ஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா?

மீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது. 

18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை


நடுத்தர வர்க்க மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ.சி இயந்திரங்கள், வாட்டர் ஹீட்டர், அயன் பாக்ஸ், வேக்குவம் கிளீனர்கள், கிரைண்டர், மிக்ஸி, ஜூஸ் பிழியும் எந்திரம், 68 செ.மீ அளவு வரையிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், வீடியோ கேம்கள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருள்கள், ஹேர் க்ளிப்கள், முகச் சவரச் சாதனங்கள் ஆகிய பொருள்களின் மீதான வரியும் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
12 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை
தரைகளில் பதிக்கப்படும் கோட்டா கற்கள் மற்றும் அதே தரம் கொண்ட உள்ளூர் கற்கள், மூங்கில் தரை விரிப் பான்கள், பித்தளை மண்ணெண்ணெய் ஸ்டவ், கையால் இயக்கப்படும் ரப்பர் ரோலர், ஜிப்புகள், நகைப்பெட்டிகள், பர்ஸ்கள் உள்ளிட்ட கைப்பைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் ஃபிரேம் செய்வதற்கான மரத்திலான சட்டங்கள், கண்ணாடிகளாலான சிலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகள், கண்ணாடிப் பாத்திரங்கள், கேக் கவர்கள், அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட இரும்புகள், அலுமினி யம் மற்றும் பித்தளைகள், காப்பர் உலோகங்கள் போன்றவற்றுக்கான வரி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
5% ஆக வரி குறைக்கப்பட்டவை
கைத்தறிகள், விவசாயத்துக்கான பாஸ்பரிக் ஆசிட் ஆகியவற்றுக்கான வரி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், எத்தனாலுக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவிகித வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.  இணையதளத்தில் படிக்கப்படும் இ-புக் வரி, 18 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. சில்லறை விற்பனையில், 1,000 ரூபாய்க்கு மிகாத விற்பனை விலைகொண்ட பின்னல் வேலைப்பாடு கொண்ட தொப்பிக்கான வரியும் 12-லிருந்து 5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
சந்தைக்கு சாதகமானது
இந்த வரி குறைப்பானது பங்குச் சந்தையில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பிரபல பங்குச் சந்தை அனலிஸ்ட்டான ரெஜி தாமஸிடம் கேட்டோம்.  “பங்குச் சந்தைக்கு இந்த வரிக் குறைப்பு நிச்சயம் பயனளிக்கக்கூடியது தான். குறிப்பாக நுகர்வோர் துறை, ஹோட்டல் துறை, டிராவல் போன்ற துறைகள் பயனடையும். இதனால் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்கள் உற்சாகமடைந்துள்ளன. அந்த நிறுவனங்களின் விற்பனை அதிகரித்து லாபம் அதிகரிக்கும் என்பதால், இது ஒரு சாதகமான அம்சம் என்றே சொல்லலாம். இந்த வரி குறைப்பு அறிவிப்பு வெளியானபின், இந்தத் துறைகளைச் சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
ஆனால், இந்த நடவடிக்கையைச் சற்று முன்ன தாகவே செய்திருக்கலாம். நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்குப் பெரும்பான்மை இருந்தாலும், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மத்தியிலும் சந்தை ஏற்றம் கண்டதற்குக் காரணம், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கைதான். சுருக்கமாக, இது சந்தைக்குச் சாதகமான நடவடிக்கை என்று சொல்லலாம்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் இன்னமும் சில வரிக் குறைப்பு இருக்க வாய்ப்புள்ளது.  பொதுவாக, நுகர்வோர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள்கூட இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து அதிருப்தி யுடன்தான் உள்ளனர். இந்த அதிருப்தியைப் போக்க பல பொருள்களுக்கான வரி குறைக்கப்பட லாம்’’ என்றார்.
ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ள பொருள் களைத் தயாரிக்கும் பங்குகளில், நல்ல பங்குகளை முதலீட்டாளர்கள் ஃபாலோ செய்யலாமே.

%d bloggers like this: