Daily Archives: ஜூலை 16th, 2018

அஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…!’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்?

எம்.ஜி.ஆர் தலைமை!
‘நான்தான் தி.மு.க; தி.மு.கதான் நான்!’ என லாயிட்ஸ் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 1972 அக்டோபர் 8-ம் தேதி முழங்கினார் எம்.ஜி.ஆர்! தி.மு.க-விலிருந்து அவர் நீக்கப்பட்டதும் நடைபெற்ற கூட்டம் அது. அதில் அப்படிப் பேசிய எம்.ஜி.ஆர், அடுத்த ஒன்பதே நாள்களில், அ.தி.மு.க-வை ஆரம்பித்தார். ‘அண்ணாயிசமே’ அ.தி.மு.க-வின் கொள்கை என்றார். கறுப்பு-வெள்ளை-சிவப்பு என்ற மூன்று நிறப்பட்டைகளுக்கு நடுவில் தாமரைப் பூ அச்சிடப்பட்ட, அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றக் கொடியைக் கொஞ்சம் மாற்றினார். கொடியின் நடுவில் இருந்த தாமரைப்பூவை நீக்கிவிட்டு, அண்ணாவின் படத்தை வைத்தார். அதை அ.தி.மு.க கொடியாகப் பறக்கவிட்டார்.எம்.ஜி.ஆர் என்ற நடிகருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள், எம்.ஜி.ஆர் என்ற தலைவருக்குப் பின்னால் அ.தி.மு.க தொண்டர்களாகத் திரண்டனர்.

Continue reading →

நமக்கு என்ன பிரச்னை?’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா?

ஆயிரம் கனவுகளோடு மணவாழ்க்கையில் காலடி எடுத்துவைப்பவர்களில், சிலரால் மட்டுமே கனவுகளை நிஜமாக்க முடிகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கைமுறை வேறுபட்டாலும், பிரச்னை என்னவோ ஒரே வட்டத்துக்குள்தான் பயணிக்கிறது. அதில் வேலைப்பளு, பணம், வீட்டுடைமை மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்னைகள்தான் அதிகம்.

கணவன்-மனைவிக்கிடையே புரிதல் இல்லாமலும், தீர்வை நோக்கி நகராமல் கிளைகள்போல் பிரச்னையை உருவாக்குவதிலும் இருக்கும் வேகம், பிரச்னையை எப்படித் தடுக்கலாம், வந்தாலும் எப்படிச் சமாளிக்கலாம் என்பதில் ஏனோ முதல் கியரிலேயே நின்றுவிடுகிறது. 

திருமண வாழ்வில் அதிகம் ஏற்படும் பிரச்னையும் அதற்கான தீர்வையும் இனி பார்ப்போம்…

வீடா… அலுவலகமா?

Continue reading →

வரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்!

ம்பளதாரர்கள் மட்டுமல்ல, சுயதொழில் உள்ளிட்ட பிற தொழில்மூலம் வருமானம் ஈட்டுபவர்கள், தங்களது ஆண்டு வருமானம், வருமான வரி வரம்புக்குள் வரவில்லை என்பதால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது குறித்து யோசிப்பதே இல்லை. இன்னும் சிலர், வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் கூட, உரியக் காலத்தில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல்  தள்ளிப்போடுகிறார்கள். மற்றொரு பிரிவினர், வங்கிக் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் சூழ்நிலை வரை வருமான வரிக் கணக்கினைத் தாக்கல் செய்வதில்லை. வருமான வரித் துறையும் அனைவரும் உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யத் தவறும் தனிநபர்களுக்கு, அதுகுறித்து உடனடியாக நோட்டீஸ் அனுப்புவதில்லை என்பதால், அவர்கள் இதில் எந்த அவசரமும் காட்டுவதில்லை.

Continue reading →

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி?

நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம். குறிப்பாக ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகளை அகற்றினால் புத்துணர்ச்சியோடு செயல்பட முடியும்’’ என்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.

“உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும் பல்வேறு நோய்த் தொல்லைகளுக்கு ஆளாகிறோம். 

Continue reading →

வலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்!

திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில், சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது, அருள்மிகு வலுப்பூரம்மன் கோயில். வலிப்புநோயால் பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கு, அந்த நோய் நீங்க வரம் கிடைக்கிறது, இந்த அன்னையின் சந்நிதானத்தில்.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ தேசத்தை ஆண்டு வந்த விக்கிரமச் சோழ மகாராஜாவின் மகள் மைக்குழலாள் என்பவளுக்கு உடலில் வலிப்புநோய் உண்டாகியது. பிணியால் மிகவும் அவதியுற்று வந்தவளுக்கு, வைத்தியர்கள் பலர் சிகிச்சையளித்துப் பார்த்தார்கள்.  ஆனாலும் எந்த வைத்தியத்துக்கும் நோய் கட்டுப்படவில்லை.

இந்த நிலையில், கொங்குநாட்டில் இருக்கும் `மேலைச் சிதம்பரம்’ என்ற ஊருக்கு மகளை அழைத்துச் சென்றால் வலிப்பைக் குணமாக் கிக் கூட்டி வரலாம் என்றனர் அனுபவம் வாய்ந்த சில பண்டிதர்கள்.
அவ்வண்ணமே படை பரிவாரங்கள் சூழ, தன் மகளை அழைத்துக் கொண்டு கொங்குநாட்டை நோக்கிக் கிளம்பினார் மகாராஜா.

கனவில் வந்தாள்… கட்டளையிட்டாள்!

Continue reading →