Daily Archives: ஓகஸ்ட் 10th, 2018

இ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி!

லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம், டிராபிக் போலீஸ் அதை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுத்தி உள்ளது.
Continue reading →

கண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…?

கண்ணுக்கு கீழ் ஏற்படும் கண் கருவளையத்தால் பெரும்பாலான பெண்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் திருமணமாகாத பெண்களுக்கு கண் கருவளையம் வந்து விட்டால் மனதளவில் சோர்வடைய செய்து விடுவர். 
Continue reading →

டிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்

தமிழகத்தில் ‘ஆன்லைன்’ முறையில் பத்திரப்பதிவு நடப்பது போல திருமணம், சங்கங்கள் தொடர்பான பதிவுகளும் சோதனை ரீதியாக இன்று முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படுகின்றன.
Continue reading →

அதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா? அது குழந்தையை பாதிக்குமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் இசையை கேட்பது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு; அதற்கென இரையும் ஒலியையோ அல்லது அதிக ஒலி கொண்ட இசையையோ கேட்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை; மெல்லிய, மனதை மயக்கும்
Continue reading →

சிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்

image

அனைவருமே அறிவோம் சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுள் என்று. மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு மட்டுமே ருத்ரமூர்த்தி அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான்.

சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை. ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும். எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற பொருட்களை வைத்தே வழிபடுங்கள். இங்கே உங்களுக்கு சிவபெருமானின் அன்பை பெற்றுத்தரும் பொருட்கள் எவை என்பதை பார்க்கலாம்

சிவமந்திரம்

சிவபுராணத்தில் சிவபெருமானுக்கு அவரின் துதிபாடும் மந்திரங்கள் பிடிக்குமென கூறப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வெண்கல பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு சிவமந்திரங்களை கூறிக்கொண்டே சிவனுக்கு அபிஷேகம் செய்வது அவருடைய உக்கிரத்தை அணைப்பதோடு நம் வாழ்விலும் அமைதியை கொண்டுவரும்.

குங்குமப்பூ

குங்கமப்பூ என்பது மக்களால் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தபட்டு வருகிறது. ஆனால் அது சிவனுக்கு மிகவும் பிடித்த பொருள் என்பது பலரும் அறியாத ஒன்று. குங்குமப்பூவை கொண்டு சிவனை வழிபடுவது உங்கள் வாழ்வில் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தரும்.

சர்க்கரை

சர்க்கரை உங்களுக்கு வேண்டுமானால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தலாம். ஆனால் ஈசனுக்கோ சர்க்கரை என்றால் கொள்ளைப்பிரியம். சிவபெருமானுக்கு ருத்ர அபிஷேகம் நடக்கும்போதோ அல்லது சிவராத்திரி பூஜையின் போதோ சர்க்கரையை வைத்து வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் உள்ள வறுமை பனி போல விலகுவது நிச்சயம்.

பன்னீர்

சிவபுராணத்தின் படி ஈசனுக்கு பன்னீர் அபிஷேகம் செய்வதோ அல்லது வைத்து வழிபடுவதோ சிவபெருமானை குளிர்விக்கும் அதோடு தூய்மையையும் பரப்பும். மேலும் இவ்வாறு வழிபடுவது பக்தர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் இலட்சியத்தில் கவனம் செலுத்த உதவுவதோடு அதனை அடையவும் அருள்புரியும்.

தயிர்

தயிர் என்பது அனைத்து கடவுளுக்கும் படைக்கப்படும் ஒரு முக்கிய பொருளாகும். ஆனால் சிவபெருமானுக்கு தயிர் வைத்து வழிபடுவதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் இது உங்களுக்கு வாழ்வில் அமைதியையும், வாழ்வில் பொறுப்பையும் வழங்கும் அதுமட்டுமின்றி துரதிர்ஷ்டத்தை உங்கள் வாழ்க்கையை விட்டு துரத்தும்.

பசுநெய்

சிவபெருமானை நெய்யை வைத்து வழிபடும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிவனுக்கு சுத்தமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வைத்து மட்டுமே வழிபடவேண்டும். உங்களுக்கு ஈசனின் அருளால் வாழ்வில் வெற்றியும், வலிமையும் வேண்டுமெனில் இதனை செய்யுங்கள்.

பசுநெய்

சிவபெருமானை நெய்யை வைத்து வழிபடும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் சிவனுக்கு சுத்தமான பசும்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வைத்து மட்டுமே வழிபடவேண்டும். உங்களுக்கு ஈசனின் அருளால் வாழ்வில் வெற்றியும், வலிமையும் வேண்டுமெனில் இதனை செய்யுங்கள்.

சந்தனம்

வேதங்களின் கூற்றுப்படி சந்தனம்தான் சிவனுக்கு மிகவும் பிடித்த பொருள் இது எந்த அளவிற்கு குளிர்ச்சியாக உள்ளதோ அந்த அளவிற்கு இது ஈசனின் கோபத்தையும் தணிக்கும். எனவே சிவலிங்கத்தை சந்தனம் கொண்டு அலங்கரிப்பது சிவனின் அன்பை பெறுவதற்கான எளிய வழியாகும். இது சமூகத்தில் உங்களுக்கான பெயர் மற்றும் அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.

தேன்

இயற்கையின் மிகவும் தூய்மையான படைப்புகளில் ஒன்று தேன். எனவே இது சிவபெருமானுக்கு படைக்க ஏற்ற ஒன்றாகும். தேனை வைத்து வழிபடுவது ஒருவரின் குணத்தை நல்லதாக மாற்றுவதோடு அவர்கள் வாழ்வில் இனிமையையும் சேர்க்கும்.

வில்வ இலை

இது சிவவழிபாட்டிற்காகவே படைக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் மலர்களை காட்டிலும் இந்த இலைகளே ஈசனுக்கு மிகவும் பிடித்தது. இதனை வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் உள்ள எதிர்மறை மற்றும் தீய சக்திகளை விரட்டுவதோடு உங்கள் துன்பங்களுக்கு ஒரு முடிவை கொண்டுவரும்.