Advertisements

ஏற்றங்கள் தருவான் ஏழுமலையான்!

மாமலையாம் திருமலையில் – ஸ்ரீஏழுமலையான் திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம். ஆகஸ்ட் -11, சனிக்கிழமை இரவு 9 மணியளவில் அங்குரார்ப்பணமும், மறுநாள் `பாலாலய’ வைபவமும் நடைபெற, அதையடுத்து யாகசால பூஜைகளும் தொடங்குகின்றன. ஆகஸ்ட் 16-ம் தேதி காலையில், மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறவுள்ளது.

பிறவிப் புண்ணியம் தரும் இந்த அற்புதமான வைபவத்தை, முகம் மலர அகம் மகிழ தரிசிக்கக் காத்திருக் கும் இந்தத் தருணத்தில், திருமலை திருப்பதி குறித்த அபூர்வத் தகவல்களைப் படித்து மகிழ்வோமா?!

* சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால், திருப்பதி பெருமாளுக்கு ‘ஏழுமலையான்’ என்று திருப்பெயர். இந்த மலைகளில் வேங்கடாத்ரியின் மீது கோயில் கொண்டிருக்கிறார் திருவேங்கடவன்.

புராண காலத்தில் ஆகாசராஜன் என்பவரது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது திருப்பதி. அவரின் வளர்ப்பு மகள்தான்  பத்மாவதித் தாயார். ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் பிறந்தவர் என்பதால், இந்தத் திருப்பெயர்.

துவாபர யுகத்தில்  கண்ணனைப் பெற்றவள் தேவகி என்றாலும், அவர் வளர்ந்தது யசோதையிடமே. ஆனால், கண்ணனின் திருமணத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு யசோதைக்குக் கிடைக்கவில்லை. தன் மனக்குறையை கண்ணனிடம் பகிர்ந்துகொண்டாள். கலியுகத்தில் அவளது மனக்குறையைப் போக்குவதாக வாக்குத் தந்தார் கண்ணன். அதன்படி, யசோதையே வகுளாதேவியாக பிறப்பெடுக்க, அவரின் திருமகனாக வளர்ந்தார் ஸ்ரீநிவாஸப் பெருமாள்.

குளாதேவியின் புத்திரனாக வந்த பெருமாள், பத்மாவதியைக் கண்டு மையல்கொண்டு, ஆகாச ராஜனின் அனுமதியோடு அவளை மணந்தார். இந்தத் திருமணத்துக்காகவே குபேரனிடம் கடன் பெற்றார். அந்தக் கடன் இன்னமும் தீர்ந்தபாடில்லை என்கின்றன ஞானநூல்கள்.

*  த்து ஆழ்வார்களால் பாடல்பெற்ற க்ஷேத்திரம் திருப்பதி. ‘செடிகொடிகள் போல அடர்ந்திருக்கும் தீய வினைகளை அகற்றும் திருமாலே! அடியவர்களும், வானவரும், அரம்பையரும் ஏறி இறங்கும் உன் கோயிலின் வாசல் படியாகக் கிடப்பேன்’ என்று பாசுரங்களால் ஏழுமலையானைப் போற்றுகிறார் குலசேகர ஆழ்வார்.

யிரம் வருடங்களாக, திருமலையில் வைகாநஸ முறைப்படி நடைபெறும் பூஜை மற்றும் வழிபாட்டு நியதிகளை வகுத்துத் தந்தவர் ஸ்ரீராமாநுஜர்.

ழுமலையானுக்குக் கோயில் எழுப்பியது, ஆகாச ராஜனின் தம்பியான தொண்டைமான் என்கிறது தல வரலாறு. ஸ்வாமியைத் தரிசிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு கூடுவதாக ஐதீகம்.

திருப்பதி திருமலையின் மூலஸ்தானம் ஆனந்த நிலையம்; தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, காணக் கிடைக்காத பேரழகுடன் திகழ்கிறது.

திருப்பதியில் அமைந்திருக்கும் முக்கிய தீர்த்தங் கள்: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி.

* திருமலையில் ஸ்ரீஆதிவராக மூர்த்தியை தரிசித்துவிட்டே ஏழுமலையானையும் மற்ற தெய்வங்களையும் தரிசிக்கவேண்டும் என்பது ஐதீகம்.

திருமலை திருப்பதி ஆலயத்தின் வரலாற்றைக் கூறும் சுமார் 650 கல்வெட் டுகள் இருக்கின்றன. அவற்றில் தமிழ்க் கல்வெட்டுகளே அதிகம் உள்ளன.

திருமலையின்  பொற்காலம்’ என்றால் அது  விஜய நகரப் பேரரசர்களின் காலம் தான். விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் திருவேங்கடவனின் தீவிர பக்தர். அவர் வழங்கிய நகைகளும் நன்கொடைகளும் இன்றளவும் திருப்பதி யின் பெரும் சொத்தாகத் திகழ்கின்றன.

19-ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத் தில் பிரிட்டிஷாரின் நிர்வாகத்துக்கு உட்பட்டிருந்த கோயில், 1932 -ம் ஆண்டில் சென்னை  ராஜதானியின்(மதராஸ்) வசம் வந்தது. அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பின் மூலம் திருமலைக் கோயில் நிர்வகிக்கப்பட்டது.

திருவேங்கடவனின் மூல மூர்த்திக்கு வெள்ளிக்கிழமை தோறும் விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடை பெறுகிறது. இதைத் தொடங்கி வைத்தது ராமாநுஜர்.

முற்காலத்தில், எம்பெரு மானின் நித்திய அபிஷேக சேவையில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி. அவரு டைய வம்சத்தவர் கொண்டு வரும் ஆகாச கங்கை தீர்த்தத்தை பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் எடுத்து பெருமாளின் திருமுடியின் மீது பொழிவார்கள்.

புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபி ஷேகம் நடைபெறும். பின்னர் மஞ்சளினால் ஸ்வாமியின் திருமார்பில் உறைந்துள்ள மகாலட்சுமிக் கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.

தாளப்பாக்கம் அன்னமய்யா, வேங்கட வன் மீது பாடிய கீர்த்தனைகள் பெரும் புகழ் பெற்றவை. பக்தி ரசம் சொட்டும் 32,000 கீர்த்தனைகளை அவர் பாடியிருக் கிறார் அவர்.

*  இறையனுபவம் தேடி வட இந்தியா விலிருந்து வந்தவர் ஹாதிராம் பாவாஜி.  அவர், திருமலையில் இருக்கும் பெருமாளே தெய்வம் என நினைத்து இந்தத் தலத்திலேயே தங்கிவிட்டாராம். திருமலை திருப்பதி, ஒருகாலத்தில் இவருடைய ஆசிரமத்தினரின் பராமரிப் பிலேயே இருந்து வந்ததாம்.

திருப்பதி திருவேங்கடவனுக்குச் சுப்ர பாதம் இயற்றியவர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன். மணவாள மாமுனிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 73 ஸ்லோகங்களாக சுப்ரபாதத்தைப் பாடி னார்.

திருப்பதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அன்னதானத்தைத் தொடங்கி வைத்தவர் தரிகொண்ட வெங்கமாம்பா. அன்று தொடங்கிய அன்னதானம், இன்றுவரையிலும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. தினம்தோறும் சுமார் 60,000 அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

*  இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய சுப்ரபாதத்துக்கு மயங்காதவர் யார்? அதிகாலையில் இதைக் கேட்கும் போது நம்மையுமறியாமல் மனம் பெருமா ளிடம் லயித்துவிடும். சுப்ரபாதம் பாடல் அடங்கிய கேசட்டுகள், குறுந்தகடுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் அனைத்தையும் பெருமாளுக்கே காணிக்கை ஆக்கியுள்ளார் அவர். ஆந்திர அரசாங்கம் இவரது சேவையைப் பாராட்டி,  இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக திருப்பதியில் சிலை அமைத்து மரியாதை செய்திருக்கிறது.

*  திருமலையில் இருக்கும் மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு, வகுளாதேவியின் மேற்பார்வையி லேயே பெருமாளுக்கு உரிய நைவேத்தியங்கள் தயாராவதாக ஐதீகம்.

*  தினமும் அதிகாலையில் முதல் நைவேத்தியமாக மண்சட்டியில் கொண்டுவரப்படும் தயிர் சாதமே ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. இது மட்டுமே குலசேகரப்படியைத் தாண்டி சந்நிதிக்குள் செல்லும்.

*  மடைப்பள்ளியில் லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம் கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாரா கின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று, ‘திருப்பதி என்றாலே லட்டு, லட்டு என்றாலே திருப்பதி’ என்றாகி விட்டது.

*  பெருமாள் அணிந்துகொள்ளும் உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்கு உரிய ஆடையாகத் திகழ்கிறது. இந்த ஆடைக்கு ‘மேல்சாத்து வஸ்திரம்’ என்று பெயர். வெள்ளிக்கிழமை மட்டுமே இதை அணிவிப்பார்கள்.  இதன் பொருட்டு கட்டணம் செலுத்தும் பக்தர்கள், வஸ்திரம் சாத்துவதற்காக ஆண்டுக்கணக்கில்கூட காத்திருப்பது உண்டு.

* வருடத்துக்கு இருமுறை மாநில அரசாங்கத்தின் சார்பில் பெருமாளுக்கு வஸ்திரம் சாத்தப்படுகிறது.

*  திருமலையில் வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜன்மாஷ்டமி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

*  ஆண்டுதோறும் தை மாதத்தில் நிகழும் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) திருவிழா மிகவும் விசேஷமானது. அன்றைய தினம், சுவாமி அலங்கரிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் தேரில் உலா வருவார்.

*  புரட்டாசி மாதத்தில் திருமலை திருப்பதியில் நிகழும் பிரம்மோற்சவம் உலகப் பிரசித்திபெற்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இந்த விழாக்காலத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் வரை திருமலைக்கு வந்து தரிசிக்கின்றனர்.

*  திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் ஆகிறதே என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால், அப்படி நீண்ட நேரம் காத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை நாம் அறிந்துகொண்டால், நமக்கு ஆதங்கம் ஏற்படாது. தினம்தோறும் அவருக்குச் செய்யப்படும் சேவைகளால்தான் இத்தனை நேரம் ஆகிறது.

*  என்னென்ன சேவைகள் தெரியுமா? சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, கொலுவு (தர்பார்), சஹஸ்ரநாம அர்ச்சனை, நித்திய கல்யாணோற்சவம், டோலோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆர்ஜித வசந்தோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஏகாந்த சேவை.

* திருப்பதியில் நிகழும் ஏகாந்தசேவைக்குப் பிறகு எவரும் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்யமாட்டார்கள். அந்த நேரத்தில் அங்கு தேவதைகள் உலவுவதாக ஐதீகம்.
படங்கள் உதவி: ஆர்.எஸ்.பி நெட்வொர்க்

திருப்பதி சேவைகள்…

திருப்பதி வேங்கடேச பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் விசேஷமான ஒரு சேவை நடைபெறும்.  இந்தச் சேவைகளை ‘வாராந்திர சேவைகள்’ என்பார்கள். இந்தச் சேவைகளில் கலந்து கொண்டு வழிபட, ஆன்லைன் மூலமும் தேவஸ்தான அலுவலகம் மூலமும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

வாராந்திர சேவைகள்

திங்கள் – விசேஷ பூஜை

செவ்வாய் – அஷ்டதள பாதபத்மாராதனம்

புதன் – சஹஸ்ர கலசாபிஷேகம்

வியாழன் – திருப்பாவாடை – நேத்ர தரிசனம்.

வெள்ளி – அபிஷேகம், நிஜபாத தரிசனம்

வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகத்துக்குப் பிறகு, அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர், ‘நிஜபாத தரிசனம்’ தொடங்கும். அப்போது, சுவாமியின் நிஜ பாதத்தைக் கவசம் இல்லாமல் தரிசிக்கலாம். மற்ற நேரங்களில் பகவானின் திருவடிகளுக்குத் தங்கக் கவசம் வேயப் பட்டிருக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், ‘Govinda tirumala tirupati devasthanams’ எனும் மொஃபைல் ஆப் (App) ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் உதவியுடன் திருமலையில் சிறப்பு தரிசனம் செய்வதற்கான முன்பதிவை இருந்த இடத்திலிருந்தே செய்துகொள்ள முடியும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் தகவல் தொடர்பு மையமும் செயல்பட்டு வருகிறது. பக்தர்கள், தங்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் இந்த மையத்தைத் தொடர்பு கொண்டு அறியலாம். இந்த மையம் 24 மணி நேரமும் இயங்கும்.

தொடர்புக்கு: 0877- 2233333;    0877-2277777

சுவாமியை தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், திவ்ய தரிசனம் (கீழ் திருப்பதியிலிருந்து நடந்தே மலையேறிச் சென்று தரிசிப்பது), சிறப்பு தரிசனம் என மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.

கீழ்த் திருப்பதி வந்தவுடன் அங்குள்ள லாக்கர்களில் பொருள்களை வைத்துவிட்டு, அலர்மேலு மங்காபுரம் பத்மாவதி தாயாரையும் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளையும் தரிசித்துவிட்டு மலைக்குச் செல்வார்கள். மேல் திருப்பதியில், முதலில் சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி வராகரை தரிசனம் செய்ய வேண்டும். அதன்பிறகே வேங்கடவனை தரிசிக்கச் செல்வார்கள்.


மகா சம்ப்ரோக்ஷணம்!

லியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் தொடர்பான பூஜைகள் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறுகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்ப்ரோக்ஷணம் நடைபெறு கிறது. திருப்பதி கோயிலில் மூலவர் அருள்பாலிக்கும் ஆனந்த நிலையம், ஸ்ரீகருடாழ்வார் சந்நிதி, ஸ்ரீவரதராஜர் சந்நிதி, ஸ்ரீயோக நரசிம்மர் சந்நிதி மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் சந்நிதியிலும் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு ‘அங்குரார்ப்பணம்’  வைபவம் நடைபெறுகிறது. 12-ம் தேதி ‘பாலாலயம்’ நடைபெறும். அதைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை தொடங்குகிறது. யாகசாலை பூஜையின்போது, பெருமாளின் கருவறையில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் யாகசாலைக்கு எழுந்தருள்வார்கள். 13-ம் தேதி காலை மாலை இருவேளைகளிலும் யாக சாலையில் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 14 – ம் தேதி சிறப்பு பூஜைகளும், 15 – ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு `மகா சாந்தி திருமஞ்சன’மும் நடைபெறுகிறது. அன்று இரவு யாகசாலையில்  `மகா பூர்ணாஹூதி’ நடக்கிறது.

16 – ம் தேதி காலையில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: