உங்கள் ரத்த வகை கூறும் அறியப்படாத உண்மைகள் பற்றி தெரிஞ்சிக்கணுமா..?

இந்த பூமியில் தோன்றிய பல உயிர்களிடத்திலும் பல வகையான வேறுபாடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஜீவ ராசிகளுக்குள்ளும் ஒரு மிக பெரிய பரிணாம

வளர்ச்சிக்கான சுவடுகள் இருக்கும். குறிப்பாக மனித இனத்தில் இது சற்றே அதி அற்புதமானது. மற்ற உயிர் இனத்தை காட்டிலும் மனிதனின் பரிணாம வளர்ச்சியை மனிதனால் உணர முடியும், கண்டறிய முடியும். குரங்கில் இருந்து மனிதன் தோன்ற பல கோடி ஆண்டுகள் தேவைப்பட்டது. இது உண்மையில் இயற்கையின் அறிவியல் சார்ந்த விஷயம்தான். மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பல சுவாரசிய தகவல்களை கொண்டது.

மனித உடலின் செயல்பாடு இரத்தத்தின் மூலமே நடைபெறுகிறது. ஒவ்வொரு உறுப்புகளும் பேசி கொள்ள இந்த ரத்தம்தான் பயன்படுகிறது. இந்த ரத்தத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. ஒவ்வொரு ரத்த வகைகளை பற்றிய கேள்வி பதில்களையும், அவற்றிற்கான வியப்பூட்டும் தன்மைகளையும் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

மனித ரத்தம்..!

பல வகையான மூல பொருளால் உருவானதுதான் மனித ரத்தம். இதில் வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளாட்டிலேட்ஸ் என மூன்று வகைகள் உள்ளது. வெள்ளை அணுக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை உடலில் கடத்தி செல்கிறது. பிளாட்டிலேட்ஸ் என்பவை ரத்தம் உறைவதை தடுக்கிறது. இவை மூன்றும்தான் மனித இரத்தத்தின் முக்கிய பங்கீடுகள்.

1. ரத்தத்தில் எத்தனை வகைகள் உண்டு..?

அ. 2

ஆ. 6

இ. 4

விடை :- 4

விளக்கம் :-

பொதுவாக மனித இரத்தத்தில் 4 வகையான ரத்த குரூப்புகள் உள்ளது. A, B, AB, மற்றும் O போன்றவைதான் அந்த நான்கு முதன்மையான வகை. இவற்றில் ஏதேனும் ஒரு வகை ரத்த குரூப்பை ஒருவர் கட்டாயம் கொண்டிருப்பார்கள்.

2. எந்த வகை ரத்தம் கொண்டவர்களுக்கு அதிக இதய நோய் பாதிப்புகள் இருக்காது..?

அ. O

ஆ. A

இ. B

விடை :- O குரூப்

விளக்கம் :-

ரத்த வகைகளை பொருத்தும் நோய்கள் தாக்குதல் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் O குரூப் ரத்தத்தை கொண்டிருந்தால் அவருக்கு பிற ரத்த வகைகளை காட்டிலும் இதய நோய் தாக்குதல் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

3. எதனை வைத்து ரத்த வகைகள் கணிக்கப்படுகிறது…?

அ. உடல் எடையை கொண்டு

ஆ. ஆன்டிஜென் மூலம்

இ. சிவப்பு ரத்த அணுக்களினால்

விடை :- ஆன்டிஜென் மூலம்

விளக்கம் :-

ரத்தத்தில் உள்ள சிறிய புரதமானது ஆன்டிஜென் (antigen) என அழைக்கப்படுகிறது. இதனை வைத்துதான் ரத்த வகை கணிக்க படுகிறது. அதாவது, ஒருவர் ரத்தத்தில் A ஆன்டிஜென் இருந்தால் “A” குரூப் என்றும், B ஆன்டிஜென் இருந்தால் B குரூப் என்றும், இதில் இவை இரண்டும் இருந்தால் AB குரூப் என்றும், இவற்றில் எந்தவித ஆண்டிஜென்னும் இல்லை என்றால் O குரூப் என்றும் கருதபடுகிறது.

4. எந்த வகை ரத்தத்தை யாருக்கு வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்..?

அ. O negative

ஆ. A

இ. B positive

விடை :- O negative

விளக்கம் :-

மற்ற ரத்த வகைகளை காட்டிலும் O negative ரத்த வகையினர் யாருக்கு வேண்டுமானாலும் ரத்தத்தை தானம் செய்யலாம். ஏனெனில் இந்த வகையான ரத்தத்தில் எந்தவித ஆன்டிஜெனும் இல்லாததால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த வகை ரத்தம் பிற வகை ரத்தத்தினருக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

5. எந்த வகையான ரத்தம் கொண்டவருக்கு எல்லா வகையான ரத்தமும் பொருந்தும்..?

அ. O

ஆ. AB positive

இ. B positive

விடை :- AB positive

விளக்கம் :-

பொதுவாக இந்த AB positive என்ற ரத்த வகையை “உலகளாவிய பெறுநர்கள்” என்று கூறுவார்கள். அதாவது, இந்த வகையில் எல்லா விதமான (A, B, மற்றும் Rh) ஆன்டிஜென்களும் இருப்பதால் இவை யாருடைய ரத்தத்தையும் ஏற்று கொள்ளும் தன்மை கொண்டது.

6. உலகிலே மிகவும் அரிதான ரத்த வகை எது..?

அ. O

ஆ. AB-negative

இ. A-negative

விடை :- AB-negative

விளக்கம் :-

இது சற்றே ஆச்சரியமான தகவல்தான். மற்ற ரத்த வகைகளை காட்டிலும் AB-negative ரத்த வகைதான் மிகவும் அரிதானதாம். இது 1% கீழ்த்தான் உலக அளவில் இருக்கிறதாம். எனவே நீங்கள் இந்த ரத்த வகையை சேர்ந்தவர் என்றால் கட்டாயம் கவனம் தேவை. ஏனெனில் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்தால் ரத்தம் கிடைப்பது மிகவும் கடினமானது.

7. உடலில் எவ்வளவு ரத்தம் உடல் எடையில் கொண்டது..?

அ. 20%-30%

ஆ. 3%-10%

இ. 7%-8%

விடை :- 7%-8%

விளக்கம் :-

சராசரியாக ஒருவரின் உடலில் ரத்தத்தின் எடையானது 7%-8% முதலே இருக்குமாம். ரத்தத்தில் 92% நீர் உள்ளதாம். மேலும் ரத்தத்தின் அளவு வடலில் குறைந்தால் ரத்த சோகை போன்ற நோய்கள் உடலில் ஏற்படும்.

8. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ரத்தத்தின் அளவு வேறுபடுமா..?

அ. ஆம்

ஆ. இல்லை

விடை :- ஆம்

விளக்கம் :-

எவ்வாறு உடல் அமைப்பில் சில மாற்றங்கள் ஆண் மற்றும் பெண்ணிற்கு இருக்கிறதோ, அதே போன்றுதான் இந்த ரத்த அளவிலும் இருக்கிறது. பெண்ணிற்கு 4-5 லிட்டர் ரத்தமும், ஆணிற்கு 5-6 லிட்டர் ரத்தமும் சராசரியாக அவர்களின் உடலில் இருக்குமாம். இது ஒவ்வொருவரின் உடல் பருமனை சார்ந்தது.

%d bloggers like this: