Advertisements

வென்றது எடப்பாடி வியூகம்… வீழ்ந்தது பன்னீர் திட்டம்!

ணிகள் இணையவில்லை. ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார்’ என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்து ஓர் ஆண்டை நிறைவடைந்ததையொட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்தைப் பகிர்ந்துள்ளார் கே.சி.பழனிசாமி.
அணிகள் இணைந்த பிறகு அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வத்துக்கு வீழ்ச்சியும், எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியும் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பேச்சு

உள்ளது. ஜெ. மரணத்துக்குப் பிறகு சசிகலா குடும்பத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடங்கிய தர்மயுத்தம், அவருக்குப் பரவலான ஆதரவைப் பெற்றுத்தந்தது. சசிகலா தரப்புக்கே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால், எடப்பாடி அணியியுடன் பன்னீர் செல்வம் இணைந்த பிறகு அவரது அரசியல் கிராஃப் சரிய ஆரம்பித்தது.
அ.தி.மு.க – உடைந்தபோது, சசிகலா அணி – பன்னீர் அணி என்ற இரு அணிகள் மட்டுமே களத்தில் இருந்தன. ஒரு கட்டத்தில் சசிகலா அணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி, அணியும் இல்லாமல் சின்னமும் இல்லாமல் இருந்தார். இரட்டை மின்விளக்கு சின்னத்தையும், புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரையும் கையில் வைத்திருந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். அது பன்னீருக்கு பலமாகும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால், அதைத் தனக்கு பலமாக மாற்றிக் கொண்டார் எடப்பாடி. மக்கள் செல்வாக்குடன் தர்மயுத்ததில் களம் இறங்கியவரின் நிலை, சரிவுக்கு உள்ளானது.

இணைப்பின்போது, தன் அணியைச் சேர்ந்தவர்களுக்குப் பதவிகளைப் பெற்றுத் தருவதில் கோட்டைவிட்டுவிட்டார் பன்னீர். எம்.எல்.ஏ-க்களைத் தவிர, கட்சியின் பல மட்டங் களிலும் உள்ள நிர்வாகிகள், சசிகலாவுக்கு எதிராகவும் பன்னீருக்கு ஆதரவாகவும் களத்தில் நின்றார்கள். ஆனால், பன்னீர்செல்வம் பாராமுகம் காட்டினார். அதனால், சசிகலாவின் ஆதரவுபெற்ற தினகரனிடம் பலரும் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பன்னீர் பின்னால் நின்ற சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட இப்போது அவருடன் இல்லை. அனைவருமே எடப்பாடியின் தலைமையின்கீழ் வந்துவிட்டார்கள். இப்போது, தனிமரமாக  பன்னீர் நடமாடிக் கொண்டிருக்கிறார்.
ஜெ. காலத்தில் இருமுறை முதல்வராக்கப்பட்டவர் பன்னீர். ஜெ. மறைவுக்குப் பிறகும் அவர் முதல்வராக இருந்தார். இணைப்புக்குப் பிறகு கட்சிக்கு பன்னீர், ஆட்சிக்கு பழனிசாமி என்ற நிலையை பன்னீர் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், எடப்பாடியின் வியூகமே வென்றது. பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தளகர்த்தாக் களில் ஒருவராக இருந்த கே.சி.பழனிசாமியை, பன்னீர்செல்வத்தை வைத்தே நீக்கவைத்தார் பழனிசாமி. கே.பி.முனுசாமியைத் தவிர, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறு யாருக்கும் எந்தப் பொறுப்பையும் பன்னீரால் பெற்றுத்தர முடியவில்லை. இப்போது, தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது. ஆனால், கொங்குமண்டலத்தில் தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார் பழனிசாமி.
அணிகள் இணைப்புக்கு முன்பு டெல்லியின் செல்லப்பிள்ளையாக இருந்த பன்னீரால், இவரைவிட அரசியலில் அனுபவம் குறைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைக்கூட சந்திக்க முடியாமல் அவமதிக்கப்பட்டார். அதே நேரம், பி.ஜே.பி-யுடன் இணக்கமாகி, தன் பதவியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார் பழனிசாமி.
இணைப்பு நடந்து ஓர் ஆண்டு ஆகிவிட்டதே என்று பன்னீர்செல்வத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியிடம் கேட்ட தற்கு, “பன்னீர்செல்வம் தன் சுயநலத்துக்காக பழனிசாமியுடன் இணைந்து பதவி பெற்றுக் கொண்டார். கட்சிக்குத் தலைவர் ஆகலாம் என்று அவர் நினைத்தார். ஆனால், தன்னை நம்பி வந்தவர்களையே அவரால் கைதூக்கிவிட முடியவில்லை. பிறகு எப்படி அவரால் தலைவராக முடியும். அந்த விஷயத்தில் எடப்பாடி யைப் பாராட்டலாம். இதை, அணிகள் இணைப்பு என்று சொல்லாமல், பன்னீர் இணைப்பு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என்றார்.

Advertisements
%d bloggers like this: