Advertisements

Daily Archives: ஜூலை 15th, 2018

ரஜினி கையில் இரட்டை இலை! – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை

அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி… இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.
‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம்.
‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி குறித்து முடிவெடுப் போம். தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’ என்று பேசினார் அமித் ஷா.’’

Continue reading →

Advertisements

படுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்

இன்றைய நவநாகரீக உலகில் குடும்ப சுமை, வேலைப்பழு, உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்களால் இரவில் உறக்கம் வராமல் தவிப்போம். இளைய தலைமுறையினர் பலரும் இரவில் தூக்கம் வராமல் சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொண்டு பெருமையாக எனக்கு இன்சேம்னியா என பதிவிட்டு கொண்டிருக்கின்றனர். ஆனால் மனிதன் ஒரு குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறங்குவது மிகவும் முக்கியம். அப்படி உறங்குவதன் மூலமே உடலின் சுழற்சி ஒரே சமநிலையில் இருக்கும். நமக்கும் ஆசை தான் சீக்கரம் தூங்கி சீக்கிரம் எழ வேண்டும் என்று. ஆனால் எப்படி தூங்குவது?

சுவாரஸ்ய டிப்ஸ்கள்
Continue reading →

இருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…

நம்மில் பெரும்பாலானோர் எதற்கு பயப்படுகிறோமோ இல்லையோ அடிக்கடி வரும் இருமலுக்கு கண்டிப்பாக அஞ்சி நடுங்குவோம். இருமலுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு சென்றால் வருடத்தில் பாதி நாள் மருத்துவ சுற்றுலா தான் செல்ல வேண்டும். சொத்தில் பாதியும் கையோடு கொண்டு செல்லதான் வேண்டும். என்னதான் மருத்துகள் சாப்பிட்டாலும் இருமல் உடனடியாக நிற்க அவை என்ன மாய மந்திரமா செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி
Continue reading →