Advertisements

Daily Archives: ஜூலை 25th, 2018

காதல் எங்கிருந்து வருகிறது? – உளவியலும் அறிவியலும்

காதல்… மனித உணர்வுகளில் ஒன்றாகத் தன்னை நிலைநிறுத்தி, எவ்வளவு முயன்றாலும் அடக்க முடியாமல், தன்னை வெளிக்காட்டியே தீரும் ஓர் அனிச்சைச் செயல். காதலில் விழுந்தவுடன் நம் செயல்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. “டிவில பாட்டே கேட்காதவன், லவ் சாங்க்ஸ் போட்டா சேனல் மாத்த விட மாட்டேங்கறான். பல்லு வெளக்குறதுல இருந்து பக்கோடா சாப்பிடற வரைக்கும் எல்லா டைமும் போனைக் கையிலேயே வெச்சிருக்கான். ஒண்ணு மெசேஜ் அனுப்பறான்… இல்லனா ஹெட்செட் போட்டுட்டு போன் பேசறான்” எனக் காதலில் விழுந்தவர்களின் நண்பர்கள் பெரிய லிஸ்டே போடுவார்கள்.  ஆனால், காதல் குறித்துப் பேச, அதன் காரணி மற்றும் விளைவுகள் குறித்து அறிவியல் ரீதியாக விவாதிக்க நாம் என்றாவது முற்பட்டிருக்கிறோமா? காதல் உணர்வு எப்படித் தோன்றுகிறது? அது பிறக்கும்போது நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? காதலின் உளவியலும் உடலியலும் அறிவோமா?

காதல் எங்கு உயிர்பெறுகிறது?

Continue reading →

Advertisements

பி.ஜே.பி அரசை எதிர்ப்போம்! – 37 எம்.பி-க்கள் கலகம் – விழிபிதுங்கும் எடப்பாடி

ந்தமர்ந்த வேகத்தில் நம் பக்கம்கூட திரும்பாமல், தன் மொபைல் போனை ‘டச்’சிக் கொண்டே இருந்தார் கழுகார். நாம் அவ்வப்போது பேசிய வார்த்தைகளும் அவர் காதில் விழவே இல்லை. சட்டென்று எழுந்துபோய் அவரை நாம் கட்டிக்கொள்ள… கொஞ்சம் ஆடிப்போனவராக, நம்மைத் தட்டிக்கொடுத்தார். ‘‘அடடே… கட்டிப்பிடி வைத்தியமா? செம டைமிங்காகத்தான் வேலை பார்க்கிறீர்கள்’’ என்று சொல்லிச் சிரித்தவர், தொடர்ந்தார்.
‘‘டி.டி.வி.தினகரன் முகாமில் இருப்பவர்கள்கூட இப்படி ஒரு முடிவைத் துணிச்சலாக எடுப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், அ.தி.மு.க-வின் மக்களவை எம்.பி-க்கள் ஒரு மாபெரும் கலகத்தை நிகழ்த்திவிட்டனர். ‘மத்திய பி.ஜே.பி அரசை எதிர்ப்போம் என்று கொந்தளித்த அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விழிபிதுங்க வைத்துவிட்டனர்.’’

Continue reading →