சம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்!

நல்ல வேலைதான்… கைநிறையைச் சம்பாத்தியம்தான்… இருந்து என்ன செய்ய… மாதக் கடைசியிலோ, ஆண்டு இறுதியிலோ அகப்பையில் வராத அளவுக்கு எல்லாம் நிதிநிலைமை வறண்டு போய்விடுகிறது. எப்படி என்று யோசித்துப்பார்க்கிறேன். ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படித்தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்த சம்பளதாரர்கள், சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தார்கள்.

வாழ்க்கையின் தொடக்கத்திலேயே வருவாயைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும். பணம் சம்பாதிப்பதை விட அதனை நல்ல வழிகளில் கையாளுவதன் உங்களை ஒரு தன்னிறைவு பெற்ற மனிதனாக மாற்றும்.சேமிப்பு, முதலீடுகள், பர்சனல் பைனான்ஸ் மற்றும் நிதி மேலாண்மை மூலம் உங்கள் சம்பாத்தியத்தை வசப்படுத்திக் கொள்ளலாம்.

மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்கி கொள்ளுதல்

பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டிங் துறை பிரச்சாரப் பட்ஜெட்டையும், உற்பத்தித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துக் கொள்வது போல, நீங்களும் ஒரு பட்ஜெட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதம் வருவாயில் 60 சதவீத அளவுக்கு மிகாமில் செலவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெறொரு நபரின் வரவு செலவு திட்டத்தை நகலெடுக்காமல் உங்கள் வரவு செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட் இருக்க வேண்டும். கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமான வகையில் இருக்கக் கூடாது.

நிலையான சேமிப்பில் பழக்கப்படுத்தல்

உங்கள் வரவு செலவு திட்டங்கள் பரீட்சார்த்த முறையில் பல்வேறு தவறுகளையும், சோதனைகளையும் கடந்த பின்னர்தான், நேர்த்திப் பெறும். உங்களைத் தேவையற்ற செலவுகளுக்கு இட்டுச் செல்லும் விளம்பரங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். காலப்போக்கில் செலவுகளைச் சரி செய்த பிறகு உங்கள் சேமிப்பு பட்ஜெட்டுக்குள் அடங்கும். வெளிநாட்டு சுற்றுலா, மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் ஓழுக்கங்கள் உங்கள் சேமிப்பை உயர்த்துவதால் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகன் கைவசம் இருக்கட்டும். கடன் அட்டைகள் தேவையில்லை என்பது பொதுவான கருத்து.

பணியிட மாற்றம் – நெகிழ்வான திட்டம்

உங்கள் பணியிடங்களும், நகரங்களும் அடிக்கடி மாற்றத்துக்கு உள்ளாவதாக இருந்தால், ஒரு நெகிழ்வான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். பணி வாழ்க்கை மற்றும் இலக்குகளை அடிக்கடி மாற்றும்போது வீட்டுக்கடன் போன்ற நீண்டகாலக் கடன் திட்டங்கள் தேவையில்லை. இதேபோல் இலக்குகளும், அவசரத் தேவைக்குப் பணம் தேவைப்படும் என்று கருதினால் நீண்டகாலச் சேமிப்புத் திட்டங்கள் அவசியமில்லை. உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள்.உதாரணத்துக்கு 3 வருடத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தால், 3 வருட முதலீட்டுத் திட்டத்தில் இணையலாம்.

அவசர நிதியை ஒதுக்கீடு

சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன் நிச்சயமற்ற சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். பணியை முதலில் தொடங்கும்போதோ அல்லது வருவாயில் துண்டு விழும்போதோ இந்த அவசரகால நிதி உங்களுக்கு உதவும்.

சேமிப்பை முதலீட்டில் தொடங்குதல்

பங்குச்சந்தைகள் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் ஈக்விட்டி தொடர்பான சேமிப்புத் திட்டங்கள், புராவிடண்ட் நிதி, டிவிடன் பண்டில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஒரு சிறுதொகையை ஒதுக்குங்கள். முதலீடுகள் நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும். பங்கு பரிவர்த்தனை சில நேரம் மோசமாகச் சரிவை சந்திப்பதால், இந்த அபாயத்தைத் தவிர்க்கலாம். நீங்கள் சுயதொழில் செய்வராக இருந்தால், ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்யாமல், ஹெல்த் இன்சூரன்சை எடுத்துக் கொள்ளலாம்

முறையான கடன் பராமரிப்பு

நீங்கள் சரியாகக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியிருந்தால், உங்கள் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்க முடியும். அதனால் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தும் போது உங்கள் மீதான நம்பிக்கை வங்கிகளுக்கு ஏற்படும். உங்களின் நிதி நம்பகத்தன்மையை வைத்துத்தான் நாடு உங்களை மதிப்பிடுகிறது.

%d bloggers like this: