எத்தன முறை கழுவினாலும் முகத்துல எண்ணெய் வழியுதா? இத ட்ரை பண்ணலாமே!

உங்கள் சரும எண்ணெய் பசை அதிகமுள்ள சருமமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? எண்ணெய் பசை அதிகம் உள்ள சருமம் பொதுவாக பளபளப்பாக இருக்கும். சருமத்தில் துளைகள் காணப்படும். சுலபமாக கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படும்.

இந்த சருமத்தில் எண்ணெய் சுரப்பிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்யும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எப்போதும் எண்ணெய் வழிந்த முகத்துடன் காணப்படுவார்கள். ஆனால் இவர்களுக்கு வயது முதிர்வு மிகவும் தாமதமாக ஏற்படும் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

எண்ணெய் சருமம்

1. டால்கம் பவுடர் பயன்படுத்துவதை நீங்கள் தவிர்க்கவும். இந்த பவுடர், துளைகளில் படிந்து பருக்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

2. எண்ணெய் இல்லாத சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் தண்ணீர் அடிப்படை கொண்ட ஒப்பனை பொருட்களை பயன்படுத்தவும்.

3. ஒரு நாளைக்கு 6-8 கிளாஸ் தண்ணீர் பருகி, உங்களை நீர்ச்சத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்.

4. வேப்பிலையை 5 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். இந்த நீரைக் கொண்டு தினமும் குளிப்பதால் கட்டிகள் மற்றும் பருக்கள் உண்டாவது தடுக்கப்படும். வேப்பிலைக்கு கிருமி நாசினி தன்மை உண்டு.

5. முல்தானி மிட்டி பயன்படுத்தி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பேஸ் மாஸ்க் போடுவதால் முகத்தில் உள்ள அதிகமான எண்ணெய் வெளியற்றப்படுகிறது.

6. கனமான க்ரீம் மற்றும் மாயச்ச்சரைசெர் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

7. எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும்

ரோஸ் வாட்டர்

சிவப்பு சந்தன தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து ஒரு பேஸ் பேக் போல் முகத்தில் தடவலாம். கரும்புள்ளிகளைப் போக்க இது சிறந்த தீர்வைத் தருகிறது.

கடலைமாவு

கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவு எண்ணெய் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இது முகத்தில் உள்ள அதிக எண்ணெய்யை போக்க உதவுகிறது. கடலை மாவுடன் பன்னீர் சேர்த்து ஒரு பேஸ் பேக் போல் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு பொடி

ஆரஞ்சு தோலின் பொடி, முல்தானி மிட்டி, மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இந்த இயற்கை தீர்வை வாரத்தில் ஒரு முறை பயன்படுத்தி வருவதால் எண்ணெய் சருமம் நல்ல மாற்றத்தைப் பெறுகிறது.

சந்தனம்

பன்னீர், சந்தனத்தூள் மற்றும் முல்தானிமிட்டி ஆகியவற்றை சேர்த்து கலந்து ஒரு பேஸ் பேக் தயாரித்து முகத்தில் தடவவும். பன்னீர் முகத்தை சுத்தமாக்குகிறது. சந்தனத்திற்கு குளிர்ச்சி தன்மை உள்ளது. முல்தானி மிட்டி முகத்தில் உள்ள அழுக்கைப் போக்கி எண்ணெய்யை அகற்றுகிறது.

ஓட்ஸ்

விட்ச் ஹஸல் மற்றும் ஓட்ஸ் சம அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். எண்ணெய் சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கையான தூய்மையை வழங்குகிறது.

வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக் கரு, தேன் மற்றும் சில துளி எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். முட்டையின் வெள்ளைக் கரு முகத்தில் உள்ள துளைகளை இறுக்கமாக மாற்ற உதவுகிறது.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் விழுதுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். வெள்ளிரிக்காய் ஒரு இயற்கை டோனர். இது ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தமாக்குகிறது.

தயிர்

தயிர் ஒரு சிறந்த க்ளென்சர். தயிரை உங்கள் சருமத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சோர்வாக இருக்கும் முகத்திற்கு ஒரு வித புத்துணர்ச்சியைத் தர இதனை முயற்சிக்கலாம்.

எண்ணெய் சருமத்திற்கு இது மிகவும் ஏற்ற தீர்வாகும்.

அரிசி மாவு

அரிசி மாவுடன் சில துளிகள் ரோஸ் வாட்டரைச் சேர்த்து தயாரிக்கும் கலவை மிகச் சிறந்த ஸ்க்ரப் போல் செயல்படுகிறது. சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

%d bloggers like this: