Advertisements

Daily Archives: ஜூலை 18th, 2018

மருத்துவ காப்பீட்டில் மறுசீரமைப்பு!

பிளாஸ்டிக் சர்ஜரி’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மூக்கை நேராக்க, உதிர்ந்த முடியை ஒட்ட என, வெளித் தோற்றத்தை சரி செய்வதற்கான, அழகு அறுவை சிகிச்சை என்று தான் நினைக்கிறோம்.
வெளித் தோற்றத்தை சரி செய்வதற்கும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறோம். ஊடகம், சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு தோற்றம் முக்கியம்.
அழகிற்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி, வெறும், 20 சதவீதம் மட்டுமே. 80 சதவீதத்திற்கும் அதிகமாக, மறுசீரமைப்பிற்கான அறுவை சிகிச்சை தான் செய்கிறோம்.

Continue reading →

Advertisements

எடை கூட்டும் பாக்டீரியா!

புரோபயாடிக்’ எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள், போதுமான அளவு ஜீரண மண்டலத்தில் இருப்பது ஆரோக்கியம் என்பது தெரிந்த விஷயம். செரிமானத்திற்கும், சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் தேவை.
புரோபயாடிக் நன்கு பெருக, நார்ச்சத்து நிறைந்த, ‘பிரிபயாடிக்’ உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல பாக்டீரியாவின் உணவு, நார்ச்சத்து.
நார்ச்சத்தை, நம்முடைய செரிமான மண்டலத்தால் செரிக்க முடியாது.

Continue reading →

கொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்!

இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பூச்சிகளுள் கொசு முதலிடத்தில் உள்ளது.  ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் கொசுக்களால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளால் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சமாளிக்க கொசுபத்தி சுருள், எலெக்ட்ரிக்கல் லிக்யூட், உடற்பசை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த ரசாயன தயாரிப்புகள் மோசமான பக்கவிளைவுகளை உண்டாக்கக் கூடியவை.

Continue reading →

எக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்!

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.
நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.

Continue reading →

பரு ஏன் வருகிறது

முகப்பருவைக் கட்டுப்படுத்த எந்த மாதிரியான  டிரீட்மென்ட்டை அழகு நிலையங்களில் தருகிறார்கள் என்பதை  சற்றே விரிவாகப் பார்க்கலாம்.
எந்த வகையைச் சேர்ந்த முகப்பரு உங்களைப் பாதித்திருக்கிறது என்பதை முதலில் அறிய வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும்  முகப்பரு மற்றும் உடல் சூட்டினால் தோன்றும் முகப்பரு போன்றவை முதல் மூன்று வகையான சாதாரண முகப்பருவிற்குள் அடங்கும். இந்த வகை  முகப்பரு பிரச்சனைக்கும் அதற்கென தேர்ச்சி பெற்ற அழகுக்கலை வல்லுநர்களை அணுகி சாதாரணமான டிரீட்மென்ட்களை அழகு நிலையங்களிலேயே  எடுத்துக்கொள்ளலாம். நான்காவது வகை மட்டுமே அப்நார்மல் வகையைச் சேர்ந்த முகப்பருவாகும்.

Continue reading →

வலியின் மொழி அறிவோம்!

வலி என்பது உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளை உணர்த்தும் மொழி.  உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது வலியாக வெளிப்படவேண்டும், அல்லது சருமத்தில் ஏதேனும் மாற்றம் உருவாக வேண்டும். அப்போதுதான் பிரச்னை என்னவென்று உணரமுடியும். வலிகளின் பின்னணி, தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

Continue reading →