Daily Archives: ஜூலை 12th, 2018

அவசரம் இங்கே ஆரம்பம்!

மாறிவரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக யாருக்கு எந்த நோய், எப்போது வரும் என்று சொல்லமுடியவில்லை. இது ஒருபுறமிருக்க, தனித்திருக்கும் சூழலில் திடீரென ஏற்படும் மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு போன்றவை உயிரிழப்பு வரை கொண்டுபோய் விடுகின்றன. இவைதவிர ரத்தக்கசிவு, தீப்புண், எலும்பு முறிவு, மின்சாரத் தாக்குதல் போன்றவற்றாலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற அவசரகால

Continue reading →

ஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி? உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்!

ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் … பழங்களை பழுக்கவைக்க கார்பைடு கல்… இப்படி ஏற்கெனவே காய்கறிகள், இறைச்சி என உணவுப்பொருள்களில் ரசாயனக் கலப்படங்கள் நம்மை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் தமிழகத்தையே மிரளவைக்கும் புதுவரவு `ஃபார்மலின் தடவிய மீன்கள்.’  “இறந்தவர்களின் உடலை கெட்டுப்போகாமல்வைத்திருக்கப் பயன்படுத்தும் ஃபார்மலின் (Formalin) என்ற ரசாயனம் தடவிய மீன்களைச் சாப்பிட்டால், வயிற்றுவலி, வயிற்றுப்புண், ரத்தப் புற்றுநோய்… எனப் பல உடல்நலப் பாதிப்புகள் உண்டாகலாம்’’…  எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Continue reading →

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்!

ண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாத நிலவரப்படி, சிஸ்டமேட்டிக்  இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி)  கணக்குகளின் எண்ணிக்கை 2.23 கோடி யைத் தாண்டியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி முறையில்  ரூ. 7,304 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Continue reading →

உள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி!

செரிமான உறுப்புகள் மற்றும் சுரப்பிகளோடு சேர்ந்து, அஜீரணத் தொந்தரவுகளைத் தடுக்கும் அற்புத மருந்து இஞ்சி.  ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை இஞ்சியின் வேறு பெயர்கள். `காலையில் இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய்…’ என்பது எளிமையான ஆரோக்கியச் சூத்திரம். இப்படி, காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டால் உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது.

Continue reading →

வருவாள்… அருள்வாள்… வேப்பிலைக்காரி!

டி மாதம், அம்பிகை அவதரித்த பெருமையைப் பெற்றது. அம்பிகை பக்குவம் அடைந்ததாகச் சொல்லப் படும் மாதமும் இதுவே என்கின்றன ஞானநூல்கள்.

ஆடி என்றாலே, அது ‘அம்மன் மாதம்’ என்ற அளவுக்கு அம்பிகையின் அனைத்துக் கோயில்களிலும் விழா நடக்கும். மிக அற்புதமான இந்த மாதத்தில் அம்பிகையைக் கொண்டாடும் விதம், அம்மனின் மகிமைகள் சிலவற்றைப் படித்து மகிழ்வோம்; படிப்பதுடன் நின்றுவிடாமல், அருள் சுரக்கும் அவளின் ஆலயங்களுக்கும் நேரில் சென்று, அம்மையைத் தரிசித்து வழிபடுவோம். நம் இல்லத்திலும் உள்ளத்திலும் நிரந்தரமாகக் குடிகொள்ளும்படி அவளை வேண்டிக்கொள்வோம்.

`நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்… நல்லன எல்லாம் தரும்…’ என்று அபிராமிப் பட்டர் பாடியதற்கேற்ப, நல்ல எண்ணங்களை நம்முள் விதைத்து நாளும் நலமுடன் வாழ அருளும்படி அவளைப் பிரார்த்திப்போம்.

நமது இந்தப் பிரார்த்தனையால் மனம் கசிந்து நம் இல்லம் தேடி வருவாள், அருள் மழை பொழிவாள்… அந்த வேப்பிலைக்காரி!

புன்னை வனத்தில் புற்றின் வடிவில்!

Continue reading →