Daily Archives: ஜூலை 24th, 2018

அன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை !

மனித உடலில் மிக அற்புதமான படைப்பு கால் பாதங்கள். நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் மூலம் நம்மை நடக்க வைக்கின்றன பாதங்கள்.

நாம் எவ்வளவு எடை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நம்மை தூக்கி சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப்பருவம் முதல் வயோதிகக் காலம் வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களை நாம் சிறப்பாகப் பராமரிக்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலியும், பிரச்னைகளும் தோன்றும்போதுதான் பலருக்கும் பாதங்களின் பயனே தெரிய வருகிறது. Continue reading →

அழகே… என் ஆரோக்கியமே…

அழகியல் துறையின் அசைக்க முடியாத சிகிச்சை!
அழகியல் மற்றும் சரும நல மருத்துவத்துறைகளில் Platelet Rich Plasma Therapy என்கிற PRP முக்கிய பங்களிக்கிறது. பிளாஸ்டிக் சர்ஜரி, முகப்பொலிவு சிகிச்சை, முடி மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றில் இந்த சிகிச்சை இன்றியமையாதது. ரத்த அணுக்கள் அதிகம் உள்ள Platelets-ஐ தட்டணுக்கள் என்று அழைப்பார்கள்.இந்த செல்களின் முக்கிய வேலை நமக்கு அடிபடும்போது ரத்தப்போக்கு ஏற்படுவதைத் தடுப்பது. அதனால்தான் சிறிது ரத்தம் வெளியேறியவுடன் தானாகவே அது நின்றுவிடும். வழக்கமாக ஒரு க்யூபிக் மில்லி மீட்டர் ரத்தத்தில் 4 லட்சம் வரை இந்த செல்கள் இருக்கும். டெங்கு காய்ச்சல் வரும் சிலருக்கு நோயின் வீரியம் அதிகம் இருந்தால், இந்த பிளேட்லெட்டின் அளவு மிக குறையும்போது, உடலில் பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிடும். அந்த அளவுக்கு நம் ரத்தத்தில் உள்ள ஒரு முக்கியமான செல் இது.

Continue reading →

நல்ல பொழுதுபோக்குகள் நலம் தரும்!

‘பொழுதுபோக்கு என்பது வெறுமனே நேரத்தை செலவழிப்பதற்காகவும், இன்பத்தைத் துய்ப்பதற்காகவும் மட்டுமே அல்ல. முறையாக மேற்கொள்ளப்படும் நல்ல பொழுதுபோக்குகள் பல்வேறு நன்மைகளையும் தருகிறது’’ என்கிறார் உளவியல் மருத்துவர் பிரிசில்லா.எந்த வகையில் நன்மைகளைத் தருகிறது என்று கேட்டோம்…
‘‘அன்றாட வாழ்வில் பொருளாதார ஈட்டுதலுக்கான வேலையை செய்யும் ஒருவர்  அதிலிருந்து சற்று விலகி தனக்காகவும்  தன்னுடைய மகிழ்ச்சிக்காக தனியாகவோ, நண்பர்கள் அல்லது உறவினர்களுடன்  பொழுதை கழிக்க விரும்புவது இயல்பானதுதான்.
அதுபோல பொழுதுபோக்கு என்பது ஒருவருடைய மகிழ்ச்சியைச் சார்ந்த விஷயமாகும். தன்னைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும் பொழுதுபோக்குதான். 

Continue reading →

ஆஹா… எலக்ட்ரானிக் சருமம்!

போர் மற்றும் விபத்துகளால் கை, கால்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்ட செயற்கை உறுப்புகள் இரும்பு, மரம் போன்ற கடினமான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. ஆனாலும், அவை இயல்பான தோற்றத்திலிருந்து வடிவிலும், செயல்பாட்டிலும் மாறுபட்டு பயனாளர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுப்பதாய் இருந்தன.
பின்னர் எடை குறைந்த பிளாஸ்டிக், அக்ரிலிக், கார்பன், பாலிஎதிலின் போன்ற பொருட்களால் ஆன செயற்கை உறுப்புகள் பயன்பாட்டை எளிதாக்கின. இன்றோ 3D  பிரிண்டிங் தொழில் நுட்பத்தின் மூலம், செயற்கை உறுப்புகளின் இயக்கத்தை மனதால் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Continue reading →