ஆர்.கே.நகரில் 27; திருப்பரங்குன்றத்தில் 38’ – எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் கணக்கு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிறுத்தி வெற்றி வாய்ப்புகளை அலசி ஆராய்ந்துகொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள். ‘தினகரனை எதிர்த்து 38 சதவிகித வாக்குகளை அ.தி.மு.க பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திருவாரூர் நிலவரம் குறித்தும் அவர் விவாதித்துக்கொண்டிருக்கிறார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகளோ, ‘திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி’ எனக் கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கின்றன. ஒற்றைக் காரணம், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல் வெற்றி அமைய வேண்டும்’ என நினைப்பதுதான். அதற்கேற்ப, தொகுதியில் இருக்கும் சமூகரீதியான வாக்குகள், சிறுபான்மையினர் பலம், கடந்தகாலத் தேர்தல் வெற்றிகள் என அனைத்து அம்சங்களையும் எடைபோட்டு பார்த்து வருகின்றனர். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சில தகவல்களை அனுப்பியுள்ளனர் அவரின் ஆலோசகர்கள். அதில், `திருப்பரங்குன்றத்தில் உறுதியாக நாம் வெற்றி பெறுவோம். திருவாரூரில் சமூகரீதியான வேட்பாளரை நிறுத்தினால் நமக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்’ என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமியின் இடைத்தேர்தல் வியூகம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், “திருப்பரங்குன்றத்தில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும் அ.தி.மு.க வெற்றிபெறும் என்பதில் உறுதியாக இருக்கிறார் முதல்வர். ‘தினகரனை எதிர்த்து ஆர்.கே.நகரில் 27 சதவிகித வாக்கை எடுத்த நம்மால், திருப்பரங்குன்றத்தில் 38 சதவிகித வாக்குகளை எடுத்துவிட முடியும். அந்தத் தொகுதியில் 15 சதவிகித வாக்குகளைக் கூடுதலாக எடுத்துவிடலாம்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் முதல்வர். இதன் பின்னர் அவரிடம் பேசிய கட்சி நிர்வாகிகள், ‘தொகுதியில் நட்சத்திர வேட்பாளர் என யாரும் இருக்கப்போவதில்லை. கள நிலவரம் நமக்கு சாதகமாகவே இருக்கும். இதில், தினகரனைத் தள்ளிவிட்டு இருமுனைப் போட்டி நடந்தால் மட்டுமே தி.மு.க-வுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும். 

தொகுதியில் நிறைந்திருக்கும் முக்குலத்தோர் வாக்குகளைத் தினகரன் அதிகளவில் எடுத்துவிட்டால், தி.மு.க மூன்றாவது இடத்துக்குப் போகவே வாய்ப்பு அதிகம். மேலும், திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு எனக் கொஞ்சம் ஆதரவாளர்கள் இருக்கின்றனர். அவர்களும் தி.மு.க-வுக்கு இடையூறு ஏற்படுத்தவே நினைப்பார்கள். கருணாநிதி வென்ற தொகுதியாக இருப்பதால், திருவாரூரில் வெற்றி பெற முடியும் என தி.மு.க-வினர் நம்புகின்றனர். அங்கு சோழிய வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால், நமக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்’ என அவர்கள் விவரித்துள்ளனர். தொகுதி மக்களின் தேவைகள் குறித்தும் அமைச்சர்கள் விவாதித்து வருகின்றனர். இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தொகுதிக்குள் தேர்தல் பணிகளையும் முடுக்கிவிட இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார் விரிவாக. 

அதேநேரம், திருப்பரங்குன்றத்தில் இப்போதே சுவர் விளம்பரங்களை எழுதத் தொடங்கிவிட்டனர் அ.ம.மு.க-வினர். ‘உங்கள் ஓட்டு குக்கருக்கே’ என்ற வாசகத்தை மட்டும் எழுதி வருபவர்கள், வேட்பாளர் பெயருக்கென்று கொஞ்சம் இடம் விட்டு வைத்துள்ளனர். பூத் வாரியாக மக்களையும் கணக்கெடுத்து வைத்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே, மக்களை உற்சாகப்படுத்தும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள். “ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியை திருப்பரங்குன்றத்திலும் தக்க வைப்பார் தினகரன்” என நம்பிக்கையோடு பேசுகின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள். 

%d bloggers like this: