Daily Archives: ஜூலை 23rd, 2018

பலவானே புத்திமான்!

ஆரோக்கியமான உடல் தகுதி கொண்ட குழந்தைகள் கல்வித்திறனிலும் சிறந்து விளங்குகிறார்கள்’ என்று ஸ்பெயினிலுள்ள University of Grenada-வின் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கூறியிருக்கிறது.
இந்த ஆய்வுக்காக 8 முதல் 11 வயது வரையுள்ள 101 குழந்தைகளின் கல்வித்திறனை ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டனர். நல்ல உடல் உறுதி கொண்டவர்கள் மற்றும் உடல் உறுதி மோசமானவர்கள் என இருபிரிவுகளாக இவர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களின் அறிவுத்திறனை பரிசோதிக்கும் விதத்திலான கேள்விகள் கேட்கப்பட்டது.

Continue reading →

கடன் வலையில் உங்களைச் சிக்க வைக்கும் ஐந்து அறிகுறிகள்!

டன் வாங்குவது எப்போதுமே மோசமான விஷயமல்ல. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள், நமது முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளைத் தருகின்றன.  உதாரணமாக, வீட்டுக் கடனை எடுத்துக்கொள்வோம். வீட்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. வீட்டுக்கான மொத்தப் பணத்தையும் சேர்த்து வைத்து வீடு வாங்க நினைத்தால், இந்த ஜென்மத்தில் உங்களால் வீடு வாங்க முடியாது. ஆனால், வீட்டுக் கடன் மூலம் உங்கள் சொந்த வீட்டுக் கனவு நிறைவேறும். காலம் செல்லச்செல்ல நீங்கள் வாங்கிய வீட்டின் மதிப்பும் உயரும். 

Continue reading →

நீரிழிவோடு வாகன இயக்கமா? – கவலை வேண்டாம்… கவனம் தேவை!

வ்வளவு கவனமாக சாலை விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டினாலும், எதிரே வருபவர் ஒழுங்காக வராவிட்டால் அது விபத்துக்குக் காரணமாகிவிடும். வாகனம் என்பதும் ‘கில்லிங் மெஷின்’தான். அதை இயக்க உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும்.  சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் வாகனங்களை இயக்குவதில் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் விவரிக்கிறார் சர்க்கரை நோய் மருத்துவர் சி.பி.ராஜ்குமார்.

“சர்க்கரை நோயாளிகள் வாகனங்கள் ஓட்டவே கூடாது என்று சிலர் பயமுறுத்துவார்கள். அது தவறு. இன்சுலின் எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் இருப்பவர்களும் பேருந்து முதல் லாரி வரை பல்வேறு வாகனங்களை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடித்தால் பாதுகாப்பான பயணம் சாத்தியமே.

ஹைப்போகிளைசீமியா (Hypoglycemia)

Continue reading →

மன அழுத்தம் குறைக்கும் மருத்துவ முகமூடி!

போட்டோஷாப் கொண்டு என்ன செய்ய முடியும்?
புகைப்படங்களைப் புதிய பொலிவுடன் மாற்ற முடியும். ‘வாவ்’ என்று வியக்கும் விதத்தில் அதில் கற்பனையைக் கலக்க முடியும். இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் மாற்றி அமைக்க முடியும். இன்னும் பலவும் செய்ய முடியும். ஏன், போட்டோஷாப் கொண்டு ஏமாற்றி ஆட்சியையே பிடிக்க முடியும்.

Continue reading →

நீடிக்காத ரெய்டு… நிதின் கட்கரி காரணமா?

நெருங்குகிறது க்ளைமாக்ஸ் என்று கூறியிருந்தார் கழுகார். ஆனால், நடப்பதையெல்லாம் பார்த்தால் ஆன்டி க்ளைமாக்ஸாகிவிடும் போலிருக்கிறதே!’’

கழுகார் உள்ளே வந்துகொண்டிருக்கும் நேரம் பார்த்து, அவர் காதில் விழுவதுபோல சொல்லிக் கொண்டிருந்தோம்.

‘‘ஆஹா, எனக்கும்கூட உளவாளிகளை வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே… நீங்கள் நினைக்கும் க்ளைமாக்ஸுக்கு பிறகு வருகிறேன்’’ என சிரித்தபடியே சொன்ன கழுகார், “தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரின் கவனமும் கிறிஸ்டி மற்றும் எஸ்.பி.கே குழுமங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டுகளில் பதிந்திருக்க, இன்னொரு விவகாரத்தைக் கையிலெடுத்து சத்தமில்லாமல் சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது வருமானவரித் துறை’’ என்று தொடர்ந்தார்.

Continue reading →