Advertisements

Daily Archives: ஓகஸ்ட் 16th, 2018

ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…

குளியலே ஒரு சிகிச்சைதான் என்பதையும், குளிப்பதற்கென்று ஆயுர்வேத மருத்துவத்தில் சில முக்கியமான வழிமுறைகள் இருப்பது பற்றியும் தெரிந்து வைத்திருப்பீர்கள். இதில் ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது’’ என்கிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான பிரபு.
அப்படி என்ன முக்கிய செய்தி?!

Continue reading →

Advertisements

மன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை

மன நலன் பாதிப்பு, மன நோய் இரண்டும் ஒன்றா?
மன நலன் பாதிப்பு என்பது வேறு; மன நோய் என்பது வேறு. ஒரு சம்பவம் மறக்க முடியாததாக இருந்து, அதனால் ஏற்படும் அதிர்ச்சி, கிளர்ச்சி, சந்தோஷம், துக்கம், வெறுப்பு, ஈர்ப்பு, சகிப்பு, அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மன நலன் பாதிப்பு ஏற்படும்.
எனினும், இது தற்காலிகமானது தான். ஓரிரு நாட்களில் மறைந்து விடும். அதிகபட்சம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும். இதற்கு சிகிச்சை தேவையில்லை. மன நோய்க்கு சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண இயலும்.
மன நோய் முற்றியோருக்கு கட்டாய சிகிச்சை அளிக்கலாமா?

Continue reading →

ஆரோக்கியம் இங்கே ஆரம்பம்!

அந்த அழுக்குத் துணி
பெரும்பாலான சமையலறையில் இருக்கும் பிடிதுணி, பாத்திரங்களைப் பிடித்து அடுப்பிலிருந்து இறக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. உணவு சிந்தினால் அதைத் துடைக்க, சமையல் மேடையைச் சுத்தம் செய்ய என எல்லாவற்றுக்கும் அதைப் பயன்படுத்தும்போது, அந்த அழுக்குத் துணியில் நுண்கிருமிகள் சேர்ந்துவிடும். பின்னர் அதையே உணவுப் பாத்திரத்தை எடுப்பதற்கும் பயன்படுத்தும்போது, அந்தக் கிருமிகள் உணவில் பரவ வாய்ப்பாகிவிடும்,

Continue reading →

அந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்! – மென்ஸ்ட்ருவல் ஹைஜீன்

மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலிலிருந்து வெளியேறு வது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷயமல்ல அது’ என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
மற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸும் செய்யும்; வலிகளையும் குறைக்கும்.

Continue reading →