கால்களும் கண்கள்தாம் சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு!

ர்க்கரைநோய் பாதிப்புள்ளவர்கள், தங்கள் கால்களை, கண்களைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை பாதிப்பு அதிகமாகிவிட்டால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, கால் நரம்புகள் பாதிக்கப்படலாம். நரம்புகள் பாதிக்கப்பட்ட கால்களில் புண்கள் ஏற்படும். அந்தப் புண்களைக் கவனிக்காமல்விட்டால், கால்களையே எடுக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம்.

கால்கள் மற்றும் கால் விரல்களை இழந்தவர்களைப் பார்த்து `விபத்தா..?’ என்று கேட்ட காலம்போய், ‘சர்க்கரையா..?’ என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஆனாலும், சர்க்கரை நோயாளிகள் பலர் அலட்சியமாகவே இருக்கிறார்கள். காரணம், போதிய விழிப்பு உணர்வின்மை. சர்க்கரை நோயாளிகளின் கால் நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்குகிறார் சர்க்கரைநோய் நிபுணர் ராஜேந்திரன்.

கால் நரம்புகள் எப்போது பாதிக்கப்படும்?

“சர்க்கரைநோய் பாதித்து, வருடக்கணக்கில் கட்டுக்குள்வைத்திருக்காமல் போனால், அது நரம்பு மண்டலங்களை பாதிக்கும். முக்கியமாக, கால் நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும். சர்க்கரைநோயால் நரம்புகள் பாதிக்கப்படுவதை ‘டயாபடிக் நியூரோபதி’ (Diabetic Neuropathy) என்கிறோம். இதை ‘நரம்பு வலுவிழப்பு நோய்’ என்றும் கூறலாம். சர்க்கரை கட்டுக்குள் இருந்தாலும், மரபணுக்களின் காரணமாகவும் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம்.

சர்க்கரைநோயுடன் கூடுதலாகக் கீழ்க்கண்ட காரணிகளும் இருந்தால் `டயாபடிக் நியூரோபதி’ பாதிப்பு விரைவிலேயே ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 

* உடலில் கொழுப்பு அதிகமாக இருத்தல்

* உடல் பருமன்

* புகை மற்றும் மதுப்பழக்கம்

`டயாபடிக் நியூரோபதி’-யை  உறுதிப்படுத்துவது எப்படி?

 

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். பாதிப்பு உள்ளவர்களின் காலில் முக்கிய நரம்புகளிருக்கும் இடத்தில் ஒரு மெல்லிய காட்டன் துணியைவைத்து, அந்த இடத்தில் உணர்ச்சி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இந்தச் சோதனைக்கு ‘பயோதெசியோமெட்ரி’ (Biothesiometry) என்று பெயர்.

வராமல் தடுக்க முடியுமா?

சர்க்கரையில் `டைப் 1’, `டைப் 2’ என இரண்டு வகை பாதிப்புகள் இருக்கின்றன. `டைப் 1’ சர்க்கரை பாதிப்பு கண்டறியப்பட்டு ஐந்து வருடங்கள் ஆனதும் தொடர்ச்சியாக முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
`டைப் 2’ சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் அது  கண்டறியப்பட்ட நாளிலிருந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வப்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியும்.

கவனம்!

சர்க்கரை நோயாளிகளுக்குப் புண்கள் ஏற்பட்டால், சாதாரணப் புண்ணாக, கொப்புளமாகத்தான் வெளியே தெரியும். ஆனால் உள்ளுக்குள் சீழ்ப்பிடித்து, கால் முழுவதும் பரவியிருக்கும். இதனால் அறுவை சிகிச்சை செய்து கால்களை அகற்றவேண்டிய நிலை ஏற்படும். எனவே, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


ருவருக்கு `டயாபடிக் நியூரோபதி’ ஏற்பட்டிருப்பதை, கால்களில் ஏற்படும் கீழ்க்கண்ட பாதிப்புகளின் மூலம் அறியலாம்.

* கால்களில் எரிச்சல் (Burning)

* கூச்சம் (Tingling)

* ஊசியால் குத்துவது போன்ற உணர்வு

* கால்கள் துடித்தல், பிசைவது போன்ற உணர்வு (Throbbing)

* கால்கள் மரத்துப் போதல்


கால்களைப் பராமரிப்பது எப்படி?

* காலில் செருப்பு இல்லாமல் நடக்கக் கூடாது. வீட்டில் பூஜையறையைத் தவிர மற்ற இடங்களில் கண்டிப்பாகச் செருப்பு அணிய வேண்டும்.

* செருப்பு அணிவதற்கு முன்னர் அதில் முள், ஆணி எதுவும் குத்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

* புதிய செருப்புகள் கால்களைக் கடிக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னர் எண்ணெய் தடவுவது நல்லது.

* காலில் சிறு புண்கள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை எடுக்க வேண்டும்.

* கால் நகங்களை வெட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.

* கால்களில் உள்ள சருமத்தை பிளேடால் வெட்டுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது.

* கால்களை வறட்சியாக வைத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன் மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

* குளிக்கும்போது, கால்களில் புண்கள், காயங்கள், கொப்பளங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைத் தினமும் கண்காணிக்க வேண்டும். கால்களில் ஏதேனும் மாற்றங்கள், புண்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகிச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* புண்கள் குணமாகத் தகுந்த மருந்துகளையும் சர்க்கரையைக் கட்டுக்குள்வைத்திருக்கும் ஆலோசனைகளையும் மருத்துவர்கள் வழங்குவார்கள். அவற்றைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். இவற்றில் உடலில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது மிக மிக அவசியம்.

%d bloggers like this: