Daily Archives: ஓகஸ்ட் 17th, 2018

சொட்டை விழுந்த இடத்தில் முடி வளர செய்யும் முனிவர்களின் ஆயர்வேத முறைகள்…!

தலை முடி என்றாலே அனைவருக்கும் அது அழகு சேர்க்கும். ஆண்கள் என்றாலும் பெண்கள் என்றாலும் முடி மிக முக்கியமான ஒன்றாக கருதுவார்கள். இது மிகவும் இயல்பான ஒன்றே. முடி லேசாக உதிர்ந்தால் கூட பலருக்கு அது மன வருத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களை காட்டிலும் இன்றளவு ஆண்களுக்கே முடியை பற்றி
Continue reading →

கண்ணே என் கண்மணியே…

உலகைக் காணவும், ரசிக்கவும் உதவும் கண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது. கண்களில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்வது அனைவரின் முக்கிய கடமையாகவும் உள்ளது.
எனவே கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதற்கான காரணங்கள் மற்றும்  அறிகுறிகள், முதலுதவி, சிகிச்சை முறைகள் உட்பட பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் போன்றவை உங்களுக்காக இங்கே தொகுத்து தரப்படுகின்றன…

Continue reading →

பிராய்லர் பிராப்ளம்

மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவாகவும் அதேநேரத்தில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்படும் உணவாகவும் பிராய்லர் சிக்கன் இருக்கிறது. பிராய்லர் கோழிகளை உண்ணக் கூடாது என்று தொடர்ந்து மருத்துவ உலகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அப்படி என்னதான் பிராய்லர் கோழியில் பிரச்னை என்பதை சுருக்கமாகவும், அழுத்தமாகவும் இங்கே விவரிக்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான சுகுமார்.
வழக்கம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள் பழங்கள் யாரும் விரும்பி எடுத்துக் கொள்வதில்லை இதனால் நாங்கள் இதை தொடர்ந்து அறிவுறுத்தி ஆரோக்கியமன உணவுகள் எடுக்க சொல்லி அவர்களை வலியுறுத்தி வருகிறோம். தவறான உணவு பழக்கவழக்கங்களால் சாதாரண வாயு தொல்லை, அல்சர் முதல் செரிமான உறுப்புகளில் வருகிற புற்றுநோய் வரை காரணமாக இருக்கிறது. அவற்றில் பிராய்லர் கோழி உணவால் ஏற்படும் பிரச்னை முக்கியமானது.

Continue reading →

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?-எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்?

எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகள்?
ஆண் குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன விளையாட்டுகளை அறிமுகப்படுத்தலாம் என்பது பற்றிச் சொல்கிறார், சேலம் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார்.
“ஆண் குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொண்டால், அந்தந்த வயதில் அவர்களுக்கான விளையாட்டுகளை அறிமுகம் செய்வது எளிதாகும். ஒரு வயது முதல் மூன்று வயது வரை ஆண் குழந்தையின்

Continue reading →

சித்தர்கள் போற்றும் அத்ரி மலை

சித்தர்களால் பெருமை பெற்ற மேற்கு மலைத்தொடரின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த இடம்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து தென்காசி செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவிலுள்ளது ஆழ்வார்குறிச்சி. இவ்வூரில் அண்ணாசிலை அருகில் இடப் புறமாகப் பிரியும் சாலையில் சுமார் 13 கி.மீ. தூரம் பயணித்தால், கடனாநதி அணையை அடைய லாம். இங்கிருந்து சிறிது தூரத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அத்ரி தபோவனம்.

இறையருள் நிறைந்த இந்தத் தலத்துக்கு ஒரு முறை சென்று வந்தால் போதும், நமது கிரக தோஷங்கள் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பெருகும்.

மேற்குமலைத் தொடரில் மிக அற்புதமான க்ஷேத்திரங்கள் பல அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானது பொதிகை. தென்கயிலை எனப் போற்றப் படும் பொதிகையில், அகத்தியர் தங்கியிருந்து தமிழ் வளர்த்ததாகச் சொல்வார்கள். இன்றும் அவர் பொதிகையில் வசிப்பதாக நம்பிக்கை உண்டு.

அடுத்தது மகேந்திரகிரி. இந்த மலைப்பகுதியில் முருகப் பெருமான் மற்றும் ஆஞ்சநேயரின் திருப்பாதத் தடங்களை தரிசிக்க லாம். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் பக்தர்கள் மகேந்திரகிரிக்குச் சென்று வந்தார்கள். மகேந்திரகிரியில் ராக்கெட் தளம் அமைக்கப்பட்ட  பிறகு, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுவிட்டது.

 

மற்றோர் அபூர்வமான மலை சதுரகிரி. சித்தர்களால் சிறப்பு பெற்ற க்ஷேத்திரம். அருள்மிகு சந்தன மகாலிங்கம், அருள்மிகு சுந்தர மகாலிங்கம் அருளும் சதுரகிரி தரிசனம், வாழ்வில் நல் திருப்பங்களை அளிக்கவல்லது. இந்த க்ஷேத்திரங்களின் வரிசையில் வரும் மிக அற்புதமான தலம்தான் அத்ரி மலை (அத்ரி நாத்). 

இந்த தபோவனத்தில், அத்ரி மகரிஷி தன் குடும்பத்தோடு வாசம் செய்வதாக நம்பிக்கை. வடக்கேயுள்ள `கேதார்நாத்’ திருத்தலம் போன்று, தெற்கே மகிமைபெற்று திகழ்கிறது அத்ரி நாத் எனப்படும் அத்ரிமலை.

அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே இந்த பகுதியில் வாழ்ந்தவர் அத்ரி மகரிஷி. சப்த ரிஷிகளில்  முதன்மை பெற்றவ ரான அத்ரி மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால், இதை `அத்ரி மலை’ எனப் போற்றுகிறார்கள்.

இந்த மலைக்கு வந்து வழிபட் டால், அத்ரி, அகத்தியர், கோரக்கர் போன்ற தவசீலர்களின் திருவருளைப் பெறுவதுடன், சிவனாரின் அனுக்கிரகத்தையும் பரிபூரணமாகப் பெறலாம்.

அத்ரி மலையை தரிசிப்பது, கயிலை மலையை தரிசிப்பதற்கு ஒப்பானது என்று சிலிர்ப்புடன் விவரிக்கின்றன ஞானநூல்கள். தீவினைகள் நீங்கவும், வாழ்வில் வளர்ச்சி காணவும், தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகவும் இத் தலத்தை நாடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

 

இரண்டு வழிகள்

த்ரி மலை பயணத்துக்கு இரண்டு வழிகள் உண்டு. மழை இல்லாத காலத்தில் கடனா நீர்த் தேக்கம் வறண்டு கிடக்கும். அப்போது, கடனா நீர்த்தேக்க பகுதியின் உள்ளே உள்ள வழியா கச் செல்லலாம். இந்த வழியில் செல்லும் போது, பயண தூரம் சுமார் 2 கி.மீ. அளவுக்குக் குறையும்.
ஆனால் மழை பெய்து கடனா நதி நீர்த்தேக்கம் நிறைந்து விட்டால்,  கரையின் வழியே பயணித்து  கல்லாற்றை அடைந்து,  அங்கிருந்து அத்ரி மலைக்குச் செல்லவேண்டும்.

கல்லாறு, கடனா நதி இரண்டும் ஒன்றே. தன் சீடர் கோரக்கருக்காக கங்கையை இந்த மலைப்பகுதிக்கு வரைவழைத்தாராம் அத்ரி மகரிஷி. அந்த நதிக்குக் கருணை நதி என்றும் பெயர் வைத்தாராம்.   இந்தப் பெயரே பிற்காலத்தில் `கடனா நதி’ என்று மருவியதாகச் சொல்கிறார்கள்.

`கல்லாறு’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது எப்படி?

இந்த நதிக்கடியில் கிடக்கும் கற்கள் சில, சிவலிங்க ரூபத்தில் திகழ்கின்றனவாம். அன்பர்கள் பலரும் அவற்றை எடுத்துச்சென்று  ஆவுடையில் பிரதிஷ்டை செய்து, சிவலிங்கமாக வழிபடுகிறார்கள். புனிதமிகு கற்களைக் கொண்ட இந்த நதிக்கு `கல்லாறு’ எனும் பெயர் வந்தது இப்படித்தானாம்!

தெய்வ மூலிகைகள்!

Continue reading →