Advertisements

வழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா..? அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..!

எவ்ளோதான் எண்ணெய் தேய்ச்சாலும் இந்த முடி மட்டும் வளரவே மாட்டுதே..’ அப்படினு வருத்தமா..? இல்ல என்னதான் ஷாம்பூ போட்டாலும் தலைமுடி கொட்டிக்கிட்டே இருக்கேனு மன உளைச்சலா..? இப்படி பல மன கசப்புகள் நம்மக்குள் அன்றாடம் இருக்கத்தான் செய்கிறது. இதுக்கெல்லாம் தீர்வே இல்லையானு கேட்குறீங்களா..?

உங்கள் தலைமுடி சம்மபந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த 10 பழங்களே எளிமையான தீர்வாக இருக்குங்க…! உங்கள் உணவு பழக்கத்தில் இந்த 10 பழங்களை சேர்த்து கொண்டாலே முடியின் வளர்ச்சி செம்மையாக இருக்கும். இனி முடி வளர்ச்சிக்கான பழங்களை பற்றி தெரிஞ்சிக்கலாம்…

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1 நெல்லிக்காய்

நெல்லி கனி முடியின் வளர்ச்சிக்கு அதிகம் உதவக்கூடிய அற்புதமான கனி. தலை முடிக்கு மட்டுமில்லாமல் உடல் சார்ந்த எல்லா பிணிகளுக்கு நலம் தரக்கூடியது. “அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த அதியமான்” அப்படினு வரலாறே இருக்குங்க. இதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம் நெல்லிக்கனி எவ்வளவு பயம்தரக்கூடியதுனு. அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கொண்ட இந்த நெல்லி கனியை தினமும் சாப்பிட்டாலே உடலுக்கு எந்தவித வியாதிகளும் வராது என்றே ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நெல்லிக்காயை எண்ணெய்யாக தயாரித்து பயன்படுத்தினால் முடியின் வேர்கள் உறுதி பெற்று நன்றாக வளரும்.

#2 எலுமிச்சை

அதிக அளவில் வைட்டமின் சி கொண்ட இந்த எலுமிச்சை முடியின் வளர்ச்சியை நன்கு ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல், அடர்த்தி குறைதல், முடி உடைதல் போன்ற பலவித முடி சார்ந்த பிரச்சனைகளுக்கும் எலுமிச்சை நல்ல தீர்வாக இருக்கும். இளநரையை தடுக்கவும் எலுமிச்சை பயன்படுகிறது. தலைக்கு குளிக்கும் போது 1 எலுமிச்சையை நன்றாக தேய்த்தது குளித்தால் முடிக்கு அதிக வலுவை ஏற்படுத்தும். பொடுகு தொல்லையை நீக்க இது பெரிதும் உதவுகிறது. தலையின் அடி வேரில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய எலுமிச்சை வழி செய்கிறது.

#3 வாழைப்பழம்

இது புதுமையான ஒரு தகவல்தான். உடலின் பல உறுப்புகளுக்கு நன்மை தரக்கூடிய இந்த வாழைப்பழம் முடி கொட்டும் பிரச்சனைக்கும் விடை தருகிறது என்றால் அது ஆச்சரியத்துக்குரியதே. ஆமாங்க… வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் முடியை மென்மையாக இருக்க பயன்படுகிறது. வாழை பழத்தை நன்கு அரைத்து அந்த பேஸ்டை தலைக்கு தடவினால் முடியின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும்.

#4 ஸ்ட்ராவ்பெர்ரி

அதிக காப்பர், மங்கனீஸ், மற்றும் மெக்னீசியம் உள்ள இந்த ஸ்ட்ராவ்பெரியை சாப்பிட்டால் முடியின் இலகு தன்மை நீடிக்கும். பூஞ்சை போன்றவற்றால் உங்கள் தலை முடி பாதிக்கப்பட்டால் அதற்கு கவலை வேண்டாம். ஒரு ஸ்ட்ராவ்பெரி பழமே போதுங்க. முடியின் அடி வேரை உறுதியாக வைக்க இந்த பழம் உதவுகிறது. முடி உதிரும் பிரச்சனைக்கும் இந்த பழம் முற்றுப்புள்ளி வைக்கிறது.

#5 ஆப்பிள்

உங்கள் முடி அதிக பொடுகுடன் உள்ளதா..? அதனை சரி செய்ய ஆப்பிள் சிறந்த மருந்து. ஆப்பிளை நன்கு அரைத்து அதனை தலையில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு பின்பு மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு தொல்லை நீங்கிவிடும். அதோடு தலையின் pH அளவை சமநிலையில் வைக்கிறது. இதனால் முடி கொட்டும் பிரச்சனையும் தீர்ந்து விடும்.

#6 பப்பாளி

தலையில் சொட்டையா…? முடி வளரவே மாட்டுதா..? இதற்கு ஒரு அருமையான தீர்வு பப்பாளியே. இதில் உள்ள வைட்டமின் சி, அதிக நார்ச்சத்துக்கள் முடியின் வழுக்கை தன்மையை குணப்படுத்த கூடிய ஆற்றல் பெற்றது. மேலும் முடியை மிக பொலிவுடன் வைக்க செய்கிறது. பப்பாளியை தலையில் பேஸ்ட் போல செய்து தடவி வந்தால் முடியின் அடி வேர் உறுதியடையும்.

#7 வெள்ளரிக்காய்

இதில் உள்ள வைட்டமின் சி,எ, மற்றும் சிலிக்கா போன்ற தாது உப்புகள் வறண்ட தலையை ஈரப்பதத்துடன் வைக்க பயன்படுகிறது. முடியின் வளர்ச்சி நின்று விட்டால் அதனை சரி செய்து மறுவளர்ச்சிக்கு துணை புரிகிறது. அத்துடன் முடி வேகமாக வளரவும், முடி உதிர்வதை தடுக்கவும் செய்கிறது. இதில் உள்ள அதிக நீர்சத்து தலையின் தட்பவெப்பத்தை குளுமையாக வைக்க உதவுகிறது.

#8 மாதுளை

உங்கள் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றால் மாதுளை ஓன்றே போதும்ங்க. மாதுளை சாற்றை தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசினால் முடி மென்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். தலையில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் மாதுளை அதனை குணப்படுத்துகிறது. பொடுகு தொல்லை, பேன்களால் அழுக்கு சேர்தல் ஆகிய அனைத்தையும் சரி செய்கிறது.

#9 தேங்காய்

பொதுவாக முடியை பற்றி பேசினாலே அதில் முதல் இடத்தில் இருப்பது தேங்காய்தான். உடலுக்கும், தலை சார்ந்த அனைத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிக பெரிய நண்பனாக இருக்கிறது. தேங்காயை எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி அதிக வளர்ச்சி அடையும். அத்துடன் தலையில் உள்ள துளைகளை விரிவடைய செய்து முடி உதிர்வதை தடுக்கிறது. உடலின் உஷ்ணத்தையும் சீரான அளவில் வைக்கவும் உதவியது.

#10 கொய்ய பழம்

மிக அற்புதமான பழங்களில் ஓன்று இந்த கொய்யா. பொதுவாக உடலின் அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இந்த பழத்தை சாப்பிட்டாலே போதும். அத்துடன் முடியின் வேரை செம்மைப்படுத்தவும் கொய்யா உதவுகிறது. தலையில் அதிகம் பொடுகு சேர்ந்தால் அதனை நீக்கவும் பயன்படுகிறது.

Advertisements
%d bloggers like this: