Daily Archives: ஜூலை 20th, 2018

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..?; இதோ எளிய குறிப்புகள்…!

தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன்  தெரியும்.
Continue reading →

வாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா?

: வாட்ஸ் ஆப்பில் இனி ஒரு மெசேஜை ஐந்து பேருக்கு மட்டுமே பார்வேர்ட் செய்யும் வகையில் கட்டுப்பாடு வர இருக்கிறது. வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டில் இந்த வசதி வர உள்ளது.

வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் நிறைய முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் கூட வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
Continue reading →

தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…

எண்ணெயில் பொரிக்காமல் தயிர் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் சேர்த்து நெருப்பில் சுட்டு எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை இறைச்சிகள் தற்போது அசைவப் பிரியர்களில் அதிகமானவர்களை ஈர்த்து வருகிறது.

இதுபோன்று தணலில் வேக வைத்த தந்தூரி இறைச்சி வகைகளை சாப்பிடலாமா? நமது உடலுக்கு அது உகந்ததுதானா என்று இரைப்பை மற்றும் Continue reading →

மன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்!

டென்ஷன் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழலில் Stress Ball அதற்கு இணையான பலனைத் தரும்’’ என்கிறார் உளவியல் ஆலோசகரான அபர்னா.
கோபத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் கட்டுப்படுத்த Stress ball பயன்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இருப்பவரை நிதானப்படுத்தி நம்முடைய சிந்தனைகள் சரிதானா என்று எண்ணி பார்க்க வைக்கிறது. எதற்காக கோபப்படுகிறோம் என அறியாமலேயே கோபத்தை வெளிப்படுத்துகிறவர்கள் இந்த பயிற்சியினை எடுத்தால் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும்.

Continue reading →

ஒமேகா என்பது என்ன?!

உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் அடிக்கடி குறிப்பிடுகிற வார்த்தைகளில் ஒன்று ஒமேகா. மருத்துவ இதழ்களின் கட்டுரைகளிலும் இந்த ஒமேகா அதிகம் இடம் பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். இந்த ஒமேகாவுக்கு நம் ஆரோக்கியத்தில் அப்படி என்ன முக்கியத்துவம்?!

* ஒமேகா(Omega) என்பது நன்மை செய்யும் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்தது. இந்த வகை கொழுப்பு அமிலத்தை நமது உடலில் உருவாக்க முடியாது. எனவே, இதனை உணவின் மூலம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

* மூளையின் செயல்பாடு, நினைவாற்றல், புத்திசாலித்தனம் இவற்றை வளர்க்க ஒமேகா உதவும். மனச்சோர்வு, இதர மனநோய்களின் சிகிச்சைக்கும் பயன்படுகிறது. Continue reading →

இடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்!

மனித உடலிலுள்ள நூற்றுக்கணக்கான மூட்டு இணைப்புகளில் மிக முக்கியமானது இடுப்பெலும்பு. நமது இயக்கத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவுவதும் இதுதான். அதே சமயம் அதிக பிரச்னைகளுக்குள்ளாகிற பகுதியும் இதுதான்.
ஆரோக்கியமான இடுப்பெலும்பு அமைப்பானது ஃபெமர் எனப்படுகிற தொடை எலும்பை முன்னோக்கி, பின்னோக்கி, உள்பக்கமாக, வெளிப்பக்கமாக என எல்லா திசைகளிலும் இயங்க உதவக்கூடியது. இதன் மூலம் உடற்பயிற்சி செய்வது, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது, பேருந்து களில் ஏறி, இறங்குவது, காருக்குள் ஏறுவது, படுக்கைக்குச் செல்வது என அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் சீராக நடக்கின்றன.

Continue reading →