Advertisements

அதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா? அது குழந்தையை பாதிக்குமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் இசையை கேட்பது மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு; அதற்கென இரையும் ஒலியையோ அல்லது அதிக ஒலி கொண்ட இசையையோ கேட்பதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை; மெல்லிய, மனதை மயக்கும்

இசையை கேட்பது நல்லது என்றே கூறியுள்ளனர். ஏனெனில் கர்ப்பிணி தனக்கு பிடித்த மெல்லிசை பாடல்களை கேட்கும் போது, அவர் மனம் மகிழும்; இந்த மகிழ்ச்சி அலைகள் தன்னிச்சையாக குழந்தைக்கு பரவி, குழந்தையும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்.

இதுவே கர்ப்பிணிகள் அதிக ஒலி கொண்ட இசை அல்லது அதிக இரைச்சல் கொண்ட இசையை கேட்க நேர்ந்தால், கேட்டால் – அதிலும் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டால் கருவில் வளரும் குழந்தையின் எந்த அளவுக்கு கவலைக்கிடமாகும் என்று இங்கு படித்தறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கேட்கும் திறன்

தாய் கேட்கும் அதிக ஒலி கொண்ட இசை தாயின் கேட்கும் திறனை பாதிக்குமோ இல்லையோ, தவறாமல் இன்னும் முழுமையாக கூட உருவாகாத சிசுவின் கேட்கும் திறனை கொஞ்சம் கூட விட்டு வைக்காமல் காலி செய்துவிடும் தன்மை கொண்டது. கருவில் உருவாகி, பிறக்கும் குழந்தையின் செவி நலம் தாயின் செயல்பாடுகளில் அடங்கி உள்ளது; தாய் கேட்கும் மெல்லிசையால் குழந்தை அறிவாளியாக பிறப்பதும், இரைச்சல் ஏற்படுத்தும் இசையால், குழந்தையின் காது பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தை செவிடாக பிறப்பதும் தாயின் கையிலே!

எனவே, கர்ப்பிணி பெண்களே! உங்கள் குழந்தை எவ்வித நலத்துடன் பிறக்க வேண்டும் என்பதை நீங்களே நிர்ணயுங்கள்.

அதிர்ச்சி

கர்ப்பிணி பெண்கள் திடீரென இசையை சத்தமாக கேட்டாலோ, ஏர்போர்ட் போன்ற இடங்களில் ஏற்படும் திடீர் சத்தத்தை கேட்க நேர்ந்தாலோ, வீட்டிலோ வெளியிலோ எங்கும் சட்டென சத்தமான ஒலியை, இரைச்சலை கர்ப்பிணிகள் கேட்க நேர்ந்தால், கருவில் இருக்கும் கரு அதிக அதிர்ச்சியை அடையும்; இந்த அதிர்ச்சி அலைகள் மிகப்பெரிய உடல் அல்லது மன ரீதியான பாதிப்புகளை குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்கும் கர்ப்பிணிகளில், பலத்த சத்தம் கொண்ட இசையால், கருக்கலைப்பு கூட நிகழலாம்.

அழுத்தம்

பலத்த சத்தம் கொண்ட இசையை கேட்பதால், அது குழந்தை குடி கொண்டிருக்கும் கருவறையில் கோரிஸ்டோல் மற்றும் கோட்ரிகோப்பின் எனும் ஹார்மோனை வெளிப்படுத்தி தாயின் உடலில் அழுத்தமான மனநிலை கொண்ட எண்ணத்தை மற்றும் வளரும் சிசுவிலும் கூட அழுத்தமான மனநிலை கொண்ட உணர்வை ஏற்படுத்தி விடும். இந்த மனஅழுத்தம் தாயின் சந்தோஷத்தைக் குலைத்து, குழந்தையை சக்தியின்றி வளரச் செய்துவிடும். ஆகையால் கவனமாக இருங்கள் கர்ப்பிணி பெண்களே!

எடை குறைப்பு

இவ்வாறு இரைச்சல் கொண்ட இசை கேட்டு, தாய் மற்றும் சேய் கர்ப்ப காலத்தில் மனஅழுத்தத்திற்கு உள்ளானால், அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், குழந்தையின் எடையை மிகவும் குறைத்துவிடும்; இதனால், கர்ப்ப காலம் முடிந்து குழந்தை பிறக்கும் பொழுது, குழந்தை குறைவான எடை கொண்டதாக இருக்கும். மேலும் இந்த இரைச்சல் கொண்ட இசை, குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பலவித குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

குறைமாத பிறப்பு

தாயின் கருவறையில் வளரும் குழந்தை அதிகமான சத்தம் கொண்ட இசையை கேட்க நேர்ந்தால், அந்தக் கரு குறைமாத குழந்தையாக கருவறையில் முழுமையான வளர்ச்சியை அடையாமல் பிறந்துவிடும் அபாயம் உண்டு. இந்த நிகழ்வு நடக்க தாயின் உடலும் அதற்கேற்ற ஹார்மோன்களை சுரந்து ஒத்துழைத்து விடும். எனவே, கர்ப்பிணிகள் குழந்தையின் நலம் கருதி இரைச்சல் கொண்ட இசை கேட்பதை தவிர்க்க வேண்டும்; முடிந்தால் கேட்காது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மூளை வளர்ச்சி மற்றும் வடிவம்

கர்ப்பிணிகள் இரைச்சல் கொண்ட ஒலியை கேட்பது குழந்தையின் மூளை வடிவத்தையே மாற்றி அமைத்து, மூளை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது. தாய் கேட்கும் மெல்லிசை எப்படி குழந்தையின் அறிவுத்திறன் வளர உதவுகிறதோ அதேபோல் தாய் கேட்கும் இரைச்சல் இசை குழந்தையின் அறிவுத்திறனை அடிமட்டம் வரை சென்று முற்றிலுமாக அழிக்கக் கூடியதாக இருக்கிறது. கருவில் இருக்கும் பொழுது ஏற்படும் இந்த மூளையின் வடிவ மாற்றம் மற்றும் வளர்ச்சியின் தாக்கம் குழந்தையின் வாழ்நாள் முடியும் வரை மாற்ற முடியாத விஷயமாக மாறும் வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலத்தில் கான்செர்ட் போன்ற இடங்களுக்கு செல்வது, அதிகமான ஒலி எழுப்பும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.

Advertisements
%d bloggers like this: