கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது சீடை. எவ்வளவு திண்பண்டங்கள் இருந்தாலும் கண்கள் சீடையையே தேடும். அப்படிப்பட்ட சீடையை வெடிக்காமல் எப்படி செய்வது?
சீடை செய்முறை :
அரிசி மாவு – 6 பங்கு (6 : 1)
உளுந்து மாவு – 1 பங்கு (வறுத்து பொடித்தது)
எள்ளு – 1 டி ஸ்பூன்
உப்பு – ருசிகேற்ப
வெண்ணை – 50 grams.
கடலை பருப்பு – 2 டி ஸ்பூன் (ஊறவைத்தது)
எண்ணை – பொரிப்பதற்கு (சுமார் 1/2 Kg to 3/4 Kg.)
பெருங்காயம் – 1 டி ஸ்பூன்
செய்முறை :
– அரிசி மாவை வெறும் வாணலியில் 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
– அதனுடன் உளுந்து மாவு, கடலை பருப்பு, உப்பு, எள்ளு, வெண்ணை, பெருங்காயம், போட்டு நன்றாக கலக்கவும்.
– பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிசையவும். மிகவும் தளர பிசைய வேண்டாம்.
– ஒரு துணியிலோ, அல்லது நியூஸ் பேப்பரிலோ சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போடவும்.
– உருண்டைகள் உலர்ந்தவுடன், அடுப்பில் எண்ணையை காய வைத்து எண்ணை கொள்ளும் அளவிற்கு சீடையை போட்டு நிதானமான தீயில் வேக வைத்து எடுக்கவும்.
– வெந்த சீடை மிதந்து மேல வரும்.
வெடிக்காமல் சீடை பொரிப்பது எப்படி:
அரிசி மாவு வீட்டிலேயே தயாரித்துக் கொள்வது அவசியம். கடையில் கிடைக்கும் அரிசி மாவில் கண்ணுக்கு தெரியாத சிறிய கல் இருந்தாலும், சீடை வெடித்து எண்ணை மேலே தெரிக்கும்.
உளுந்து ஒரே சீராக வறுத்து மாவாக அரைத்துக் கொள்வது அவசியம்.
எண்ணை அதிக சூடாக இல்லாமல் இருப்பது நல்லது. அவ்வாறு இருந்தால் அனைத்து சீடைகளும் வெடிக்கும், அல்லது உள்ளே வேகாமல் வெளியே கருகி இருக்கும்.
சீடையை உருட்டும்போது அதிகம் அழுத்தாமல், கையில் எண்ணை அல்லது நெய் தேய்த்து லேசாக உருட்டவும். அப்படி உருட்டினால் விரிசல் விடாது. இதனால் பொரிக்கும்போது வெடிக்கவும் வெடிக்காது.
இவை அனைத்தையும் மீறி உங்களுக்கு பயமாக இருந்தால், உருட்டிய மாவு எண்ணை உள்ளே போட்டவும், இட்டி மூடியை பாதி மூடி வைத்து பொரிக்கவும்.