திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 11ம் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. நேற்று முன்தினம் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 3ம் நாளான நேற்று அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. இன்று யாகசாலையில் புண்ணியாகவாச்சனம், வாஸ்து யாகம் மற்றும் சுத்தி நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு மகாசாந்தி அபிஷேகமும், இரவு பூர்ணாஹூதியும் நடைபெறும். தொடர்ந்து நாளை காலை 10.16 மணி முதல் 12 மணிக்குள் மூலவர் கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில், இன்று சுதந்திர தினம் அரசு விடுமுறை என்பதால், நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருமலையில் கூட்டம் அதிகரித்து வருகிறது. மூலவர் தரிசனம் இல்லாவிட்டாலும் கலசத்தின் மீது நடக்கும் அபிஷேகத்தை காண பக்தர்கள் வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் வரும் 2030ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்தபடி உள்ளனர்.
காணிக்கை குறைந்தது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்தை யொட்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தின் 3ம் நாளான நேற்று யாகத்தின் இடைவெளியில், 13 மணி நேரத்தில் 35 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பக்தர்கள் குறைவாக வந்ததால், எதிர்பார்த்ததை விட குறைவாக 26 ஆயிரத்து 617 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் ₹1 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்!” – அழகிரி ஆக்ஷன் ஆரம்பம்
மெரீனா கடற்கரையில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. நான் அதைக் கவனித்துவிட்டு வருகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். டி.வி-யை ஆன் செய்தால், கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த குடும்பத்துடன் அழகிரி வந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. பிரஸ்மீட்டுக்காக குவிந்திருந்த மைக்குகளில் கலைஞர் டி.வி மைக்கைப் பார்த்து, ‘‘நான் சொல்றதை இதுல போடமாட்டாங்களேய்யா’’ என்றவர், அடுத்து சன் டி.வி மைக்கை சுட்டிக் காட்டி, ‘‘இதுலயும்தான்’’ என்றார். அடுத்து அவர் சொன்ன வார்த்தைகள் தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.
அழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!
அழகிரியை தி.மு.க-வில் சேர்ப்பது தொடர்பாக குடும்பத்தினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அங்கு இருந்த மூத்த நிர்வாகிகள் ஆறுபேர், ‘அழகிரியை கட்சியில் சேர்க்கக் கூடாது’ என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கோபாலபுரத்திலும் அறிவாலயத்திலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கருணாநிதி சமாதிக்கு குடும்பத்தினருடன் வந்த அழகிரி, தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அறிவாலயம், கோபாலபுரம், சி.ஐ.டி.காலனி ஆகிய இடங்களில் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது.