Advertisements

வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி?!

இந்தக் காலத்து இளைஞர்களின் விருப்பமான உடைகளுள் ஒன்று, `ஜீன்ஸ்’. வெயில், மழை என எந்தக் காலத்திலும் சற்றும் யோசிக்காமல் அணிந்துகொள்ளும் உடை. தரமான ஜீன்ஸ் பிராண்டு என்றதும், உலகளவில் பெரும்பாலானவர்களின் சாய்ஸ் `லீவைஸ்’. விதவிதமான பேட்டர்ன், கச்சிதமானப் பொருத்தம், நீடித்த உழைப்பு போன்றவற்றுக்குப் பேர்போன லீவைஸ்தான் முதன்முதலில் ஜீன்ஸ் பேன்ட்டுகளைத் தயாரித்த நிறுவனம். இருபாலாருக்கும் பிடித்த இந்த `ஜீன்ஸ்’ பிறந்த வரலாறு இதோ…

லீவைஸ் ஜீன்ஸ்

`லீவைஸ்’ நிறுவனர்  லீவ் ஸ்ட்ராஸ், 1829-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி, ஜெர்மனி நாட்டில் உள்ள பவேரியாவில் பிறந்தார். சிறுவயதிலேயேLevi Strauss தந்தையை இழந்து, பிழைப்புக்காக தன் தாய், சகோதர, சகோதரிகளுடன் நியூயார்க் நகரத்தில் குடியேறினார். அங்கு கேன்வாஸ், ரெடிமேட் துணிவகைகளைக்கொண்டு வணிகம் செய்யும் தன் சகோதரர்களுடன் இணைந்து தொழிலைக் கற்றுக்கொண்டு, தானே சுயமாய் தொழில் தொடங்க முடிவுசெய்தார்.

1853-ம் ஆண்டு, கலிஃபோர்னியாவில் தங்க சுரங்க வேலைக்காக, வெவ்வேறு நாட்டிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குடிபெயர்ந்தனர். பொதுமக்கள் கூட்டம் நிறைந்த இடம் என்பதால், தனது வணிக அலுவலை விரிவுப்படுத்த நினைத்த லீவ் ஸ்ட்ராஸும் அங்கு சென்றார். ஆனால், அங்கு வியாபாரம் சரியாக அமையவில்லை. கரிகளை அள்ளிப் போடும் தொழிலாளர்களிடம், ஒரு மீட்டர் கேன்வாஸ் துணியைக்கூட அவரால் விற்க முடியவில்லை. எனவே, அவரிடம் இருந்த கேன்வாஸ் துணிகளை, ஒரு தையல்காரரிடம் கொடுத்து பத்து பேன்ட்டுகளாக மாற்றினார். இவற்றைப் பார்த்ததும், அங்கு இருந்த தொழிலாளர்கள் உடனே வாங்கி அணிந்துகொண்டனர். அங்கு இருக்கும் குப்பை மற்றும் அழுக்குகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த உடை, தொழிலாளர்களுக்கான வரப்பிரசாதமாகக் கருதினர்.

பிறகு, கேன்வாஸ் துணிக்குப் பதிலாக அடர்ந்த காட்டன் ஃபேப்ரிக்கான `டெனிம்’ துணிவகையைக்கொண்டு பேன்ட்டுகளை உருவாக்கினார் ஸ்ட்ராஸ். 19-ம் நூற்றாண்டின் மலிவான வண்ணச்சாயம் `இண்டிகோ’ நிறம் என்பதால், அதையே பயன்படுத்தினார் லீவ். அப்போதுதான் தன் நிறுவனத்தின் பெயரை `Levi Strauss & Co’ என மாற்றினார்.Levis Label

தொழிலாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், `பேன்ட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் பாக்கெட்டுகள் அடிக்கடி கிழிந்துவிடுகின்றன’ என்ற புகார் தொடர்ந்து வந்தது. இந்நிலையில்தான், 1872-ம் ஆண்டு, ஜகோப் டேவிஸ் எனும் தையல்காரரிடமிருந்து ஸ்ட்ராஸுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், `நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக, Rivets கொண்டு, தனிப்பட்ட முறையில் தன் வாடிக்கையாளர்களுக்கு பேன்ட்டுகளைத் தைத்துத் தருவதாகவும், அதற்கான காப்புரிமைப் பெறுவதற்கு சரியான தொழில்முறை பங்குதாரர் வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்டு உற்சாகமான லீவ், காப்புரிமை பெறுவதற்கான வேலைகளை உடனே Jeans with Rivetsஆரம்பித்தார். 1873-ம் ஆண்டு, மே 20-ம் தேதி, ஜாகோப் டேவிஸ் மற்றும் Levi Strauss & Co-வுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. இன்று நாம் அனைவரும் உடுத்தும் `ஜீன்ஸ்’ முழு உருவம் பெற்று பிறந்தது அந்த நொடியில்தான்.

ஆரம்பத்தில் பேன்ட் முழுவதும் ஆங்காங்கே பொருத்தப்பட்ட ரிவெட்ஸ், பின்னாளில் பாக்கெட்டுகளில் மட்டுமே பொருத்தப்பட்டது. 1896-ம் ஆண்டு இரண்டு குதிரைகள் பதிக்கப்பட்டிருக்கும் `லீவைஸ் லேபிள்’, பேன்ட்டுகளில் பொருத்தப்பட்டது. 1902-ம் ஆண்டு, லீவ் ஸ்ட்ராஸ் உயிரிழந்த பிறகு, அவரின் மருமகன்களால் லீவைஸ் நிறுவனம் நடத்தப்பட்டது.

ஆரம்பத்தில், சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமே உபயோகித்த ஜீன்ஸ் பேன்ட்டுகள், பிறகு கலிஃபோர்னியாவில் உள்ள பொதுமக்களால் அதிகம் வாங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது, ஜீன்ஸுக்கான பிரசார வேலைப்பாடுகளில் ஈடுபட்டனர் ஸ்ட்ராஸின் குடும்பத்தினர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் அதிக மக்களால் ஈர்க்கப்பட்ட உடைகளில் மிக முக்கிய உடையாக அறிவிக்கப்பட்டது ஜீன்ஸ். `வரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ என, இதற்கு மியூசியத்திலும் இடம் உண்டு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: