Advertisements

நாப்கின் அலர்ட்!

ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருள்களை ஆர்வத்துடன் விசாரித்து வாங்கும் பெண்கள்,  நாப்கின் வாங்கும்போது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அழகுப் பராமரிப்பு பற்றிப் பேசும் அளவுக்கு, மாதவிடாய் பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களைக்

கலந்துரையாடுவதில்லை. படித்த பெண்கள்கூட நாப்கின் பற்றிப் பேசவும் அது தொடர்பான சந்தேகங்களைக்  கேட்கவும் தயங்குகின்றனர். விளம்பரம், கவர்ச்சிகரமான பேக்கிங் என்பதன் அடிப்படையிலேயே நாப்கின்களைத் தேர்வுசெய்கின்றனர். தவறான நாப்கின் தேர்வு மற்றும் முறையற்ற பயன்பாடு, அவர்களுக்கு உடல்ரீதியாகப் பல தொந்தரவுகளைக் கொடுக்கும் அபாயம் உள்ளது’’ என்று எச்சரிக்கும், மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா, நாப்கின் வாங்கும்போதும், பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்களை விளக்குகிறார்.
‘‘நாப்கின்கள் நான்கு லேயர்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. முதல் லேயர், சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரால் ஆனது. மூன்றாவது லேயர், ஈரத்தை உறிஞ்சக்கூடிய பெட்ரோலியம் ஜெல்லால் ஆனது. நான்காவது லேயர், ஈரத்தை ஆடையில் கசியவிடாத, நாப்கினை உள்ளாடையுடன் ஒட்டவைக்கக்கூடிய பாலித்தீனால் ஆனது.

இவற்றில், இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. மேலும், ஹைப்போ குளோரைடு என்ற வேதிப்பொருளால் அந்த பேப்பர் பிளீச் செய்யப்படுகிறது. இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணியத் துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாற்றம் அடைகின்றன. புற்றுநோய்க்கான மூலக் காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதீத ரசாயனங்களால் உருவான  நாப்கினைத் தொடர்ந்து பயன்படுத்தும்போதும், மாதவிடாய் நாள்களில் கவனக்குறைபாட்டால் மேற்கொள்ளும்  ஆரோக்கியத்துக்கு எதிரான பழக்கங்களாலும் ஒவ்வாமை முதல் கருப்பைப் பிரச்னைகள் வரை ஏற்பட வாய்ப்புண்டாகிறது. எனவே, கீழ்க்காணும் விஷயங்களில் கவனம் செலுத்தவும்.
1. நாப்கின்கள் பளிச் வெண்மை நிறத்தில் இருக்க, அதில் பிளீச்சிங் ஏஜென்ட் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு பிளீச் செய்யப்பட்ட நாப்கினைப் பயன்படுத்தும்போது அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படலாம். எனவே, நாப்கின் வாங்கும்போது அதன் பேக்கிங் கவரில் ‘அன்பிளீச்டு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

2. பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஈரத்தை உறிஞ்சுவதற்கான ரசாயனங்கள், நறுமணத்துக்காகச் சேர்க்கப்படும் வாசனைத் திரவியங்கள் என நாப்கின் தயாரிப்பில் சேர்க்கப்படும் பொருள்கள் பல. இந்த நாப்கின்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது கருப்பை பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விலையுயர்ந்த ‘அல்ட்ரா தின்’, ‘ஜெல் டெக்னாலஜி’, ‘லீக்கேஜ் ப்ரூஃப்’ ரக நாப்கின்களைவிட, விலை மலிவான காட்டன் பேடுகளே பாதுகாப்பானவை.
3. நாப்கின் வாங்கும்போது, அது வாலன்டரி தரக்கட்டுப்பாடு  ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் 5405 பெற்றிருப்பதை உறுதிசெய்த பின்னர் வாங்கவும். அதேபோல, உற்பத்தி தேதி, காலாவதி தேதி போன்ற அடிப்படை விவரங்களையும் செக் செய்துகொள்ளவும்.
4. ஒவ்வொரு முறை நாப்கின் மாற்றும்போதும் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தம்செய்வது நல்லது. எக்காரணம் கொண்டும் பிறப்புறுப்பில் ஆன்டி செப்டிக் லோஷன், சோப் ஆகியற்றைப் பயன்படுத்தக்கூடாது.
5. நாப்கின்கள் அல்ட்ரா தின், ரெகுலர், மேக்ஸி, ஓவர் நைட், சூப்பர் எனப் பல ரகங்களில் கிடைக்கின்றன. ‘நீண்ட நேரம் ஈரத்தைத் தக்கவைக்க வல்லது’ என்று அவை விளம்பரப் படுத்தப்பட்டாலும், எந்த ரக நாப்கினைப் பயன்படுத்தினாலும், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொள்வது அவசியம். நாப்கின் ஈரத்தை உறிஞ்சியிருந்தாலும், அல்லது அதிகமாக உதிரப்போக்கு இல்லையென்றாலும்கூட, நாள் முழுக்க ஒரே நாப்கினைப் பயன்படுத்துவது தவறான பழக்கம். இரவு நேரங்களில்கூட சோம்பல் பார்க்காமல் நாப்கின் மாற்றுவது நல்லது.
6. மாதவிடாய் நாள்களுக்கெனத் தனி உள்ளாடைகளைப் பயன்படுத்தலாம். அவற்றை ஆன்டிசெப்டிக் லோஷனில் அலசி, வெயிலில் நன்கு காயவைத்துப் பயன்படுத்தலாம்.

7. ஈரம்பட்டுவிடக்கூடாது என்பதற்காகச் சில பெண்கள்  இரண்டு பேடுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது உண்டு. இது சில நேரங்களில் வலியை ஏற்படுத்தும். மேலும், பிறப்புறுப்பில் ஒவ்வாமை, சிறு கொப்புளங்கள் போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.
8. பயன்படுத்தவிருக்கும் நாப்கினை, பேக்கிங் பிரித்தபடி கைப்பை, டிரெஸ்ஸிங் டேபிள் எனப் போட்டுவைக்கும்போது, அங்கெல்லாம் உள்ள அழுக்கும் கிருமிகளும் நாப்கினில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. மேலும் நாப்கின் மாற்றக் கழிப்பறைக்குச் செல்லும்போது, கழிப்பறையின் ஜன்னல், கதவு, ஃபிளஷ் டாங்க் எனப் தூசு படிந்துள்ள இடங்களில் புதிய நாப்கினை வைக்கக்கூடாது. பிறகு, அதை அங்கிருந்து எடுத்துப் பயன்படுத்தும்போது, கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும். பயன்படுத்தவிருக்கும் நாப்கின், பேக்கிங் பிரிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பேப்பரில் சுற்றிச் சுத்தமான பாலிதீன் பைகளில் வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தவும்.
9. ஒவ்வொரு முறை  நாப்கின் பயன்படுத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சோப்பு பயன்படுத்திக் கழுவவும். பயன்படுத்திய நாப்கினை அப்புறப்படுத்திய பின் கைகளைக் கழுவாமல் பாக்கெட்டில் இருந்து புதிய நாப்கினை எடுக்கும்பட்சத்தில், பாக்டீரியாக்கள் கைகளின் மூலம் பரவி நோய்த்தொற்று ஏற்படும் என்பதால், அதைத் தவிர்க்கவும்.
10. நாப்கினை அப்புறப்படுத்துவதில் சமூக அக்கறை வேண்டும். ஃபிளஷ் செய்வது, கழிப்பறையிலேயே ஓர் ஓரத்தில் வீசிவிட்டு வருவது போன்ற பழக்கங்கள் தவறு. இது கழிப்பறையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு அருவருப்புடன் நோய்த்தொற்றையும் தரும். பயன்படுத்திய நாப்கினை பேப்பரில் சுற்றி, குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: