Advertisements

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்!

ண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாத நிலவரப்படி, சிஸ்டமேட்டிக்  இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி)  கணக்குகளின் எண்ணிக்கை 2.23 கோடி யைத் தாண்டியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி முறையில்  ரூ. 7,304 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரித்துவரும் நிலையில், அதில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான எட்டுக் காரணங்களைப் பார்ப்போம்.

1. குறைந்தபட்ச முதலீடு ரூ.500-ஆக இருப்பது. (சில ஃபண்டுகளில் ரூ.100-கூட முதலீடு செய்யலாம்)

2. தகுதி வாய்ந்த நிபுணர்களின் நிர்வாகம்

3. ரிஸ்க் பரவலாக்கம் – முதலீடு பல பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் பரவலாக்கம் செய்யப்படுகிறது.

4. முதலீட்டை எளிதில் பணமாக்குதல் – லிக்விட் ஃபண்டுகளில் சில மணி நேரங்களிலும்,  மற்றவற்றில் சில தினங்களிலும் வங்கி கணக்குக்குப் பணம் வந்துவிடும் வசதி உண்டு.

5. குறைவான ஃபண்ட் நிர்வாகச் செலவு – (அதிகபட்சம் 2.5 சதவிகிதம்தான்)

6. செபியின் கடுமையான விதிமுறைகள்

7. வருமான வரிச்சலுகை –  இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கும்,  ஈக்விட்டி ஃபண்டுகளில்  ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் கிடைக்கும் வருமானத்துக்கும் வரிச் சலுகை.

8. முதலீட்டை எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி, தொடரலாம்.

Advertisements
%d bloggers like this: