வழுக்கை தலையில் முடி வளர செய்யும் பூக்கள் இவைதான்..!

எல்லோருக்கும் பூக்கள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றே. பூக்களின் அழகை ரசிக்காதவர் பெரும்பாலும் யாரும் இருக்கமாட்டார்கள். அதே போன்று பூக்களின் நன்மைகளும்

அதிகம்தான். பலர் பூக்களை அழகுக்கு வீட்டில் வளர்ப்பார்கள், சிலர் தலையில் வைத்து கொள்வார்கள், சிலர் பூக்களை ரசிக்க மட்டும் செய்வார்கள். இதில் வியப்பான உண்மை என்னவென்றால் பலவித பூக்களும் பல வித தன்மைகள் கொண்டது.

அதே போல் அவற்றில் எண்ணற்ற மருத்துவ குறிப்புகளும் நிறைந்துள்ளது. இந்த கண்ணை கவரும் பூக்கள் உங்கள் தலை முடி பிரச்சினையை எவ்வாறு சரி செய்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். குறிப்பாக பெரும்பாலான ஆண்களின் முதன்மை பிரச்சினையாக உள்ள இந்த முடி உதிர்தல் மற்றும் வழுக்கை தலை பிரச்சினைக்கு பூக்கள் எவ்வாறு வழி செய்கிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்,

வழுக்கைக்கு காரணம் என்ன..?

பலரின் நீண்ட நாள் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. முடி அதிகம் உதிர்ந்து அந்த இடத்தில் முடியின் வேர்கள் வளர்ச்சியில்லாமல் இருந்தால், அது சொட்டை அல்லது வழுக்கை என கூறப்படுகிறது. முடி அதிகமாக உதிர காரணம் பல இருக்கிறது. சுற்றுசூழல் மாற்றங்கள், உணவில் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வேதி பொருட்களை தலையில் பயன்படுத்துதல், ஒழுங்காக முடியை பராமரிக்காமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லி கொண்டே போகலாம்.

செம்பருத்தி பூ..

முடி பிரச்சினையை போக்குவதில் முதல் இடத்தில் இருப்பது இந்த செம்பருத்திதான்.

முடி சார்ந்த பல வித பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இது தருகிறது. செம்பருத்தியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் முடி உதிர்வை முழுமையாக தடுக்கிறது. செம்பருத்தி பூவை 20 எடுத்து கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு, அதனை வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை சீராகும். மேலும் இது முடியின்அடி வேரை உறுதி படுத்தி முடியை மீண்டும் வளர செய்யும்.

ரோஜா பூ..

காதல் சின்னமாக விளங்கும் இந்த ரோஜாக்கள்தான் உங்கள் வழுக்கை தலைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்க போகிறது. 1 பெரிய வெங்காயம், 1 வாசனை அற்ற பன்னீர் ரோஜா, 5 மிளகு ஆகியவற்றை எடுத்து நன்கு அரைக்கவும். மிளகை மட்டும் முதல் நாள் இரவிலேயே நீரில் ஊற வைத்து கொள்ளவும். அப்போதுதான் அது நன்கு அறையும். இந்த பேஸ்டை வடிகட்டி வழுக்கை விழுந்த இடத்தில் தடவி வர வேண்டும். வெங்காயத்தில் உள்ள சல்பர் மற்றும் பிற ஊட்டசத்துக்கள் முடி உதிர்வை தடுத்து விழுந்த முடியை மறுபடியும் வளர செய்யும்.

சங்கு பூ..

நமக்கு தெரிந்த பல பூக்களில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்கு தெரியாமலேயே இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த சங்கு பூவும். தலை முடி சார்ந்த பிரச்சினைக்கு இந்த சங்கு பூ பெரிதும் பயன்படுகிறது. தலையில் ஏதேனும் அரிப்பு ஏற்பட்டு புண் வந்தால், சங்கு பூவை கசக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விரைவிலே குணமடையும்.

மஞ்சள் அரளி பூ…

பலருக்கு இது ஒரு வகையான விஷ தன்மையுள்ள செடியாகத்தான் தெரியும். ஆனால் இதன் பூக்களில் சில மருத்துவ குணங்களும் உள்ளது. சொட்டை விழுந்த தலையில் முடி வளர இந்த மஞ்சள் அரளி பூக்கள் உதவுகிறது. தலைக்கு குளிக்கும் முன், அரளி பூக்களை ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விட்டு, பிறகு வடிகட்டி தலைக்கு தேய்த்தால் வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரும். அத்துடன் பேன் தொல்லை, பொடுகு போன்றவையும் நீங்கும்.

சீமை சாமந்தி :-

பல மருத்துவ பயன்களை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறது இந்த அற்புத பூ. இதில் உள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளில் இருந்து உங்களை காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. சீமை சாமந்தியை டீ போட்டு குடித்து வந்தால் பல தலை முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும், தலையில் உள்ள அதிக பொடுகை இந்த டீ நீக்குகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

%d bloggers like this: