வருவாயைக் குறிப்பிடுவது அவசியம்.  விலக்கு பெற்ற வருமானங்களான சேமிப்புக் கணக்குகள் அல்லது நிலையான வைப்புத் தொகைகளிலிருந்து பெறும் வட்டி,  பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் விற்பனை செய்வதன் மூலம் சம்பாதிப்பது ஆகியவை அடங்கும். அனைத்துவிதமான வருமானங் களையும் படிவத்தில் குறிப்பிடுவது முக்கியம். அவ்வாறு நீங்கள் குறிப்பிடாமல் இருப்பது, ‘வருமானம் மறைக்கப்படுவ’தாகக் கருதப்படும். இதனால் வரித் துறையின் கேள்வி களுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

3. வரி வரவுகளைச் சரிபார்க்கத் தவறுதல் (Form 26AS credit)

உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்முன், உங்களது 26AS-ல் உள்ள வருமானம், வரிப் பிடித்தம் (TDS), நீங்கள் செலுத்தும் முன்கூட்டிய வரி (Advance Tax), சுயமதிப்பீட்டு வரி (Self Assessment Tax) ஆகிய விவரங்களைச் சரி பார்க்கவேண்டியது அவசியம்.

நீங்கள் படிவம் 16-உடன் சம்பளம் பெற்ற நபராக இருந்தால், உங்களுடைய வருமானம் மற்றும் வரி விவரங்களைப் படிவம் 26AS உடன் எந்த முரண்பாடும் இல்லாமல் பொருந்துகிறதா என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இதனால், உங்களது ரீஃபண்டு தொகையை எந்தக் குறைப்பும் இல்லாமல் பெறலாம்.

4. வாடகை வருமானம் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்துகளைக் குறிப்பிடாமல் இருத்தல்

உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட அசையா சொத்துகள் இருந்தால், வருமான வரிச் சட்டம் 1961 கீழ் ஏதேனும் ஒன்றை மட்டுமே நீங்கள் பயன்படுத்தி வருவதாகக் (Self-occupied) காட்ட முடியும்.

நீங்கள் சுயமாக வாங்கிய  வீட்டை தவிர, வேறொரு வீட்டை நீங்கள் சொந்தமாக வைத்திருந்தால், அது காலியாக இருந்தாலும் வாடகை பெறப்பட்டதாகக் கருதப்பட்டு (Deemed to be rent) வரி செலுத்த வேண்டும். இவ்வாறான வீட்டிற்குச் செலுத்திய வீட்டு வரி மற்றும் வீட்டுக் கடன் வட்டியைக் கழித்துக்கொள்ளலாம்.

உங்கள் எல்லாச் சொத்துகளின் விவரங்களையும் வழங்குவது நல்லது. இல்லாவிட்டால், நீங்கள் வருமான வரி சட்டத்தை மீறுவ தாகக் குற்றஞ்சாட்டப்படுவீர்கள். நிதியாண்டு 2017-18 முதல் வீட்டுக் கடன் வட்டி அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். மீதமுள்ள தொகை அடுத்த ஆண்டு படிவத்தில் எடுத்துச் செல்லப்படும்.

5. வருமான வரிப்பிடித்தம் செய்த தொகையை இருமுறை காண்பித்தல்

ஒருவர் ஒரு நிதியாண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனி களில் வேலை மாறும்போது, இத்தகைய தவறுகள் ஏற்படு கின்றன. உங்கள் வருவாயைப் பொறுத்து உங்களது முதல் அலுவலகத்தால் வரிப் பிடித்தம் செய்து வருமான வரித் துறைக்கு காண்பித்திருப்பார்கள். இருப்பினும், உங்களுடைய மொத்த வருமானத்தை இரண் டாவது கம்பெனிக்கு தெரிவிக்கும் போது, ஏற்கெனவே பிடித்தம் செய்த வருவாய்க்கும் சேர்த்து வரிப்பிடித்தம் செய்யப்படலாம் அல்லது உங்களது வருவாயைத் தெரிவிக்காமல் இருந்தால் இரண்டாவது வழங்கிய சம்பளத் திற்கு மட்டும் வரிப்பிடித்தம் செய்யப்படலாம். இந்தத் தவறு களைத் தவிர்க்க, உங்கள் புதிய அலுவலகத்தில் உங்கள் அனைத்து வருமானம், டி.டி.எஸ் (TDS) விவரங்களையும் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஐ.டி.ஆர் படிவத்தில், இரு அலுவலத்தி லிருந்தும் பெற்ற (அல்லது அதற்கும் மேலாகப் பொருந்தும் வகையில்) உங்கள் வருமானம் மற்றும் வரி விவரங்களை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். இது இரட்டை வரி விலக்குகளைத் தவிர்க்க உதவுவதுடன், உங்களுக்கு எளிதில் ரீஃபண்டு கிடைக்க வழிவகுக்கும்.

6. ஐ.டி.ஆர் 5-யை சரிபார்க்கத் தவறுவது

நீங்கள் ஐ.டி.ஆர் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, ஐ.டி.ஆர்-5 படிவத்தைக் கையொப்பமிட்டு சிபிசி (CPC), பெங்களூருக்கு அனுப்ப வேண்டும். டிஜிட்டல் கையொப்பத்துடன் உங்கள் ஐ.டி.ஆர்-யை நீங்கள் தாக்கல் செய்திருந்தால், இந்த படி தேவையில்லை. ஐ.டி.ஆர்-5-யை சமர்ப்பித்த 120 நாள்களுக்குள் தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.

மேலும், அது சி.பி.சி.யைச் சென்றடைந்ததையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும். உங்கள் ஐ.டி.ஆர்-யை  ஏழு முதல் பத்து நாள்களுக்குள் சென்றடைய வில்லை என்றால், 1800-425-2229 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். அல்லது இன்னொருமுறை அனுப்பலாம். தற்போது இணையம் மூலம் சரிபார்க்கும் முறை (e-verification) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி இருந்த இடத்திலிருந்து ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.

7. வருமான வரியைத் தாக்கல் செய்யாமல் இருப்பது

பலர் தங்கள் வருமான கணக்கைத் தாக்கல் செய்வதில்லை. ஏனென்றால், அவை நீண்ட கால மூலதன ஆதாயங்கள் வரி விலக்கு உடையவை என்பதாலும் மொத்த வருமானம் வரி வரம்பிற்குக் கீழே உள்ளதாலும் தாக்கல் செய்வதில்லை. இருப்பினும், சட்டத்தின் 139 (1) பிரிவின் அண்மைய திருத்தங்களைப் பொறுத்தவரையில், உங்கள் விலக்கு நீண்டகால மூலதன ஆதாயங்கள் மற்றும் மொத்த வருமானத்துடன் குறைந்தபட்ச விலக்கு வரம்பைவிட அதிகமாக இருந்தால், நீங்கள் வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்யவேண்டும்.

8. கூட்டு வருமானத்தைக் கணக்கிடாமல் இருப்பது (Clubbing Income)

கூட்டு வருமான விதிகளின்படி, குறிப்பிட்ட வட்டி வருமானம் (சிறு குழந்தைகள், மனைவி, மகனின் மனைவி முதலியன) வரி செலுத்துபவர் தனது சொந்த வருமானம் மற்றும் அவரால் செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றின் மொத்த மதிப்பில் கணக்கிடப்படுகிறது. சிறுபிள்ளையின் வருமானம் பெற்றோரின் வருமானத்தில் சேர்க்கப் படும்போது ரூ.1,500 வரை விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. அதற்குமேல் உள்ள வருமானத்திற்கு பெற்றோர் வரி செலுத்த வேண்டும். இந்த வருமானத்தை (சிறு குழந்தைக்கு) நீங்கள் தவறவிடு கிறீர்களானால், நீங்கள் வரியுடன் அபராதம் செலுத்த வேண்டும்.

9. வருமானங்களை அதற்குரிய பகுதியில் அறிவிக்காதது

   ஐ.டி.ஆர் படிவத்தில் வருமானத்தின் தன்மை யைப் பொறுத்து அதற்குரிய கால அட்டவணையில் அறிவிப்பது அவசியம். உதாரணமாக, வரிவிலக்கு பெற்ற வருமானத்தை அதற்குரிய ஐ.டி.ஆர் படிவத்தில் ‘விலக்கு வருமானம்’ பகுதியில் குறிப்பிட வேண்டும்.

10. இழப்புகளை அறிவிக்கத் தவறுதல் (Claiming brought forward Loss)

முந்தைய ஆண்டு வருமான வரிப் படிவத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு, அதை இந்த ஆண்டுக்குக் கொண்டு வந்திருந்தால் (brought forward loss), அதனைத் தவறாமல் தற்போதைய வரிக் கணக்குத் தாக்கலில் காண்பிக்க வேண்டும். இதனால் உங்களது வரி குறையலாம் அல்லது ரீஃபண்டு அதிகரிக்கலாம். குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனில், உங்களது நஷ்டத்தை கேரி ஃபார்வர்டு செய்ய இயலாது.

11. அனைத்து வங்கிக் கணக்குகளையும் அறிவிக்காமல் இருப்பது

வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வரிதாரர் அனைத்து வங்கிக் கணக்குகளையும் (Except Domant Account) வங்கியின் பெயர், கணக்கு எண், ஐ.எஃப்.எஸ்.சி (IFSC) ஆகியவற்றைத் தங்களது வரிப் படிவத்தில் அதற்குரிய பகுதியில் தெரிவிக்க வேண்டும்.

12. குறைபாடுள்ள வரி நோட்டீஸ் (Defective)

சுய தொழில் வருமானம் காண்பிப்போர் லாப நஷ்டக் கணக்குகளையும் தாக்கல் செய்யா விட்டால், குறைபாடுள்ள நோட்டீஸ் (Defective Notice) வருகிறது. தவறான வரித்தாக்கல் பல அசெளகர்யங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே, மேலே குறிப்பிட்ட தவறுகளைத் தவிர்க்கவும். நீங்கள் தாக்கல் செய்யும் முறையில் நிறைவு இல்லையெனில், தயவுசெய்து உங்கள் ஆடிட்டரின் உதவியை அணுகுவது நல்லது. 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: