மன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்!

டென்ஷன் நிறைந்த இன்றைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் செய்யலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றுக்கு நேரம் ஒதுக்க முடியாத சூழலில் Stress Ball அதற்கு இணையான பலனைத் தரும்’’ என்கிறார் உளவியல் ஆலோசகரான அபர்னா.
கோபத்தையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் கட்டுப்படுத்த Stress ball பயன்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இருப்பவரை நிதானப்படுத்தி நம்முடைய சிந்தனைகள் சரிதானா என்று எண்ணி பார்க்க வைக்கிறது. எதற்காக கோபப்படுகிறோம் என அறியாமலேயே கோபத்தை வெளிப்படுத்துகிறவர்கள் இந்த பயிற்சியினை எடுத்தால் அவர்களுக்கு முழு பலன் கிடைக்கும்.

ஸ்ட்ரெஸ் பால் என்பது மன அழுத்தத்துக்கு மட்டுமல்ல; உடல் எடை ஏற்றத்துக்கும் உதவுகிறது. மேலும் இதை பயன்படுத்த வயது வரம்பு ஏதுமில்லை. எல்லா தரப்பினரும் உபயோகித்துப் பயன் பெறலாம். பொதுவாக, மிகுந்த மன அழுத்தத்தாலேயே கோபம்  உருவாகிறது. இந்த பந்தானது நம் உடலில் உள்ள மன அழுத்தத்தை கட்டுப்படுத்தப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் கோபத்தை எளிதாகக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஸ்ட்ரெஸ் பந்தை உள்ளங்கைகளில் வைத்து, நன்றாகப் பிடித்துக் கொள்ளவும். முடிந்த அளவுக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும். இதேபோல் 5 விநாடிகள் வரை பந்தை அழுத்திய நிலையிலேயே இருக்கலாம்.
இந்த பயிற்சியை 2 கைகளிலும் தலா 5 முறை வரை செய்யலாம். கோபம் வரும்போதெல்லாம் ஸ்ட்ரெஸ் பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. கண்களை மூடி சிறிது நேரம் நம்மை நாமே அமைதிப்
படுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஸ்ட்ரெஸ் பாலின் பயன்கள்…
மன அழுத்தத்தைக் குறைக்கும் ஸ்ட்ரெஸ் பந்தை நன்கு அழுத்தும்போது உங்களின் மேல் கை தசை மணிக்கட்டு இறுகும். அதனை விடும்போது தசை கடுமையிலிருந்து தளர்வு அடையும். இதனால் உங்களின் மன அழுத்தம் சற்று குறையும். சாதாரணமாக இந்த பந்தை பயன்படுத்துவதால் ரத்த ஓட்டம் சீரடையும். நரம்புகளைத் தூண்டும் நமது கைகளில் நிறைய நரம்புகள் உள்ளன.
அதில் சில நரம்புகள் நமது மூளையை இணைக்கிறது. நீங்கள் ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்தும்போது உங்கள் கைகளில் இருக்கும் நரம்புகள் தூண்டப்பட்டு, மூளை இருக்கும் நரம்புகளுக்கு செல்லும் மற்றும் எண்டார்பின் (மூளையில் இருக்கும் வலி) தூண்டி அதனை வெளியிட உதவுகிறது.
மன அழுத்தத்துக்கு எதிராக போராடுகிறது, மன நிலையை மேம்படுத்துகிறது மற்றும் வலியை எதிர்த்து போராடுகிறது. காயங்களிலிருந்து காக்கிறது
நாம் தொடர்ச்சியாக செய்யும் செயல்கள் சாதாரணமாக கணினியில் டைப் செய்யும்போது, ஓவியம் வரையும் போது அல்லது ஏதேனும் எடை அதிகமான பொருட்களை இசைக்கருவிகள் மற்றும் மொபைல் போன்களை தொடந்து பயன்படுத்தும்போது நமது விரல்கள் மற்றும் மணிக்கட்டு அடிக்கடி பழுதடைய வாய்ப்பு உள்ளது. தசை மணிக்கட்டு மற்றும் கைகள் சிறப்பாக இயக்கவும் உள்காயத்திலிருந்தும் காக்கிறது. இந்த பயிற்சியினைச் செய்ய டென்னிஸ் பந்து போல கடினமான பந்துகளைப் பயன்படுத்தக் கூடாது.
கவனத்தை திசை திருப்புகிறது ஸ்ட்ரெஸ் பந்தை விளையாடுதல் மற்றும் அழுத்துவதால் நாம் எதற்காக வருந்துகிறோமோ அல்லது கோபப்படுகிறோமோ அதிலிருந்து நம்மை திசை திருப்பி தேவையற்ற சிந்தனைகளை புத்தியிலிருந்து நீக்க உதவுகிறது. இதனால் நமது புத்தி மற்றும் மனது இரண்டும் சிறிது நேரத்திலேயே நிம்மதி அடைந்து இயல்பு நிலையை அடைய உதவுகிறது.

%d bloggers like this: